உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தொடர்பில்லை

அருட்தந்தை நத்தன தெரிவிப்பு

0 77

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­லுடன், சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும், அவ­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்­ள வழக்கின் தீர்ப்­புக்­காக காத்­தி­ருப்­ப­தா­கவும் அருட்­தந்தை நந்­தன மன­துங்க தெரி­வித்தார்.

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ரான வழக்கு நேற்று முன் தினம் (16) விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட பின்னர், நீதி­மன்­றுக்கு வெளியே செய்­தி­யா­ளர்­க­ளிடம் அவர் இதனை தெரி­வித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் தொடர்பில் பல்­வேறு உண்­மைகள் தற்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கும் இந்த தாக்­கு­தல்­க­ளுக்கும் எந்த சம்­பந்­தமும் இல்லை. அத­னா­லேயே நாம் இன்று அவ­ருக்கு ஆத­ரவு தெரி­விக்க நீதி­மன்­றுக்கு வந்தோம். ஹிஜாஸை போன்றே இந்த தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பில்­லாத மேலும் பலரும் பல்­வேறு தேவை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்­டனர். இப்­போது உண்மைச்சூத்­தி­ர­தா­ரிகள் தொடர்பில் பல்­வேறு தக­வல்கள் வெளிப்­ப‌­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஹிஜாஸுக்கு எதிரான வழக்கின் தீர்ப்புக்காக நாம் காத்திருக்கின்றோம் என்­றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.