கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் கடமைகள் நிறைவு

முகுது விகாரை காணி சர்ச்சை தீர்த்து வைப்பு தீகவாபியிலும் தூபி நிர்மாணிக்க நடவடிக்கை

0 186

(றிப்தி அலி)
கிழக்கு மாகா­ணத்­தினுள் தொல்­பொருள் மர­பு­ரி­மை­களை முகாமை செய்­வ­தற்­கான ஜனா­தி­பதி செய­ல­ணியின் கட­மைகள் முடி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி செய­லகம் தெரி­வித்­தது.

முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவின் 2178/17ஆம் இலக்க அதி­வி­சேட வர்த்­த­மா­னியின் ஊடாக 2020.06.02ஆம் திகதி நிய­மிக்­கப்­பட்ட இந்த செய­ல­ணி­யினை தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி முடி­வுக்கு கொண்டு வந்­துள்ளார்.

இது தொடர்பில் ஜனா­தி­பதி செய­ல­ணியின் அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்கும் எழுத்து மூலம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது என ஜனா­தி­பதி செய­லகத்தின் தகவல் அதி­கா­ரி­யான சிரேஷ்ட உதவிச் செய­லாளர் எஸ்.கே. ஹேனா­தீர தெரி­வித்தார்.
ஜனா­தி­பதி செய­ல­கத்­திற்கு கடந்த நவம்பர் 14ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­பட்ட தக­வ­ல­றியும் விண்­ணப்­பத்­திற்கு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (06) வழங்­கிய பதி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

குறித்த பதிலில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
“இந்த செய­ல­ணி­யினால் ஜனா­தி­ப­திக்கு எது­வித அறிக்­கை­களும் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன், இந்த ஜனா­தி­பதி செய­ல­ணியின் உறுப்­பி­னர்­க­ளுக்கு சம்­ப­ளமோ, கொடுப்­ப­னவோ எதுவும் ஜனா­தி­பதி செய­ல­கத்­தினால் வழங்­கப்­ப­ட­வில்லை.
இந்த செய­லணி செயற்­பட்ட காலப் பகு­திக்குள் தீக­வாபி மற்றும் லஹு­க­ல­யி­லுள்ள நீல­கிரி ஆகி­ய­வற்றின் தூபி­களை நிர்­மா­ணிப்­ப­தற்­கான அடிப்­படை நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் பொத்­துவில் முகுது மஹா விகா­ரைக்­கு­ரிய காணிகள் தொடர்­பான சிக்­கல்­களை தீர்த்து வைத்தல், கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள ஏனைய தொல்­பொருள் இடங்­களை இனங்­கா­ணுதல் மற்றும் அவற்றை பேணிப் பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் ஆகிய மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இந்த ஜனா­தி­பதி செய­ல­ணியின் விடயப் பரப்­பிற்குள் வரும் கட­மைகள் அனைத்தும், கடந்த ஜுலை 22ஆம் திகதி ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் வெளி­யி­டப்­பட்ட 2289/43ஆம் இலக்க அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்­சிற்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன.

இதனால், மேற்­படி கட­மைகள் உட்­பட இந்த ஜனா­தி­பதி செய­ல­ணி­யினால் நிறைவு செய்­யப்­ப­டாத மிகுதி விட­யங்கள் இருப்பின் அவற்றை மேற்­படி அமைச்­சிற்கு கைய­ளிக்­கு­மாறு ஜனா­தி­ப­தியின் செய­லாளர் சமன் ஏக்­க­நா­யக்­கவின் PS/CA­/00/1/14/17ஆம் இலக்க கடி­தத்தின் மூலம் செய­ல­ணியின் செய­லா­ள­ருக்கு கடந்த ஓகஸ்ட் 23 ஆம் திக­தி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்படி, மிகு­தி­யாக இருந்த பணிகள் தொடர்­பான அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­காக குறித்த ஜனா­தி­பதி செய­ல­ணியின் செய­லா­ள­ரினால் புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் செய­லா­ள­ருக்கு குறிப்­பிட்ட ஆவ­ணங்கள் கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது” என்றார்.

இந்த செய­ல­ணியின் தலை­வ­ராக பாது­காப்பு செய­லாளர் ஓய்­வு­பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்­னவும், செய­லா­ள­ராக முன்னாள் ஜனா­தி­ப­தியின் சிரேஷ்ட உதவிச் செய­லாளர் ஜீவந்தி சேனா­நா­யக்­கவும் செயற்­பட்­டனர்.

தொல்­பொருள் சக்­ர­வர்த்தி எல்­லா­வல மேதா­னந்த தேரர், வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்கள் மற்றும் தமன்­க­டுவ பிர­தேசம் ஆகி­ய­வற்­றுக்­கான பிர­தம சங்­க­நா­யக்க, தொல்­பொருள் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம், காணி ஆணை­யாளர் நாயகம், நில அள­வை­யளார் நாயகம், களனிப் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் ராஜ்­குமார் சோம­தேவ, பேரா­தனை பல்­க­லைக்­க­ழக மருத்­துவ பீட பேரா­சி­ரியர் கபில குண­வர்த்­தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷ­பந்து தென்­னகோன், கிழக்கு மாகாண காணி ஆணை­யாளர், தெரண ஊடக வலை­ய­மைப்பின் தலைவர் திலித் ஜய­வீர சிவில் பாது­காப்பு திணைக்­கள பணிப்­பாளர் நாயகம், அஸ்­கிரி பீடத்தின் அனு­நா­யக்க தேரர், மல்­வத்து பீடத்தின் பதி­வாளர், மல்­வத்து பீடத்தின் நிரு­வாக சபை உறுப்­பி­ன­ரொ­ருவர் மற்றும் அஸ்­கிரி பீடத்தின் பதி­வாளர் ஆகிய 15 பேரும் இந்த செய­ல­ணியின் உறுப்­பி­னர்­களாக செயற்­பட்­டனர்.

எனினும், கிழக்கு மாகா­ணத்­தினைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகள் எவரும் இந்த செயலணியில் உள்வாங்கப்படாமை தொடர்பில் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து, வட மாகாண முன்னாள் பிரதம செயலாளர் ஏ. பத்திநாதன் மற்றும் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் முபீஸால் அபூபக்கர் ஆகியோர் இந்த ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். எனினும் ஏ. பத்திநாதன் குறித்த பதவியினை பொறுப்பேற்கவில்லை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.