முஸ்லிம்கள் மீதான குரோதத்தின் வெளிப்பாடே ஜனாஸா எரிப்பு

காத்தான்குடியில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

0 143

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
முஸ்­லிம்கள் மீதான குரோ­தமே முஸ்­லிம்­க­ளு­டைய கொரோனா ஜனா­சாக்­களை ராஜ­பக்ச அர­சாங்கம் எரித்­த­மை­யாகும் என எதிர்க் கட்­சித்­த­லைவர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

காத்­தான்­குடி நகர சபை தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சக்­தியின் தொலை­பேசி சின்­னத்தில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து நடத்­திய கூட்­டத்­தின்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் பிரதி தவி­சாளர் பொறி­யி­ய­லாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் தலை­மையில் நடை­பெற்ற இந்த மக்கள் சந்­திப்பு காத்­தான்­குடி ஹோட்டல் பீச்வே மண்­ட­பத்தில் நடை­பெற்­றது.

இதன் போது தொடர்ந்து உரை­யாற்­றிய எதிர்க்­கட்சித் தலைவர், முஸ்லிம் மக்­களின் கொரோனா ஜனா­சாக்­களை வலுக்­கட்­டா­யப்­ப­டுத்தி அன்று எரித்­தார்கள். முஸ்­லிம்­க­ளு­டைய கொரோனா ஜனா­சாக்­களை எரித்­தமைக்­கு விஞ்­ஞான நோக்­கங்­களோ வைத்­தி­யர்­க­ளு­டைய சிபா­ரி­சு­களோ இல்லை. அவர்­க­ளு­டைய உள்­நோக்கம் முஸ்­லிம்கள் மீதான குரோ­த­மாகும்.

அந்தக் கால கட்­டங்­களில் உங்­களின் வாக்­கு­க­ளினால் பாரா­ளு­மன்றம் சென்ற பிரதி நிதிகள் மொட்டுக் கட்­சி­யுடன் இணைந்து வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருந்­தார்கள்.
இந்த ஜனாசா எரிப்­புக்கு எதி­ராக முதன் முதல் வீதி­களில் இறங்கி போரா­டி­ய­வர்கள் எங்­க­ளது ஐக்­கிய மக்கள் சக்­தி­யினர் தான் என்­பதை நான் கூறிக் கொள்ள விரும்­பு­கின்றேன்.

ஜனாசா எரிப்பு விட­யத்தில் ராஜ­பக்­ச­வுக்கு சம­யத்தை, மதத்தை காட்டிக் கொடுத்­த­வர்­களும் இருக்­கின்­றார்கள்.

நான் வீட­மைப்பு அமைச்­ச­ராக இருந்த போது இந்த மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­துக்கு அடிக்­கடி வந்­த­துள்ளேன். வீட்­டுத்­திட்­டங்­களை ஆரம்­பித்து வைத்­த­துடன் முடிந்த வீட்­டுத்­திட்­டங்­களை மக்­க­ளுக்கு கைய­ளித்தேன். ஆனால் என்னால் காத்­தான்­கு­டிக்கு வர­மு­டி­யாமல் போய் விட்­டது. அதற்­கான காரணம் இந்த காத்­தான்­குடிப் பகு­தியில் காணிக்­கான தட்­டுப்­பாடு அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது.

நான் நினைக்­கின்றேன். காத்­தான்­கு­டியில் ஒரு வீட்டில் இரண்டு மூன்று குடும்­பங்கள் வசிக்­கின்­றன. அதற்கு காரணம் காணி­யில்­லா­மை­யாகும். காணி இல்­லா­ததால் எங்­களால் வீடு­களை அமைத்துக் கொள்ள முடி­ய­வில்லை.

இதற்­கான திட்­ட­மொன்றை நாங்கள் வகுக்க வேண்டும். காணி இல்­லா­ததால் தொடர் மாடி வீடுகளை அமைக்க முடியும். இந்தப் பகுதியிலுள்ள அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு முடிவை எடுத்து அந்த முடிவின் பிரகாரம் தொடர் மாடி வீட்டுத்திட்டத்தினை இங்கு அமைக்க முடியும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.