மாண­வியி­ன் தற்­கொ­லை சம்­பவம் உணர்த்­து­வது என்­ன?

0 215

தனியார் வகுப்புக்கு செல்வதற்கு வீட்டில் பணம் கேட்டு அது கிடைக்காத நிலையில் மனவிரக்­தி­யுற்ற மாணவி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. க.பொ.த. சாதா­ரண தரத்தில் கல்வி பயின்ற இந்த மாண­வி கணித பாட தனியார் வகுப்புக்கு செல்வதற்காக 150 ரூபா தேவை என தாயாரிடம் பணம் கேட்டிருக்கிறார். தாயார் இதனை தந்தையிடம் கூற தந்தையோ பணம் தர முடியாது என மறுத்திருக்கிறார். இதன் காரணமாக தாய்க்கும் தந்தைக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு தந்தை வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இந்த சம்­ப­வங்­க­ளால் மன விரக்­தி­யுற்ற நிலை­யி­லேயே குறித்­த மாணவி தனது உயிரை மாய்க்கும் முடிவை எடுத்திருக்கிறார்.

இன்று நாட்டில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்து ஆடுகின்ற நிலையில் குடும்பத் தலை­வர்கள் தமது செலவுகளை சமாளிக்க முடியாது திணறிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக உணவு, மின்­சாரம், குடிநீர் ஆகிய அடிப்­ப­டைத் தேவை­களைக் கூட தமது வரு­மானத்­தினுள் சமா­ளிக்க முடி­யா­த­ளவு வாழ்க்கைச் செலவு விண்ணைத் தொட்­டுள்­ளது. இதற்­கப்­பால் பிள்ளைகளின் கல்வி மற்றும் போக்­கு­வ­ரத்­திற்­கா­ன செலவுகள் கணிச­மாக அதிகரித்திருக்கின்றன. இப் பின்னணியில் தான் பது­ளையில் இந்த சம்­ப­வமும் நடந்­தே­றி­யி­ருக்­கி­ற­து.

இது ஒரு குடும்­பத்தின் நிலை மாத்­தி­ர­மல்ல. இந்த மாணவி எடுத்த முடி­வினால் இந்த விவ­காரம் ஊட­கங்­களின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. வெளியில் வராத ஆயிரக் கணக்­கான இவ்­வா­றான சோகக் கதை­கள் ஒவ்­வொரு குடும்­பங்கள் மத்­தி­யிலும் உள்­ளன. பிள்­ளைகள் மாத்­தி­ர­மன்றி பெற்­­றோரும் விரக்­தி­யின் உச்­சத்தில் உள்­ள­னர்.

இன்னும் சில வாரங்­களில் 2024 இற்­கா­ன புதிய பாட­சாலை தவ­ணை ஆரம்­ப­மா­க­வி­ருக்­கின்ற நிலையில் பெற்றோர் பிள்­ளை­க­ளுக்கு புதிய அப்­பி­யாசக் கொப்­பிகள், காகி­தா­தி­களை வாங்கிக் கொடுக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். இதற்­காக மேல­தி­­­க­மாக பல ஆயிரம் ரூபாய்கள் தேவைப்­ப­டு­கின்­றன. ஒரு வீட்­டில் ஒன்­றுக்கு மேற்­பட்ட பிள்­ளைகள் கல்வி கற்­பார்­க­ளா­யின் அது பெற்­றோ­ருக்கு சுமக்க முடி­யாத சுமை­யாக மாறி­­­வி­டு­கி­ற­­து.

பது­ளையில் நடந்த சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்த மாண­வி எடுத்த முடிவு மிகத் தவ­றா­ன­­தாகும். இஸ்லாம் தற்­கொ­லையை அங்­கீ­க­ரிக்­க­வில்லை. இச் சம்­ப­வத்தை வைத்து அம் மாண­வியின் பெற்­றோ­ரையோ குடும்­பத்­தையோ விமர்­சிப்­பதை விட நம்மைச் சூழ நடக்கும் கள யதார்த்­தங்­களை இச் சம்­ப­வத்தின் ஊடாக புரிந்து கொண்டு அதற்­கான தீர்­வு­களைத் தேடு­வதே புத்­தி­சா­லித்­த­ன­மா­­ன­தா­கும்.

இவ்­வாறு தேவை­யு­டைய குடும்­­பங்­க­ளை இனங்­கண்டு உதவி செய்­வ­தற்­காக பள்­ளி­வா­சல்­களை மையப்­ப­டுத்­திய பொறி­மு­றைகள் அவ­சி­யப்­ப­டு­கின்­ற­ன. ஒவ்­வொரு பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளும் தத்­த­ம­து பகு­திக்­குட்­பட்ட குடும்­பங்­களின் உண்­மை­யான நிலை­வ­ரங்­களை சரி­வரத் தெரிந்து வைத்­தி­ருந்தால் அவர்­க­ளுக்குத் தேவை­யான சந்­தர்ப்­பங்­களில் கை கொடுத்து உத­வினால் அல்­லது நெருக்­க­­டிகள் ஏற்­­பட்டால் உதவி செய்ய பள்­ளி­­வாசல் இருக்­கி­றது என்ற நம்­பிக்­­கை­யை­யா­வது ஏற்­ப­டுத்­தினால் அதுவே மிகப் பெரிய வெற்­றி­யாகும். அந்­த வகையில் வறுமை என்ற ஒரே கார­ணத்­தி­ற்­காக கல்­வியைக் கைவி­டவோ அல்­ல­து பட்­டினிச் சாவுக்குச் செல்­லவோ இட­ம­ளிக்க முடி­யாது.
பள்­ளி­வா­சல்­களும் சமூக நிறு­வ­னங்­களும் இது விட­யத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்­டிய கால­கட்­டம் வந்­துள்­ளது. ஒவ்­­வொரு நிறு­வ­னமும் வறுமை ஒழிப்புத் திட்­டங்­களை நடை­மு­றைப்­ழு­டுத்த வேண்­டி­யு­ள்­ளது. எனினும் தமது மஹல்­லாக்­களில் உண்­ணவே வழி­யற்ற நிலையில் மக்கள் இரு­க்­கத்­தக்­க­தாக ரம­ழா­னை வர­வேற்­­க­வென பெயின்ட் பூசவும் அலங்­­கா­ரங்கள் செய்­யவும் பள்­ளி­வா­சல்­ நிர்­வா­கங்கள் தயா­­ராகிக் கொண்­டி­ருக்­கின்­றன. இதுவே நமது சமூ­கத்தின் துர­திஷ்­ட­மா­கும்.

என­வேதான் பள்­ளி­வா­சல்­களும் முஸ்லிம் நிறு­வ­னங்­களும் இந்த விட­யத்தில் தீவிர கரிசனை செலுத்த முன்­வ­ர­வேண்­டும். தத்­த­மது சக்­திக்­குட்­பட்ட வகையில் மக்­களின் துயர் துடைக்­க செயற்­திட்டங்­களை வகுத்து செயற்­பட வேண்டும். அதற்­கான பலத்தை இறைவன் அனை­வ­ருக்கும் வழங்க வேண்­டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.