ஹமாஸ் அமைப்பின் ஆரம்பம் எங்கிருந்து தொடங்குகிறது?

0 540

யூ.கே. றமீஸ் எம்.ஏ
(சமூகவியல்)

பல­ஸதீன் வர­லாறு நெடுக ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­களால் சூறை­யா­டப்­பட்ட புனித பூமி­யாகும். அதன் அண்­மைய வர­லாறு கூட அத்­த­கை­ய­துதான். அதனை ஆக்­கி­ர­மிப்பு யூதர்கள் கப­ளீ­கரம் செய்து எழு­பத்தி ஐந்து வரு­டங்­க­ளா­கி­விட்­டன. அதன் விடு­த­லைக்­காக பலர் பாடு­பட்­டார்கள். குறிப்­பாக இட­து­சா­ரிகள், பதாஹ் இயக்கம் போன்­றவை மிக முக்­கி­ய­மா­னவை ஆகும். பின்னர் அவர்­களால் கைவி­டப்­பட்ட பலஸ்­தீன விவ­காரம் “ஹமாஸ்” அமைப்­பி­னரால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. ஹமாஸ் அமைப்பும் ஒரு இஸ்­ரே­லிய தயா­ரிப்­புத்தான் என்ற கருத்­துக்­களும் மெலி­தாக முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. இது தொடர்­பா­கவே இக்­கட்­டுரை பேசு­கின்­றது. இங்கு கீழ்­வரும் விட­யங்கள் குறித்து நாம் சிந்­திப்­பது பொருத்­த­மா­னது.

1. இஸ்­லா­மிய அமைப்­பு­க­ளுடன் முரண்­ப­டக்­கூ­டி­ய­வர்கள் வர­லாறு நெடுக இருந்து வந்­துள்­ளார்கள். நபி­ய­வர்­க­ளைக்­கூட குற்றம் சுமத்­தி­னார்கள். இது ஆச்­ச­ரி­ய­மான விட­ய­மொன்று அல்ல. விமர்­ச­னங்­க­ளுக்கு உட்­ப­டா­த­வர்கள் யாரும் இருக்க முடி­யாது.
2.ஆனால் இந்தக் குற்­றச்­சாட்டு; மிகவும் பழை­யது. ஹமாஸ் அமைப்பு 1987 களில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. அது முதல் ஹமா­ஸுக்கு எதி­ராக இத்­த­கைய குற்­றச்­சா­டடுக்களை பலரும் முன்­வை­க்­கி­றார்கள். குறிப்­பாக பலஸ்­தீன இட­து­சா­ரி­களும் வேறு பலரும் குற்றம் சுமத்­து­கின்­றனர்.
ஹமா­ஸுக்­கான மக்கள் ஆத­ரவு பெரு­கும்­போதும் தமது மக்கள் செல்­வாக்கில் வீழ்ச்­சிகள் ஏற்­ப­டும்­போ­தும்தான் இக்­குற்­றச்­சா­ட­டுகள் அதி­க­மாக முன்­வைக்­கப்­பட்­டன. ஹமாஸ் தமது போக்­கை­விட வித்­தி­யா­ச­மான இஸ்­லா­மிய போக்கைக் கடைப்­பி­டிக்­கும்­போதும் பலஸ்தீன் விடு­தலை இயக்­கத்தின் சமா­தான பேச்­சு­வார்த்­தை­களை நிரா­க­ரித்த போதும் இவ்­வ­கை­யான போலிக் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன.
3. 1967 களில் பலஸ்­தீ­னி­ட­மி­ருந்து ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் கைப்­பற்­றிய பகு­தி­களில் சமூக சேவை­களை செய்­வ­தற்கும் பள்­ளி­வா­சல்­களை உரு­வாக்­கு­வ­தற்கும் சியோ­னிச நாடு அனு­ம­தித்­தது. இதனை ஹமா­ஸுக்கு உத­வி­ய­தாக கருத முடி­யுமா?
இது யூத பிரித்­தாளும் கொள்­கையின் ஒரு தந்­தி­ர­மாகும். இந்த அனு­மதி ஹமா­ஸுக்கு மாத்­தி­ர­மல்ல இட­து­சாரி, தேசி­ய­வாத சக்­தி­க­ளுக்கும் பதாஹ்­வுக்கும் கூட வழங்­கப்­பட்­டது. இக்­கா­லத்தில் இஸ்லாம் சார்­புள்­ள­வர்கள் மாத்­தி­ர­மல்ல பலரும் பல நிறு­வ­னங்­களை உரு­வாக்­கி­னார்கள். இஸ்­லா­மி­ய­வா­தி­களும் சந்­தர்ப்­பத்தை நழுவ விட­வில்லை. இஸ்­லாத்தால் போசிக்­கப்­பட்ட அக்­ஸாவின் பெறு­ம­தியை உணர்ந்து அதனை பாது­காக்­கக்­கூ­டிய ஒரு சமூ­கத்தை உரு­வாக்க இந்த சந்­தர்ப்­பத்தை அவர்­களும் பயன்­ப­டுத்திக் கொண்­டார்கள். இது தவ­றான ஒரு விட­ய­மா­குமா?
4. இக்­குற்­றச்­சாட்­டின்­படி ஹமாஸ் அமைப்பு ஆக்­கி­ர­மிப்பு இஸ்­ரேலின் உள­வா­ளி­க­ளாக அல்­லது தகவல் வழங்­கு­னர்­க­ளாக இருந்­தி­ருக்க வேண்­டும.; இன்று அவர்­க­ளுடன் மோது­வதில், அரபு இஸ்­லா­மிய சக்­தி­களை இணைப்­பதில் ஹமாஸ் முதன்­நி­லையில் உள்­ளது. இதனை ஒரு­போதும் உள­வா­ளிகள் செய்­ய­மாட்­டார்கள். உள­வா­ளி­க­ளாக இருந்­தி­ருந்தால் அவர்­க­ளது தனிப்­பட்ட சொந்த நலன்­க­ளுக்­காக பணி­யாற்­றி­யி­ருப்­பார்கள். பல விட­யங்­களை விட்­டுக்­கொ­டுத்­தி­ருப்­பார்கள். பலஸ்தீன் விட­யத்தில் விட்­டுக்­கொ­டுக்க ஹமாஸ் தொடர்ந்தும் மறுக்­கி­றது.
5. இட­து­சா­ரி­களும் பதாஹ் அமைப்பும் ஹமா­ஸுடன் போட்டி போட்­ட­வர்கள். அவர்­க­ளுக்­கான மக்­க­ளா­த­ரவு குறைந்த போது இவ்­வா­றான குற்­றச்­சா­டடுக்களை முன்­வைத்­தார்கள்.

பலஸ்­தீனை ஆக்­கி­ர­மித்த சியோ­னி­சத்­துக்கு உத­வு­கின்­ற­வர்கள் அவர்­க­ளுக்­காக பலஸ்­தீன பிரச்­சி­னையை விட்­டுக்­கொ­டுப்­பார்கள். அவர்­க­ளோடு சமா­தானம் பேசு­வார்கள், அவர்­க­ளோடு போராட விரும்­ப­மாட்­டார்கள். ஹமாஸும் இப்­ப­டி­யான ஒன்றா?
இரு­நாட்டுக் கொள்­கைக்­காக பலஸ்­தீனை விட்­டுக்­கொ­டுத்­த­வர்கள் யார்? அக்ஸா தொடர்­பான எவ்­வி­த­மான விட­யங்­களும் உள்­ள­டக்­கப்­ப­டாமல் அதனை கைவிட்­டது யார்?
பலஸ்­தீனின் சிறி­ய­தொரு பகு­தியை குறைந்­த­பட்ச அதி­கா­ரங்­க­ளுடன் ஏற்­றுக்­கொள்ள சம்­ம­தித்­த­வர்கள் யார்?
ஒஸ்லோ உடன்­ப­டிக்­கையை செய்­த­வர்கள் யார்?
பலஸ்­தீ­னர்­களை மேற்குக் கரை­யு­டனும் காஸா­வு­டனும் சுருக்­கி­யது யார்? சியோ­னிச சக்­தி­க­ளுடன் இணைந்­து­கொண்டு பலஸ்­தீ­னர்­களை காட்­டிக்­கொ­டுத்­தது யார்?

யார் ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­க­ளான சியோ­னி­சத்­துக்கு நெருக்­க­மா­ன­வர்கள்?
யார் அவர்­க­ளுடன் ஒத்­து­ழைப்­ப­வர்கள்? யார் அவர்­க­ளுக்கு சேவை செய்­கி­றார்கள்? இவை சாதா­ர­ண­மான கேள்­விகள் அல்ல. இவர்­கள்தான் காஸா முற்­று­கைக்கு துணை­நின்­றார்கள். சிறு­வர்கள், பெண்கள் கொல்­லப்­படக் கார­ண­மா­யினர். வீடுகள் தரை­மட்­ட­மாக்­கப்­ப­டு­வ­தற்கு ஒத்­து­ழைத்­தார்கள். ஏற்­றுக்­கொள்­ளவே முடி­யாத விட­யங்­களை நிர்ப்­பந்­திக்க முயற்­சித்­தனர். அது நிறை­வே­றா­த­போது இவை அத்­த­னை­யையும் செய்­தனர். இன்­றும்­கூட மேற்குக் கரையில் இதுதான் நடை­பெ­று­கி­றது.

ஹமாஸ் பலஸ்­தீ­னுக்கு விசு­வா­ச­மாக இருக்­கி­றது. அதனை நேசிக்­கி­றது. அதனை விட்டுக்கொடுக்க முடி­யாது என்­பதில் விடாப்­பி­டி­யாக இருக்­கி­றது. அதற்­காக மக்­க­ளா­த­ரவை திரட்­சி­யாக பெற முனை­கி­றது. அரபு இஸ்­லா­மிய சக்­தி­களை இணைக்­கி­றது.

இந்­தக்­குற்­றச்­சாட்டு பொய்­யா­னது என்­பதை விளங்க இவையே போது­மா­னது. ஹமாஸ் அமைப்பின் தலை­வர்கள் பலர் தமது உயிர்­க­ளையும் தமது குடும்­பத்­த­வர்­க­ளையும் அர்ப்­ப­ணித்­துள்­ளனர். சிறை­களில் பலர் பல வரு­டங்­க­ளாக தொடர்ந்து இருக்­கி­றார்கள். ஹமாஸின் பல தலை­வர்­களை அதன் ஆரம்ப காலம் முதலே ஆக்­கி­ர­மிப்பு இஸ்­ரேலின் உளவு நிறு­வ­னங்கள் உள்­நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் தேடித்­தேடி கொலை செய்­தி­ருக்­கின்­றது. ஹமாஸின் ஸ்தாபகர் அஹ்மத் யாசின் கூட தனது சக்­க­ர­நாற்­கா­லியில் அதி­கா­லையில் சுபஹ் தொழு­து­விட்டு பள்­ளி­வா­ச­லி­லி­ருந்து வெளி­யே­றிய வேளையில் இஸ்­ரேலின் விமானத் தாக்­கு­தலில் படு­கொலை செய்­யப்­பட்­டது அனை­வ­ருக்கும் நினை­வி­ருக்­கலாம். மேலும் பலர் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பு சிறை­களில் கைதி­க­ளாக உள்­ளனர். அவர்கள் ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­களின் நலன்­க­ளுக்­காக செயல்­ப­டு­கின்­ற­வர்­க­ளாக இருந்­தி­ருந்தால் தம்மைக் காப்­பாற்றிக் கொள்­ளவே முயன்­றி­ருப்­பார்கள்.

மொஸாத் போன்ற உளவு நிறு­வ­னங்­களும் ஆக்­கி­ர­மிப்பு இஸ்­ரேலும் போலி­யான கருத்துக்களை உண்மை போன்று உருவாக்குவதில் வல்லவர்கள். “மக்களற்ற நாட்டில் நாடற்றவர்களுக்கு ஒரு தேசம்” என்ற கருத்துருவாக்கமும் இப்படியான ஒன்றுதான்.

பலஸ்­தீனில் மக்கள் இருக்­க­வில்­.ைல, எமக்கு நாடு இருக்­க­வில்லை. இப்­ப­டி­யான ஒரு இடத்­தில்தான் நாம் எமக்­கான நாட்டை உரு­வாக்­கி­யுள்ளோம் என்­பது போன்ற கருத்து இங்கு தோன்­று­கி­றது. மஃம­திய்யா வைத்­தி­ய­சா­லையை ஹமாஸ் தாக்­கி­யது என்­பதும் இப்­ப­டி­யா­ன­துதான். “ஹமாஸின் ஆரம்ப காலத்தில் நாம் அதற்கு உத­வினோம்” என்­பதும் அப்­ப­டி­யா­ன­துதான்.
ஹமாஸை இஸ்ரேல் உரு­வாக்­கி­யது என்­பது அறி­வு­பூர்­வ­மான ஒரு கருத்து அன்று. யதார்த்­த­மாக நோக்­கினால் உண்மை மிகவும் வெளிப்­ப­டை­யா­னது. இப்­ப­டி­யான ஒரு வாதத்தை முன்­வைப்­பது ஆச்­ச­ரி­ய­மா­னது. ஏனெனில் யாரும் சொந்தப் பணத்தில் சூனியம் வைத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதுவே வெளிப்படையானது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.