சூடானில் உள்நாட்டுப்போர் தீவிரம் : 41 இலங்கை பிரஜைகளில் 13 பேர் சவூதியை அடைந்தனர்

62 நாடுகளைச் சேர்ந்த 2148 பேரை வெளியேற்றியது சவூதி அரேபியா

0 163

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சூடானில் உள்­நாட்­டுப்போர் தீவி­ர­ம­டைந்­துள்ள நிலையில் அங்கு வாழும் 41 இலங்­கை­யர்­களில் 13 பேர் பாது­காப்­பாக மீட்­கப்­பட்டுள்ளனர். இவர்கள் கப்பல் மூலம் சவூதி அரே­பியா, ஜித்தா துறை­மு­கத்­துக்கு அழைத்து வரப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

சவூதி அரே­பி­யா­வி­லுள்ள இலங்­கையின் பதில் கொன்­சி­யூலர் ஜெனரல் சவூதி அர­சாங்­கத்தின் உத­வி­யுடன் இந்­ந­ட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­த­தாக இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி தெரி­வித்தார்.

இலங்­கை­யர்­களை சூடா­னி­லி­ருந்து மீட்­ப­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­மைக்­காக சவூதி அரே­பிய அர­சாங்­கத்­துக்கு வெளி­வி­வ­கார அமைச்சர் அலி­சப்ரி நன்­றி­களைத் தெரி­வித்­துள்ளார்.

மேலும் சூடானில் எஞ்­சி­யுள்ள இலங்­கை­யர்கள், இந்­தியா அல்­லது சவூதி அரே­பி­யாவின் உத­வி­யுடன் மீட்­கப்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் கூறினார்.

இதே­வேளை, சூடானில் போர் சூழலில் சிக்­கி­யி­ருந்த சவூதி பிர­ஜைகள் மற்றும் ஏனைய நாடு­களைச் சேர்ந்த 91 பேர் சவூதி அரே­பி­யா­வினால் மீட்­கப்­பட்டு சவூதி அரே­பி­யா­வுக்கு அழைத்து வரப்­பட்­ட­தாக இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் ஹம்மூத் அல்­கத்­தானி தெரி­வித்தார்.

சவூதி அரே­பி­யாவின் முதற்­கட்ட மீட்பு நட­வ­டிக்­கையின் கீழ் அரச சவூதி கப்­பற்­படை சவூதி பிர­ஜைகள் மற்றும் சவூதி அரே­பி­யாவின் சகோ­த­ரத்­துவ, நட்பு நாடு­களின் பிர­ஜை­களை மீட்டு அழைத்து வந்­தது.

91 பேரில் 66 பேர் வெளி­நாட்­ட­வர்­க­ளாவர். அவர்­களில் இரா­ஜ­தந்­தி­ரிகள், சர்­வ­தேச அதி­கா­ரிகள் அடங்­கு­கின்­றனர். இதே­வேளை நேற்­றுக்­கா­லையும் சூடா­னி­லி­ருந்து கப்­ப­லொன்று ஜித்தா துறை­மு­கத்தை வந்­த­டைந்­தது.

சவூதி அரே­பிய அர­சா­னது அதன் தலை­மைத்­து­வத்தின் வழி­காட்­டு­தலின் கீழ், சூடானில் சிக்­கித்­த­விக்கும் பல்­வேறு நாட்­டி­ன­ரையும் வெளி­யேற்றும் முயற்­சியின் தொடர்ச்­சி­யாக, மேலும் பல சவூதி அரே­பியப் பிர­ஜைகள் உட்­பட சகோ­தர மற்றும் நட்பு நாடு­களைச் சேர்ந்­த­வர்­களும் சவூதி அரே­பியக் கப்­ப­லொன்றின் மூலம் ஜித்தா நகரை வந்­த­டைந்­தனர். இவர்­களுள் 13 சவூதி அரே­பியப் பிர­ஜை­களும், இலங்கை, ஓமான், சிரியா, லிபியா, அல்­ஜீ­ரியா, மொராக்கோ, துனி­சியா, லெபனான், எகிப்து, ஈராக், ஜோர்டான், பலஸ்­தீனம், மொரிட்­டா­னியா , யெமன், அமெ­ரிக்கா, கனடா மற்றும் ஜெர்­மனி, ஐக்­கிய இராச்­சியம், சுவிட்­சர்­லாந்து, அயர்­லாந்து, பிரான்ஸ், நெதர்­லாந்து, ஆர்­மீ­னியா, ஹங்­கேரி, ஸ்வீடன், துருக்கி, எத்­தி­யோப்­பியா, சியரா லியோன், நைஜீ­ரியா, செனகல், தான்­சா­னியா, ஜிபூட்டி, கேப் வெர்டே, காங்கோ, மட­காஸ்கர், ஐவ­ரிகோஸ்ட், சோமா­லியா, தென்­னா­பி­ரிக்கா, போட்ஸ்­வானா, மாலாவி, குரோ­ஷியா, நிக­ர­குவா, லைபீ­ரியா, தெற்கு சூடான், கென்யா, உகண்டா, பிலிப்பைன்ஸ், ஆப்­கா­னிஸ்தான், இந்­தியா, இந்­தோ­னே­சியா, சிம்­பாப்வே, பாகிஸ்தான், சாட், பங்­க­ளாதேஷ், நைஜர் மற்றும் தாய்­லாந்து போன்ற நாடு­களைச் சேர்ந்த 1674 பேர்­களும் உள்­ள­டங்­குவர்.

இது­வரை மொத்­த­மாக 62 நாடு­களைச் சேர்ந்த 2148 பேர் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர் (114 சவூதி பிர­ஜைகள் மற்றும் 2034 ஏனைய நாடு­களைச் சேர்ந்­த­வர்கள்). அவர்கள் தத்­த­மது நாடு­க­ளுக்குப் புறப்­ப­டு­வ­தற்குத் தயா­ராகும் வகையில் அவர்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து அடிப்­படைத் தேவை­க­ளையும் வழங்க சவூதி அரே­பியா சகல நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டுள்­ளது.

சவூதி அரே­பி­யாவின் தலை­மைத்­து­வ­மா­னது உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ சவூதி அரே­பிய பிர­ஜை­களின் நலன்­க­ளுக்­காக எப்­பொ­ழுதும் செயற்­படும் என்றும் தூதுவர் குறிப்­பிட்டார்.

இதனிடையே, சூடானில் நிலவும் உள்­நாட்­டுப்போர் தொடர்பில் உன்­னிப்­பாக அவ­தா­னித்து வரு­வ­தாகத் தெரி­வித்­துள்ள இலங்கை அரசு, சூடானில் வாழும் இலங்­கை­யர்­க­ளுக்கு பாது­காப்பு தொடர்­பான ஆலோ­ச­னை­களை வழங்­கு­வ­தற்கு தயார் நிலையில் இருப்­ப­தாகத் தெரி­வித்­துள்­ளது.

இலங்­கையின் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சு சூடானில் வாழும் இலங்­கை­யர்­க­ளுக்கு அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளது. அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, சூடான் குடி­ய­ர­சுடன் அங்­கீ­காரம் பெற்ற கெய்­ரோவில் உள்ள இலங்கைத் தூது­ரகம் நிலை­மையை உன்­னிப்­பாக அவ­தா­னித்து வரு­கி­றது.

கார்ட்டூம் மற்றும் அதன் புற­நகர் பகு­தி­களில் உள்ள இலங்­கை­யர்­க­ளுடன் தூத­ரகம் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கிறது. பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

சூடானில் உள்ள இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு தொடர்பில் உதவி பெற்றுக்கொள்வதற்கு தூதரக மின்னஞ்சல் slcaironsular@gmali.com தொலைபேசி + 201272813000 மற்-றும் கார்ட்டூமில் உள்ள இலங்கையின் தூதுவர் சயீத் அப்தெல்வினுடைய தொலைபேசி + 249912394035 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.