900,000 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய தாக்குதலை எதிர்கொள்கின்றனர்

அகதிகளாகியுள்ள மக்களின் திகிலூட்டும் அனுபவங்கள்

0 771

எம்.ஐ.அப்துல் நஸார்

கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று வடக்கு காஸா மற்றும் காஸா நக­ரத்­தி­லுள்ள 900,000 பலஸ்­தீன பொது­மக்கள் இஸ்­ரே­லிய டாங்­கி­க­ளாலும் தாக்­கு­த­லுக்கு தயா­ராகி வரும் படை­க­ளாலும் சூழப்­பட்­டனர்.

பல­ஸ்­­தீனப் பொது­மக்­களை தெற்கு பகு­திக்குச் செலு­மாறு இஸ்ரேல் வற்­பு­றுத்­தி­ய­தோடு வெளியேறுவதற்கு நான்கு மணி­நேர கால அவ­கா­சத்­தையே வழங்­கி­யது, ஆனால் தெற்கு காஸாவும் தாக்­கு­த­லுக்­குள்­ளா­னது. கான் யூனிஸ் மற்றும் ரபா நக­ரங்­களில் இஸ்ரேல் நடத்­திய வான்­வழித் தாக்­கு­தலில் குறைந்­தது 23 பேர் கொல்­லப்­பட்­டனர்.

11 பேர் கொல்­லப்­பட்ட கான் யூனிஸில் ஒரு வீட்டின் இடி­பா­டு­களில் இருந்து மீட்­கப்­பட்ட அக­மது ஆயிஷ், ‘நாங்கள் பொது­மக்கள்’ எனக் குறிப்­பிட்டார். ‘இதுதான் இஸ்ரேல் என்று அழைக்­கப்­ப­டு­வோரின் வீரம். -அவர்கள் பொது­மக்கள், குழந்­தைகள், கர்ப்­பத்­தி­லுள்ள குழந்­தைகள் மற்றும் வய­தா­ன­வர்கள் மீதே தமது வலி­மை­யையும் சக்­தி­யையும் காட்­டு­கி­றார்கள்.’

அவர் பேசிக்­கொண்­டி­ருக்கும் போதே, இடி­பா­டு­க­ளுக்குள் இடுப்பு வரை புதைந்­தி­ருந்த சிறு­மியை மீட்க வீட்டில் இருந்த மீட்புப் பணி­யா­ளர்கள் தங்கள் கைகளைப் பயன்­ப­டுத்தி முயற்­சிக்கத் தொடங்­கினர்.

தெற்கு நோக்கிச் சென்ற காஸா நக­ர­வா­சி­யான ஆதம் பயேஸ் ஜெயாரா கூறு­கையில்: ‘என் வாழ்க்­கையின் மிகவும் ஆபத்­தான பயணம். டாங்­கி­களை மிகவும் அண்­மித்த நிலையில் பார்த்தோம். சிதைந்த உடல் பாகங்­களைப் பார்த்தோம். நாங்கள் மர­ணத்தைக் கண்­ணெ­திரே கண்டோம்.

காஸாவின் நகர்ப்­புற மையப்­ப­கு­தியை தாக்­கு­வ­தற்­காக டாங்­கிகள் புற­ந­கரில் நிலை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த காஸா நக­ருக்குள் அதன் படைகள் ஆழ­மாக ஊடு­ரு­வி­யுள்­ள­தாக இஸ்ரேல் தெரி­வித்­தது.

இரண்­டா­வது மாத­மாக நடை­பெறும் போரின் ஆரம்பத்­திலும், தற்­போதும் இரா­ணுவம் பொது­மக்­களை தெற்கே செல்­லு­மாறு வலி­யு­றுத்­தி­யுள்­ளது. முற்­று­கை­யி­டப்­பட்ட பகு­தியின் மையப்­ப­கு­தியை ஊட­றுத்துச் செல்லும் சலாஹ் அல்-தீன் வழி­யாகச் செல்லும் பாதை பாது­காப்­பா­னது என தெரி­வித்து குறு­கிய கால அவ­கா­சத்­தினை வழங்­கி­யது.

ஆனால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் வடக்கில் தங்­கி­யுள்­ளனர், பலர் வைத்­தி­ய­சா­லை­களில் அல்­லது ஐ.நா. வின் பாது­காப்­பி­டங்­களில் தங்­கி­யுள்­ளனர்.

தெற்கில் மக்கள் நெரிசல், தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் தட்­டுப்­பாடு நில­வு­வ­தா­கவும், பாது­காப்­பான இட­மென கரு­தப்­படும் பகு­தி­களில் இஸ்ரேல் வான்­வழித் தாக்­கு­தல்­களைத் தொடர்­வ­தா­கவும் இடம்­பெ­ய­ராது தங்­கி­யி­ருப்­ப­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

திங்­க­ளன்று, காஸாவின் சுகா­தார அமைச்சின் ஊடகப் பேச்­சாளர் அஷ்ரப் அல்-­கித்ரா, பாது­காப்­பான பாதை­யென இஸ்­ரே­லிய குறிப்­பி­டு­வது ‘மரண படு­கு­ழியைத் தவிர வேறெ­து­வு­மில்லை’ என இஸ்­ரேலின் வேண்­டு­கோளை நிரா­க­ரித்தார்.

ஜனா­ஸாக்கள் பல நாட்­க­ளாக வீதியில் வரி­சை­யாக இருக்­கின்­றன. மேலும் ஜனா­ஸாக்­களை மீட்க உத­வு­மாறு உள்ளூர் நோயாளர் காவு வண்­டி­க­ளுடன் வரு­மாறு சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்­கத்­திற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ளது.

ஒரு கட்­டத்தில், பொது­ மக்­க­ளுக்­காக தற்­கா­லி­க­மாக வீதியைத் திறக்க முயன்­ற­போது, ஹமாஸ் துப்­பாக்கிச் சூடு நடத்­தி­ய­தாக இஸ்ரேல் இராணுவம் குற்றம் சாட்­டி­யது.

இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாகு திங்­கட்­கி­ழமை பிற்­ப­கு­தியில் ஏபிசி நியூஸ் ஒளி­ப­ரப்­பிற்கு அளித்த நேர்­கா­ணலில் இரா­ணு­வத்தின் கூற்­றுக்­களை உண்­மைப்­ப­டுத்­தினார்.

‘நாங்கள் குறிப்­பாக மிரு­கத்­த­ன­மான ஒரு எதி­ரி­யுடன் போரா­டு­கிறோம். அவர்கள் தங்கள் குடி­மக்­களை மனிதக் கேட­யங்­க­ளாகப் பயன்­ப­டுத்­து­கி­றார்கள், மேலும் பாலஸ்­தீ­னிய பொது­மக்­களை போர் நடை­பெறும் பிர­தே­சத்தை விட்டு வெளி­யே­று­மாறு நாங்கள் கேட்டுக் கொண்­டி­ருக்­கும்­போது, அவர்கள் துப்­பாக்கி முனையில் அவர்­களைத் தடுக்­கி­றார்கள்,’என்று நெதன்­யாகு கூறினார்.

‘பல தசாப்­தங்­களில் முதன்­மு­றை­யாக, பயங்­க­ர­வா­தத்தின் மையத்தில், காஸா நகரின் மையப்­ப­கு­தியில் இஸ்ரேல் பாது­காப்புப் படை போரா­டு­கி­றது’ என இரா­ணு­வத்தின் தெற்கு கட்­டளைத் தலைவர் மேஜர் ஜெனரல் யாரோன் பிங்­கெல்மேன், தெரி­வித்தார்.

‘ஒவ்­வொரு நாளும் ஒவ்­வொரு மணி நேரமும் படைகள் ஆயு­த­தா­ரி­களைக் கொன்று, சுரங்­கப்­பா­தை­களை கண்­ட­றிந்து, ஆயு­தங்­களை அழித்து, எதிரி மையங்­களை நோக்கி முன்­னேறி வரு­கின்­றனர் எனவும் தெரி­வித்தார்.
முன்­னேறி வரும் இஸ்­ரே­லியப் படை­க­ளுக்கு பெரும் இழப்­பு­க­ளையும் சேதங்­க­ளையும் போரா­ளிகள் ஏற்­ப­டுத்­து­வ­தாக ஹமாஸின் இரா­ணுவப் பிரிவு தெரி­விக்­கின்­றது.

ஒக்­டோபர் 7 ஆந் திக­தி­யன்று ஹமாஸ் போரா­ளிகள் காஸாவைச் சுற்றி அமைக்­கப்­பட்­டி­ருந்த பாது­காப்பு வேலியைத் தாண்டிச் சென்று 1,400 இஸ்­ரே­லி­யர்­களைக் கொன்று 200க்கும் மேற்­பட்­ட­வர்­களைக் கடத்திச் சென்­ற­தை­ய­டுத்து போர் தொடங்­கி­யது. அதன் பின்னர், இஸ்ரேல் இடை­வி­டாமல் காஸா மீது குண்­டு­வீசி 10,000 க்கும் மேற்­பட்ட மக்­களைக் கொன்­றது, அவர்­களில் 40 சத­வி­கிதம் குழந்­தை­க­ளாவர். ‘இது ஒரு முழு மாத படு­கொ­லைகள், இடை­வி­டாத துன்­பங்கள், இரத்தம் சிந்­துதல், அழிவு, சீற்றம் மற்றும் அவ­நம்­பிக்கை’ என ஐநா மனித உரி­மைகள் தலைவர் வோல்க்கர் டர்க் தெரி­வித்தார்.

முதன்­மு­றை­யாக நீண்ட கால திட்­டங்­கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டிய நெதன்­யாகு, ‘கால­வ­ரை­யின்றி காஸாவின் பாது­காப்­பிற்­கான பொறுப்பை இஸ்ரேல் ஏற்கும்’ எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

‘காஸா பகுதி ஆபத்­தினை எதிர்­நோக்­கி­யுள்ள நிலையில் பாலஸ்­தீன அதி­கா­ர­ ச­பைக்கு அதனைத் தாரைவார்ப்பதற்காக எமது படைகள் இரத்தம் சிந்தக்கூடாது என நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி தீவிரவாத கூட்டணியின் உறுப்பினரான சிம்சா ரோத்மேன் தெரிவித்ததோடு முழு இஸ்ரேலியக் கட்டுப்பாடு மற்றும் முழு இராணுவமயமாக்கல் மட்டுமே பாதுகாப்பை தரும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ‘இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிப்பு மேற்கொள்வதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியதாகவும் அவ்வாறு செய்வது இஸ்ரேலுக்கு நல்லதல்ல, இஸ்ரேலிய மக்களுக்கு நல்லதல்ல’ என அவர் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.