பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடிக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்

பலஸ்தீன விவகாரம் குறித்து உலமா சபை அறிக்கை

0 252

(ஏ. ஆர்.ஏ.பரீல்)
‘பலஸ்தீன் நெருக்­க­டிக்­கான தீர்­வுகள் பேச்­சு­வார்த்தை மூலம் ஆரா­யப்­பட்டே தீர்த்­துக்­கொள்­ளப்­பட வேண்டும். இரத்தம் மற்றும் அப்­பாவி மனித உயிர்­களை விலை­யாக வைத்து பிரச்­சி­னையைத் தீர்க்க முடி­யாது’ என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா பலஸ்தீன் – இஸ்ரேல் மோதல் பற்றி சர்­வ­தேச சமூ­கத்­திற்கு கோரிக்கை விடுத்­துள்­ளது. இது தொடர்பில் அறிக்­கை­யொன்­றி­னையும் வெளி­யிட்­டுள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி மற்றும் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் கையொப்­ப­மிட்டு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

‘பலஸ்தீன் இஸ்ரேல் மோதல் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உயிர்­களைக் காவு கொண்­டுள்­ள­துடன் பல மில்­லியன் மக்­களை தங்­க­ளது இருப்­பி­டங்­க­ளி­லி­ருந்தும் இடம் பெயரச் செய்­தி­ருக்­கி­றது.

உல­கி­லுள்ள அனைத்து நாடு­களும் இன, மத வேறு­பா­டின்றி மக்­க­ளி­டையே நிலை­யான அமை­தி­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் நிலை­நாட்ட வேண்­டிய அவ­சி­யத்தில் உள்­ளன. மனித இனத்தின் வர­லாறு நெடு­கிலும் அடக்கு முறையும், அநீ­தியும் மனித குலத்­திற்கு எந்­த­வொரு நன்­மை­யையும் வெற்­றியையும் பெற்­றுக்­கொ­டுக்­க­வில்லை. மாறாக நாடு­களை அழித்து நாசம் செய்து பின்­ன­டை­வையும், தோல்­வி­யை­யுமே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அந்­த­வ­கையில் பலஸ்தீன் நெருக்­க­டிக்­கான தீர்­வு­களும் பேச்­சு­வார்த்தை மூலமே ஆரா­யப்­பட வேண்டும். இரத்தம் மற்றும் அப்­பாவி மனித உயிர்­களை விலை­யாக வைத்து இந்த நிலை­மையைத் தீர்க்க முடி­யாது. பாகு­பாடு மற்றும் வெறுப்­புக்கு எதி­ராக எழுந்து நின்று இந்தப் பிரச்­சி­னையை பார­பட்­ச­மற்ற மனி­தா­பி­மான முறையில் அணுகி நீதி வழங்­கப்­ப­டு­வதை உறுதி செய்­வது அனைத்து சமூ­கங்­க­ளி­ன­தும் ­பொ­றுப்­பாகும். நாம் நபி (ஸல்) அவர்­களின் வழி­காட்­டு­தலின் படி மனித குலத்தின் நல்­வாழ்­வுக்­காக இவ்­வி­வ­காரம் தொடர்பில் மனி­தா­பி­மான மற்ற முறையில் ஒடுக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கா­கவும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கா­கவும் பிரார்த்தனை செய்வோம். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக. நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் செழிப்பையும் அருள்வானாக ’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.