ஹூதிகள் மீதான தாக்குதல்களானது பிராந்தியத்தில் ஆபத்தை அதிகரிக்கும்

இராஜதந்திர நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்துகிறார் கட்டார் பிரதமர்

0 67

எம்.ஐ.அப்துல் நஸார்

யேமனின் ஹூதி­க­ளுக்கு எதி­ரான அமெ­ரிக்க மற்றும் பிரித்­தா­னிய இரா­ணுவத் தாக்­கு­தல்கள் செங்­க­டலில் வர்த்­தக கப்பல் பாதை­க­ளுக்கு மட்­டு­மல்­லாது பிராந்­திய அமை­திக்கும் ஆபத்தை ஏற்­ப­டுத்தும் என கட்டார் பிர­தமர் ஷேக் முக­மது பின் அப்­தெல்­ரஹ்மான் அல்-­தானி தெரி­வித்தார்.

டாவோஸில் நடை­பெற்ற உலகப் பொரு­ளா­தார மன்­றத்தின் மாநாட்டில் உரை­யாற்­றும்­போது பேசிய அல்-­தானி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், அதி­க­ரித்­து­வரும் பிராந்­திய மோதல்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு இரா­ணுவத் தீர்­மா­னங்­களை விட இரா­ஜ­தந்­திர முயற்­சி­களே அவ­சியம் என அவர் வலி­யு­றுத்­தினார். செங்­க­டலில் மோதல்­களின் அதி­க­ரிப்பு சர்­வ­தேச வர்த்­த­கத்தை பாதிக்கும் என்­பதால் இது ‘மிகவும் ஆபத்­தா­னது’ .

கடந்த வாரம் வியா­ழக்­கி­ழ­மை­யன்று, செங்­க­டலில் வர்த்­தகக் கப்­பல்கள் மீதான அண்­மைய தாக்­கு­தல்­க­ளுக்குப் பதி­லடி கொடுக்கும் வகையில், யேமனில் ஹூதி­களின் கட்­டுப்­பாட்டில் உள்ள பகு­தி­களில் ஈரான் ஆத­ரவு போரா­ளி­க­ளுக்கு எதி­ராக அமெ­ரிக்­காவும் பிரித்­தா­னி­யாவும் தாக்­கு­தல்­களை நடத்­தின.

செங்­க­டலில் அமெ­ரிக்க நாச­காரக் கப்­பலை நோக்கி கப்பல் எதிர்ப்பு ஏவு­க­ணையை ஏவி ஒரு நாள் முழு­மை­யாக முடி­வ­டை­வ­தற்கு முன்­ன­தாக, கடந்த திங்­க­ளன்று யேமன் கடற்­ப­ரப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு­க­ணை­களை ஏற்­றிய அமெ­ரிக்­கா­விற்கு சொந்­த­மான கொள்­கலன் கப்­பலை தாக்­கி­யதன் மூலம் ஹூதிகள் பதி­லடி கொடுத்­தனர்.

கட்­டாரின் வெளி­நாட்­ட­லு­வ­ல்கள் அமைச்­ச­ரா­கவும் பணி­யாற்றும் அல்-­தானி, ஏனைய பிரச்­சி­னை­க­ளுக்கும் தோல்வி­க­ளுக்கும் அடிப்­ப­டை­யாகக் காணப்­படும் காஸா பிரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையும் வலி­யு­றுத்­தினார்,

‘நாங்கள் அறி­கு­றி­களில் மட்­டுமே கவனம் செலுத்­து­கிறோம், உண்­மை­யான பிரச்­சி­னைக்கு சிகிச்­சை­ய­ளிக்­க­வில்லை (தீர்­வுகள்) அவ்­வா­றாயின் அத்­த­கைய தீர்­வுகள் தற்­கா­லி­க­மா­ன­தா­கவே இருக்கும்.’

காஸாவில் மோதல்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது ஏனைய பிரச்­சி­னை­களின் அதி­க­ரிப்ை­ப கட்­டுப்­ப­டுத்தும் என கட்டார் நம்­பு­கி­றது. தற்­போ­தைய பிராந்­திய நிலைமை எல்லா இடங்­க­ளிலும் மோதல்­நிலை அதி­க­ரிப்­ப­தற்­கான கார­ணி­யாக உள்­ளது.

பாலஸ்­தீனில் ராஜ­தந்­திர மற்றும் இரு நாடு­கள் என்ற தீர்வு மட்­டுமே முன்­னோக்கி செல்லும் ஒரே வழி. பல ஆண்­டு­க­ளாக இஸ்­ரே­லிய படை அமை­திக்­கான பாதையை நெருங்­க­வில்லை.

இரு நாடுகள் என்ற தீர்­வுக்­காக காலக்­கெ­டு­வொன்­றி­னையும், மீண்டும் பழைய நிலைக்குச் செல்­லாத மற்றும் கட்­டா­ய­மான ஒரு நிலைக்கு இஸ்ரேல் உடன்­பட வேண்டும். இந்த நிலைப்­பா­டுதான் இஸ்ரேல் மற்றும் பாலஸ்­தீனப் பகு­தி­களில் எதிர்­கால ஸ்திரத்­தன்­மைக்கு முக்­கி­ய­மாகும்.

‘பாலஸ்­தீனப் பிரச்­சி­னையை மூடி மறைத்து விடலாம் என நினைத்த சில அர­சி­யல்­வா­திகள் உள்­ளனர், ஆனால் ஒக்­டோபர் 7ஆம் திக­திக்குப் பின்னர் என்ன நடந்­தது, பாலஸ்­தீனப் பிரச்­சினை என்­பது பிராந்­தி­யத்­திற்கு மாத்­தி­ர­மல்ல, முழு உல­கத்­திற்கும் ஒரு மையப் பிரச்­சி­னை­யாகும் என்­பதைக் காட்­டு­கி­றது.
இஸ்­ரேலில் ஆட்­சிக்கு வரும் எந்­த­வொரு கட்­சியும் தீர்­வினை அடை­வது என்­பதை உறு­தி­யான நிலைப்­பா­டாகக் கொண்­டி­ருப்பதே எமக்குத் தேவை.
காஸாவை நிரு­வ­கிக்கும் ஹமாஸ் இயக்கம் எதிர்­கா­லத்தில் அர­சியல் வகி­பா­கத்தை தொடர வேண்­டுமா இல்­லையா என்­பதை பாலஸ்­தீன மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்­தீ­னத்தில் ஒரு சாத்­தி­ய­மான, நிலை­யான இரு நாடு தீர்வு இல்­லாமல், சர்­வ­தேச சமூகம் காஸாவின் மறு­சீ­ர­மைப்­புக்கு நிதி­ய­ளிக்க விரும்­பாது.

லெபனான், சிரியா, ஈராக் மற்றும் யேமன் ஆகிய நாடு­களில் ஈரா­னுடன் இணைந்த குழுக்கள் தாக்­கு­தல்­களை நடத்தி வரும் நிலையில் ஒக்­டோபர் 7ஆம் திகதி இஸ்­ரே­லுக்கும் ஹமா­ஸுக்கும் இடையே போர் ஆரம்­ப­மா­ன­தில் இருந்து மத்­திய கிழக்கின் ஏனைய பகு­தி­க­ளுக்கும் மோதல் பர­வி­யுள்­ளது.
அமெ­ரிக்க மற்றும் பிரித்­தா­னிய பதில் தாக்­கு­தல்கள் மத்­திய கிழக்­கிலும் பிரித்­தானி­யா­விலும் விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது, பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஏன் முன்னரேயே பாராளுமன்றத்தை கூட்டவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், ஹூதிகள் கப்பல்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தெரிவித்து வரும் நிலையில் தமது தாக்குதல்கள் ‘வெற்றிகரமானவை’ என தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.