மாவத்­த­க­ம வாள்­வெட்டுச் சம்­ப­வம் பதற்றம் தணிந்­த­து ; எழு­வ­­ருக்கு விளக்­க­ம­றி­யல்

0 122

ஏ.ஆர்.ஏ. பரீல்

மாவத்தகம மாஸ்வெவயில் அண்­மையில் இரு இனக் குழுக்­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் வாள்­வெட்­டுக்கு இலக்­காகி பலி­யா­ன­தை­ய­டுத்து அங்கு நில­விய பதற்ற நிலைமை தற்­போது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

சம்­பவம் இடம்­பெற்­ற­தை­ய­டுத்து சந்­தே­கத்தின் பேரில் ஒன்­பது பேர் மாவத்­த­கம பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு அவர்­களில் 73 வயது முதி­யவர் ஒரு­வரும் மாற்­றுத்­தி­ற­னாளி ஒரு­வரும் விடு­விக்­கப்­பட்­டனர்.

ஏழு பேர் வாரி­ய­பொல விளக்­க­ம­றியல் சிறைச்­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். இரு இனக் குழுக்­களைச் சேர்ந்­த­வர்கள் இதில் உள்­ள­டங்­கு­கின்­றனர். இவர்­களில் மூவர் 14, 17, 19 வய­து­டை­ய­வர்­க­ளாவர். சந்­தேக நபர்­களில் பெண் ஒரு­வரும் உள்­ள­டங்­கி­யுள்ளார்.

சம்­பவம் இடம்­பெற்­ற­தை­ய­டுத்து அங்கு அது இனக் கல­வ­ர­மாக மாற்­ற­ம­டை­யாது தடுப்­ப­தற்கு மாவத்­த­கம பொலி­ஸார உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர். 3 தினங்கள் சுமார் 500 பொலி­ஸாரும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர். தொடர்ந்து 7 தினங்கள் பள்­ளி­வாசல் மற்றும் ஊரின் பிர­தான 5 இடங்­களில் பொலிஸார் பாது­காப்புக் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

குறிப்­பிட்ட மோதல் வாள்­வெட்டுச் சம்­பவம் மாஸ்­வெவ பள்­ளி­வா­ச­லுக்­க­ருகில் மைதா­னத்தில் கடந்த 11 ஆம் திகதி இரவு 9.45 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ளது.
இச்­சம்­பவம் தொடர்பில் விடி­வெள்ளி சம்­பவம் இடம்­பெற்ற பிர­தே­சத்தில் மாஸ்­வெவ பள்­ளி­வா­சலின் உப­த­லைவர் எம்.எஸ்.எம். அக்­ரமைத் தொடர்பு கொண்டு வின­வி­யது. அவர் விளக்­க­ம­ளிக்­கையில்,

இப்­ப­கு­தியில் நாங்கள் பெரும்­பான்மை சமூ­கத்­துடன் ஒற்­று­மை­யாக நல்­லி­ணக்­கத்­து­டனே வாழ்ந்து வரு­கிறோம். நீண்­ட­கா­ல­மாக இருந்து வந்த சிறிய பிரச்­சி­னை­யொன்று அண்­மையில் கிரிக்கெட் போட்­டி­யொன்றில் பூதா­க­ர­மா­கி­யுள்­ளது. இச்­சம்­ப­வத்தில் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த 22 வய­தான இளைஞர் ஒருவர் பலி­யா­கி­யுள்ளார்.

இப்­ப­கு­தியில் வாழ்­ப­வர்கள் கல்வி அறிவில் குறைந்­த­வர்கள். இவர்­களைப் பயன்­ப­டுத்தி சிலர் அர­சியல் செய்­வ­தற்கும் இன மோதல்­களை உரு­வாக்­கவும் முயற்­சித்­தார்கள். அந்த முயற்­சி­களை நாம் முறி­ய­டித்து விட்டோம்.
இன்றும் நாம் பெரும்­பான்மை இனத்­துடன் ஒற்­று­மை­யா­கவே இருக்­கிறோம். பலி­யா­ன­வரின் 7ஆவது தின சமய ஏற்­பா­டு­க­ளுக்கு நாங்கள் உதவி செய்தோம். தேவை­யான பொருட்­களை வாங்கிக் கொடுத்தோம். இப்­போது எந்தப் பிரச்­சி­னை­யு­மில்லை. போதைப்­பொருள் விற்­பனை, பாவ­னையே இங்கு மக்­களை பாதிப்­புக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.

கடந்த திங்­கட்­கி­ழமை மாவத்­த­கம பொலிஸார் இரு இனத்­த­வ­ரையும் அழைத்து கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை முன்­னெ­டுத்து இரு தரப்­பி­னரும் ஒற்­று­மை­யாக, சமா­தா­ன­மாக வாழ வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­னார்கள். இக்­க­லந்­து­ரை­யா­டலில் மாஸ்­வெவ பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் கலந்­து­கொண்­டது.

மாஸ்­வெவ மற்றும் எனே­பொல ஆகிய கிரா­மங்கள் இரண்டும் ஒன்­றி­ணைந்­த­தாக உள்­ளன. மாஸ்­வெ­வயில் 270 குடும்­பங்கள் வாழ்­கின்­றன. இவற்றில் 156 முஸ்லிம் குடும்­பங்கள், எனே­பொ­லயில் 256 குடும்­பங்கள். இங்கு வாழும் அனை­வரும் பெரும்­பான்மை இனத்­த­வர்கள்.

எனக்கு இப்­போது 44 வய­தா­கி­றது. இந்தக் காலத்தில் இவ்­வா­றான ான பிரச்சினை ஏற்பட்டது. இதுவே முதற் தடவையாகும். நாம் வரலாற்று ரீதியாக ஒற்றுமையாகவே வாழ்கிறோம். பெரும்பான்மையினர் எங்கள் ஜனாஸா வீடுகளுக்கு வந்து செல்வார்கள். அதுபோல் நாம் அவர்களது மரண வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வசத்த கித்சிறியின் மேற்பார்வையின் கீழ் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.