ஞான­சார தேரர் தலை­மை­யி­லான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் அறிக்­கையை வழங்­கி­ய­து ஜனா­தி­ப­தி செய­ல­கம்

0 120

ஏ.ஆர்.ஏ.பரீல்

முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் எண்­ணக்­க­ரு­வுக்கு அமை­வாக பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஜனா­தி­ப­தியின் செய­ல­ணி­யி­னது இறுதி அறிக்கை ‘விடி­வெள்ளி’ பத்­தி­ரி­கைக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளது.

குறித்த அறிக்­கையை ஜனா­தி­பதி செய­லகம் இது­வரை வெளிப்­ப­டுத்­தாத நிலையில் கடந்த 2022 செப்­டம்பர் மாதம் தகவல் அறியும் சட்டம் ஊடாக விடி­வெள்ளி இவ் அறிக்­கையின் பிர­தியைத் தரு­மாறு ஜனா­தி­பதி செய­ல­கத்­திடம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தது. எனினும் தேசிய பாது­காப்பை கருத்திற் கொண்டு இதனை வழங்க முடி­யாது என ஜனா­தி­பதி செய­லகம் பதில் வழங்­கி­யி­ருந்­தது.
இந்த பதிலில் திருப்­தி­யு­றாத விடி­வெள்ளி இது தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்­கு­ழு­விடம் மேன்­மு­றை­யீடு செய்­தது. இம் மேன்­மு­றை­யீடு தொடர்­பான அமர்­வுகள் கடந்த ஒரு வரு­டத்­திற்கும் மேலாக இடம்­பெற்று வந்த நிலையில் 2023.11.01ஆம் திகதி நடை­பெற்ற மேன்­மு­றை­யீட்டு விசா­ர­ணை­யின்­போது இவ் அறிக்­கையின் முதலாம் பாகத்தை விடி­வெள்­ளிக்கு வழங்க ஜனா­தி­பதி செய­லகம் இணக்கம் தெரி­வித்­தது. எனினும் சாட்­­சி­யங்­களை உள்­ள­டக்­கிய இரண்டாம் பாகத்தை வழங்­கு­வ­தற்கு ஜனா­தி­பதி அலு­வ­லகம் மறுப்புத் தெரி­வித்­துள்­ளது. 2 ஆம் பாகமும் வழங்­கப்­பட வேண்டும் என விடி­வெள்ளி கோரி­யுள்ள நிலையில் இது தொடர்­பான விசா­ர­ணைகள் எதிர்­வரும் ஜன­வரி மாதம் இடம்­பெ­ற­வுள்­ளன.

இந்­நி­லையில் தற்­போது வழங்­கப்­பட்­டுள்ள ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­பதி செய­ல­ணியின் அறிக்­கையின் முதலாம் பாகம் 133 பக்­கங்­களைக் கொண்­டுள்­ளது. இவ் அறிக்கை 8 அத்­தி­யா­யங்­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது.
இலங்­கையில் பொது­வாக அமு­லி­லுள்ள நீதிக்­கட்­ட­மைப்பும் அதன் வர­லாறும் முத­லா­வது அத்­தி­யா­யத்தில் உள்­ள­டங்­கி­யுள்­ளது.

இரண்­டா­வது அத்­தி­யா­யத்தில் இலங்­கையில் நடை­மு­றை­யி­லுள்ள விசேட சட்­டங்கள் மற்றும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எண்­ணக்­க­ரு­வுக்கு அமை­வாக சட்­டங்­களின் நிலைமை, கண்­டியர் சட்டம், முஸ்லிம் சட்டம் என்­பன உள்­ள­டங்­கி­யுள்­ளன. மற்றும் முஸ்லிம் சட்­டத்தில் தலாக், விவா­க­ரத்து, காதி நீதி­மன்ற முறைமை, முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் நீதி­ய­மைச்­சினால் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் என்­ப­னவும் உள்­ள­டங்­கி­யுள்­ளன.
மேலும் தேச வழமைச் சட்டம், கண்­டியர் சட்டம், முஸ்லிம் சட்­டத்தில் விவா­க­ரத்து தொடர்பில் நடை­மு­றை­யி­லுள்ள விட­யங்கள் என்­ப­னவும் இரண்டாம் அத்­தி­யா­யத்தில் உள்­ள­டங்­கி­யுள்­ளன.

பல்­வேறு தரா­த­ரங்­களைச் சேர்ந்­த­வர்கள் தொடர்­பான நடை­மு­றை­யி­லுள்ள வேறு­பா­டுகள் தொடர்­பான விப­ரங்கள் மூன்றாம் அத்­தி­யா­யத்தில் உள்­ள­டங்­கி­யுள்­ளன. சிறைக் கைதிகள், ஆதி­வா­சிகள் சமூகம், மாற்றுத் திற­னா­ளிகள் சமூகம், குல வேறு­பா­டு­க­ளுள்ள சமூகம், சம பாலு­றவு சமூகம் எனும் விப­ரங்­களும் அரச சேவை­யி­லுள்ள முஸ்லிம் பெண்­க­ளுக்கு வழங்­கப்­படும் ‘இத்தா’ கால விடு­முறை தொடர்­பான விப­ரங்­களும் அடங்­கி­யுள்­ளன.

முஸ்லிம் பெண் ஒரு­வரின் கணவர் மர­ணித்த பின்பு வழங்­கப்­படும் நான்கு மாதங்கள் 10 நாள் விடு­முறை (இத்தா), விவா­க­ரத்து வழங்­கப்­பட்ட பின் வழங்­கப்­படும் 3 மாத கால இத்தா விடு­முறை என்­பன இரத்துச் செய்­யப்­பட்டு அரச சேவை­யி­லுள்ள ஏனைய இன பெண்­க­ளுக்கு வழங்­கப்­படும் விடு­முறை மாத்­தி­ரமே முஸ்லிம் பெண் அரச ஊழி­யர்­க­ளுக்கும் வழங்­கப்­பட வேண்­டு­மென இச் செய­லணி சிபா­ரிசு செய்­துள்­ளது.

இலங்­கையில் பெண்­களின் நிலைமை தொடர்­பான அவ­தா­னிப்­புகள் நான்காம் அத்­தி­யா­யத்தில் உள்­ள­டங்­கி­யுள்­ளன.

சமூ­கத்தை அடிப்­ப­டை­வா­தத்தின் பால் ஈர்க்கச் செய்யும் செயற்­பா­டுகள் குறித்து ஐந்தாம் அத்­தி­யா­யத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.
இப்­ப­கு­தியில் முஸ்லிம் பெண்கள் முழு­மை­யாக முகத்தை மறைத்து ஆடை அணி­தலை தடை செய்தல், ஹலால் சான்­றிதழ் தொடர்பில் வழங்­கப்­பட்­டுள்ள சிபா­ரி­சினை அமுல்­ப­டுத்தல், சட்­ட­ரீ­தி­யற்ற மத மாற்­றங்­களை தடை செய்தல், வஹா­பி­ஸத்தை பரப்­பு­வ­தற்கு சமய அடிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் அழுத்­தங்கள், இன, மத ரீதி­யாக மற்றும் பிர­தே­ச­வா­ரி­யாக அர­சியல் கட்­சி­களைப் பதிவு செய்தல் மற்றும் நடத்­து­தலைத் தடுத்தல் என்­ப­ன­பற்றி இந்த அத்­தி­யா­யத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நீதி­மன்­றங்கள் மூலம் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள நபர்கள் நீதி­மன்றம் மூலம் குற்­ற­மற்­ற­வர்கள் என நிரூ­பிக்­கப்­பட்டு விடு­தலை செய்யும் வரை பத­விகள் வகிப்­பதை தவிர்த்தல் போன்ற சிபா­ரி­சுகள் 6ஆவது அத்­தி­யா­யத்தில் முன் வைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நாட்டின் நீதி­மன்ற கட்­ட­மைப்பில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய சீர்­தி­ருத்­தங்கள் சில 7ஆவது அத்­தி­யா­யத்தில் உள்­ள­டங்­கி­யுள்­ளது. நீதி­மன்­றத்தை அவ­ம­தித்தல் தொடர்பில் உரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்ற சிபா­ரிசும் இவ் அத்­தி­யா­யத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எட்­டா­வது அத்­தி­யா­யத்தில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எண்ணக் கருவை அமுல்­ப­டுத்­து­வது தொடர்பில் இந்­நாட்டில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய மேலும் பல சீர்­தி­ருத்­தங்கள் மற்றும் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அர­சி­யல்­வா­திகள் மற்றும் உயர் அரச அதி­கா­ரி­களின் சொத்­துகள், உட­மைகள் என்ன? அவற்றின் பெறு­மதி பற்­றிய விப­ரங்­களை பொது­மக்கள் பரி­சீ­லனை செய்யும் வகையில் அந்த விப­ரங்­களை இணை­ய­வழி கட்­ட­மைப்­புக்­குட்­ப­டுத்தல், தமி­ழீழ யுத்­தத்­துடன் தொடர்­பு­டைய அனைத்து தரப்­பி­ன­ருக்கும் ஜனா­தி­ப­தியின் பொது மன்­னிப்பு பெற்றுக் கொடுத்தல், தொல்­பொருள் பிர­தே­சங்­களில் மத மற்றும் கலா­சார சக வாழ்­வினைப் பாது­காப்­ப­துடன் அப்­பி­ர­தே­சங்­களின் பாது­காப்பு உறுதி செய்­யப்­பட வேண்டும் என்­பன போன்ற சிபா­ரி­சுகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­பதி செய­லணி
இச்­செ­ய­லணி முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வினால் அர­சி­ய­ல­மைப்பில் அவ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தின் கீழ் இல. 2251/30 மற்றும் 2021 அக்­டோபர் 26ஆம் திகதி வர்த்­த­மானி அறி­வித்­த­லின்­படி நிறு­வப்­பட்­டது.
இச்­செ­ய­ல­ணிக்கு பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்டார். உறுப்­பி­னர்­க­ளாக 13 பேர் நிய­மிக்­கப்­பட்­டனர். இதில் மௌலவி எம்.இஸட்.ஏ.எஸ்.மொஹமட் என்­பவர் மாத்­தி­ரமே அறிக்கை சமர்ப்­பிக்­கப்­படும் வரை செய­ல­ணியில் முஸ்லிம் உறுப்­பி­ன­ராக இருந்தார். எனினும் இவர் அறிக்­கையின் சிபா­ரி­சு­களில் 01, 05, 06, 15, 21 என்­ப­வற்றைத் தவிர்த்து ஏனைய சிபா­ரி­சு­க­ளுக்கு கையொப்­ப­மிட்­டுள்ளார். இவ்­வி­ப­ரங்கள் அறிக்­கையில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன.

முஸ்லிம் உறுப்­பினர்
கையொப்­ப­மி­டாத சிபா­ரி­சுகள்
முஸ்லிம் பெண்கள் முழு­மை­யாக முகத்தை மறைத்து ஆடை அணி­வது தடை செய்­யப்­பட வேண்டும். இவ்­வா­றான ஆடை அணி­வதன் மூலம் அவர்கள் அடிப்­ப­டை­வா­தத்­துக்கு உட்­படும் சந்­தர்ப்பம் உரு­வா­கி­றது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா முஸ்லிம் பெண்கள் முகம், கைகள் மற்றும் முழு உடம்­பையும் மறைத்து ஆடை அணிய வேண்­டு­மென பத்வா வழங்­கி­யுள்­ளது.
பொது இடங்­களில் முகத்தை பூர­ண­மாக மறைத்து ஆடை அணிந்து நட­மா­டு­வது தடை செய்­யப்­பட வேண்டும். முழு­மை­யாக முகத்தை மறைத்து ஆடை அணி­வது குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­வ­தற்கு சாத­க­மாக அமைந்து விடு­கி­றது.

ஹலால் சான்­றிதழ் தொடர்பில் 2020ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 19ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட தேசிய பாது­காப்பு தொடர்­பான துறைசார் மேற்­பார்வை குழு­வினால் சிபா­ரி­சுகள் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

கடை­க­ளிலும் விற்­பனை நிலை­யங்­க­ளிலும் ஹலால் சான்­றிதழ் பெற்ற உணவுப் பொருட்கள் வேறா­கவும் ஹலால் சான்­றிதழ் அற்ற உணவுப் பொருட்கள் வேறா­கவும் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட வேண்டும்.
வஹா­பிஸம் மற்றும் அடிப்­ப­டை­வாதம் இது தொடர்­பான மார்க்கத் தீர்ப்­புகள் வழங்­கப்­ப­டு­வது தடை செய்­யப்­பட வேண்டும். இஸ்­லா­மிய அறி­ஞ­ரொ­ருவர் அல்­லது இஸ்­லா­மிய அமைப்­பொன்றின் மூலம் ‘பத்வா’ என்ற பெயரில் வழங்­கப்­படும் மத தீர்ப்­புகள் அடிப்­ப­டை­வா­தத்தை வளர்க்­கின்­ற­மையால் அவ்­வா­றான மார்க்கத் தீர்ப்­பு­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட வேண்டும்.

நியா­ய­மற்ற முறையில் மத­மாற்றம் செய்­யப்­ப­டு­வது தடை செய்­யப்­பட வேண்டும். குறிப்­பாக மக்­களின் வறுமை நிலை­யினைப் பயன்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு பல்­வேறு பொரு­ளா­தார வசதி வாய்ப்­பு­களை வழங்கி இவ்­வாறு மதம் மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான மத மாற்­றங்­க­ளுக்கு அதி­க­மாக பௌத்த, இந்து மக்கள் இலக்கு வைக்­கப்­ப­டு­கின்­றனர். கிறிஸ்­தவ மத பிரி­வுகள், முஸ்லிம் அடிப்­ப­டை­வாத குழுக்கள் இந்­ந­ட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கின்­றன. எனவே முறை­யற்ற மத­மாற்­றங்­களைத் தடை செய்­வ­தற்கு சட்­டங்கள் கொண்டு வரப்­பட வேண்டும்.

இன, மத ரீதி­யி­லான மற்றும் பிர­தேச ரீதி­யி­லான அர­சியல் கட்­சிகள் பதிவு செய்­யப்­ப­டு­வது தடை செய்­யப்­பட வேண்டும். அத்­தோடு தற்­போது செயற்­படும் இவ்­வா­றான அர­சியற் கட்­சிகள் தேசிய கட்­சி­க­ளாக மாற்றிக் கொள்­வ­தற்கு கால அவ­காசம் வழங்­கப்­பட வேண்டும். அவ்­வா­றான கால எல்­லைக்குள் மாற்றம் பெறாத அர­சியல் கட்­சிகள் தடை செய்­யப்­பட வேண்டும்.
தண்­டனைச் சட்டக் கோவை 365 மற்றும் 365A பிரி­வின்­படி சம­பா­லின சேர்க்­கையில் ஈடு­ப­டு­வது தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் என்­பது நீக்­கப்­பட்டு உரிய திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

இந்­நாட்டில் வாழும் சம்­பி­ர­தாய முஸ்லிம் குழு­வொன்று இஸ்­லாத்தை விட்டும் விலகிச் சென்­ற­வர்கள் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யினால் 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி வழங்­கப்­பட்ட மார்க்கத் தீர்ப்பு முழு­மை­யாக செல்­லு­ப­டி­யற்­ற­தாக்­கப்­பட வேண்டும். இது பற்றி பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் அல்­லது அதி­கா­ரி­யொ­ரு­வ­ரினால் உலமா சபைக்கு அறி­விக்­கப்­பட வேண்டும் என்­ப­னவே குறிப்­பிட்ட முஸ்லிம் உறுப்­பினர் உடன்­ப­டாத, கையொப்­ப­மி­டாத சிபா­ரி­சு­க­ளாகும்.

செய­ல­ணிக்­கான செலவு
43 இலட்­சங்கள்
இதே­வேளை ‘விடி­வெள்ளி’ சமர்ப்­பித்த தகவல் அறியும் விண்­ணப்­பத்­திற்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணிக்­காக அரச நிதி­யி­லி­ருந்து 43 இலட்சம் ரூபா செல­வி­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.
மேலும் 2021.10.26ஆம் திகதி முதல் 22.06.17 ஆம் திகதி வரை இச்­செ­ய­லணி இயங்­கி­ய­தா­கவும் இச்­செ­ய­ல­ணிக்­காக அர­சாங்­கத்தின் திரண்ட நிதி­யி­லி­ருந்து 43 இலட்­சத்து 22 ஆயி­ரத்து 589 ரூபா 44 சதம் செல­வி­டப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி செய­ல­கத்தின் தகவல் அலு­வலர் எஸ்.கே.ஹேனா­தீ­ர­வினால் வழங்­கப்­பட்ட பதிலில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.