முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தம்: சட்ட வரைபு தயாராகிறது

திருத்தங்களுக்­கு முஸ்லிம் எம்.பி.க்களும் ஒப்­பு­தல் என்கிறார் நீதியமைச்சர்

0 219

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள திருத்­தங்கள் நீதி­ய­மைச்சர் விஜே­ய­தாஸ ராஜ­ப­க்ஷ­வினால் சட்ட வரை­புக்­காக சட்ட வரைஞர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் நீதி­ய­மைச்சர் விஜே­ய­தாஸ ராஜ­ப­க்ஷ­வுக்கும் இடையில் பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய திருத்­தங்­களை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக நீதி­ய­மைச்சர் இது தொடர்பில் ஏற்­க­னவே நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த திருத்த ஆலோ­ச­னைக்­கு­ழுவை நீதி­மைச்­சுக்கு அழைத்­தி­ருந்தார்.

குறிப்­பிட்ட சட்ட திருத்த ஆலோ­ச­னைக்­குழு முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி­சப்­ரி­யினால் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­ட­தாகும். 9 பேர­டங்­கிய குறிப்­பிட்ட குழுவின் அங்­கத்­த­வர்­களில் தலைவர் உட்­பட 6 பேர் நீதி­ய­மைச்­ச­ரு­ட­னான சந்­திப்பில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்­தீனின் தலை­மை­யி­லான சட்­டத்­தி­ருத்த ஆலோ­ச­னைக்­குழு சமர்ப்­பித்­துள்ள திருத்த சிபா­ரி­சுகள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளதை அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ விளக்­கி­ய­துடன் சட்­ட­வ­ரைபு திணைக்­க­ளத்­துக்கு திருத்­தங்­களை சட்ட வரை­புக்­காக அனுப்பி வைப்­ப­தாக தெரி­வித்தார்.

காதி­நீ­தி­ப­தி­களின் கல்­வித்­த­ரா­த­ரங்கள் மற்றும் தகு­தி­களை நீதிச்­சேவை ஆணைக்­குழு தீர்­மா­னிக்கும் என்றும் கூறினார்.

பல­தா­ர­மணம் நிபந்­த­னை­க­ளுடன் அனு­ம­திக்­கப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். அத்­தோடு பெண்கள் காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வதும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

பெண்­கா­திகள் நிய­மிக்­கப்­ப­டும்­போது ‘வொலி’ அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட வேண்­டிய நிலைமை ஏற்­பட்டால் விசேட காதி­நீ­தி­பதி மூலம் அவ்­வ­னு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­ப­டு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் சட்­டத்தில் உள்­ள­டக்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
சட்­டத்­தி­ருத்­தங்­க­ளுக்­கான வரைபு சட்ட வரைஞர் திணைக்­க­ளத்­தினால் நீதி­ய­மைச்­ச­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டதும் அது அமைச்­ச­ர­வைக்குச் சமர்ப்­பிக்­கப்­பட்டு பின்பு பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­காரம் பெறப்­பட்­டதன் பின்பு அமு­லுக்கு வர­வுள்­ளது. இதற்­கான ஏற்­பா­டு­களை நீதி­ய­மைச்சர் விரைபு படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் சட்டத்திருத்த ஆலோசனைக் குழுவின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனைத் தொடர்பு கொண்டபோது குழு முன்வைத்த சிபாரிசுகளுக்கு நீதியமைச்சர் அங்கீகாரமளித்துள்ளதாகத் தெரிவித்தார். முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்களின் விருப்பத்துடனே திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.