பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 22 ஆவது திருத்தம் கூறுவதென்ன?

0 978

ஏ.ஆர்.ஏ.பரீல்

சர்ச்­சைக்­குள்­ளா­கி­யி­ருந்த 22ஆவது திருத்தச்­சட்டம் பல எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயன்று வந்த போதிலும் ஆளும் தரப்­புக்கு மத்­தியில் அதற்கு எதிர்ப்­புகள் மேலோங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பாரா­ளு­மன்­றத்தில் ஒற்றை ஆச­னத்தைக் கொண்­டுள்ள ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவில் இருந்து சுயா­தீன அணிக்குத் தாவிக் கொண்ட நீதி, சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு மற்றும் அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­ப­க்ஷவும் இணைந்து இந்த திருத்­தச்­சட்­டத்தை எவ்­வாறு நிறை­வேற்­றப்­போ­கி­றார்கள் என்ற சந்­தேகம் இறு­தி­வரை நிலை கொண்­டி­ருந்­தது. உயர் நீதி­மன்றின் வியாக்­கி­யா­னத்­துக்கு அமைய சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு அவ­சி­ய­மான பிரி­வுகள் நீக்­கப்­பட்டு, மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் இதனை நிறை­வேற்­றிக்­கொள்ள திட்­ட­மி­டப்­பட்­டது.

இதற்கு பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மைப் பலத்­துடன் இருக்கும் பொது ஜன­பெ­ர­மு­னவின் ஆத­ரவு முக்­கி­ய­மாகத் தேவைப்­பட்­டது. ஆனால் பொது ஜன பெர­முன கட்சி மூன்­றாகப் பிள­வு­பட்­டி­ருந்­தமை 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்கு சாத­க­மாக அமைந்­தி­ருந்­தது.

பொது ஜன­பெ­ர­முன கட்­சியில் ஒரு பிரி­வினர் ஏற்­க­னவே சுயா­தீன அணி­யாக இயங்கத் தொடங்­கி­யி­ருந்­தனர். இவர்கள் 22 ஆவது திருத்­தத்தை ஆத­ரித்­தனர். மேலும் ஒரு பிரி­வினர் பொது ஜன­பெ­ர­மு­ன­வுக்குள் இருந்து கொண்டே, இரட்டை குடி­யு­ரிமை பெற்­ற­வர்கள் பாரா­ளு­மன்­றத்­துக்குள் நுழை­வதை தடுக்க வேண்டும். ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட வேண்டும் என்­பதை ஆத­ரித்­தனர். இன்­னு­மொரு பிரி­வி­னரும் இருந்­தனர். அவர்கள் பசில் ராஜ­ப­க்ஷ­வுக்கு விசு­வா­ச­மா­ன­வர்கள். இவர்கள் 22 ஆவது திருத்­தத்தில் இரட்டை குடி­யுரிமை கொண்­ட­வர்கள் பாரா­ளு­மன்­றத்­துக்குள் நுழை­வதைத் தடுக்கும் வகை­யி­லான பிரிவை நீக்க வேண்­டு­மென வலி­யு­றுத்தி வந்­தனர். இல்­லையேல் தாம் எதிர்த்து வாக்­க­ளிப்­ப­தா­கவும், வாக்­க­ளிப்பை புறக்­க­ணிக்­கப்­போ­வ­தா­கவும் மிரட்டி வந்­தனர். இவ்­வா­றான நிலை­மையில் 22 ஆவது திருத்தச் சட்டம் நிறை­வே­றுமா என்­ப­தை­விட வாக்­கெ­டுப்பு நடக்­குமா? என்று கூட சந்­தேகம் நில­வி­யது. அர­சாங்கம் இறுதி நேரத்தில் சட்ட மூலத்தை விலக்­கிக்­கொள்­வ­தாக அறி­வித்து வாக்­கெ­டுப்பைத் தவிர்க்­கலாம் எனும் சந்­தே­கமும் நில­வி­யது.

இந்­நி­லையே 22 ஆவது திருத்தச் சட்ட மூலம் 2/3 பெரும்­பான்மை வாக்­கு­களால் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. இது ஒரு வர­லாற்­றுப்­ப­தி­வாக அமையும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­துக்கு ஆத­ர­வாக 179 வாக்­குகள் கிடைக்­கப்­பெற்ற நிலையில் எதி­ராக ஒரே­யொ­ரு­ வாக்கே பதி­வா­கி­யது. பொது­ஜ­ன­பெ­ர­மு­னவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் வீர­சே­க­ரவே எதிர்த்து வாக்­க­ளித்தார். திருத்தச் சட்ட மூலத்தில் நீதி­மன்­றத்தின் தீர்ப்­புக்கு அமைய திருத்­தங்கள் உள்­வாங்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
நல்­லாட்சி அர­சாங்­கத்தில் 19 ஆவது திருத்­தச்­சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது அதனை எதிர்த்து வாக்­க­ளித்த ஒரே ஒரு உறுப்­பி­னரும் இவ­ரே­யாவார்.

எதிர்க்­கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஐக்­கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்தும் விலகி சுயா­தீ­ன­மாக செயற்­படும் டலஸ் அல­கப்­பெ­ரும தலை­மை­யி­லான சுதந்­திர மக்கள் சபை, மற்றும் உத்­தர லங்கா சபாவவைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சி­ய­ல­மைப்பின் 22 ஆவது திருத்­தத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர்.

பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ராஜ­பக்ஷ குடும்­பத்தின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் சமல் ராஜ­பக்ஷ, சசேந்ர ராஜ­பக்ஷ மற்றும் நாமல் ராஜ­பக்ஷ ஆகியோர் இத்­தி­ருத்­தத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தமை விசேட அம்­ச­மாகும்.

திருத்தச் சட்ட மூலம் வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­ட­போது அரச தரப்பைச் சேர்ந்த 26 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தில் இருக்கவில்லை.

\பிர­சன்ன ரண­துங்க, மஹிந்த அம­ர­வீர, சீதா அரம்­பே­பொல, ரோஹித அபே­கு­ண­வர்­தன, நிபுன ரண­வக, பிர­மித பண்­டார தென்­னகோன், ஜனக பண்­டார தென்­னகோன், எஸ்.எம்.சந்­ர­சேன, ஜோன்ஸன் பர்­ணாந்து ஆகியோர் உட்­பட 18 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஏற்­க­னவே கார­ணங்­களைத் தெரி­வித்து வாக்­கெ­டுப்பு நடை­பெற்­ற­போது பாரா­ளு­மன்­றத்­துக்கு சமுக­ம­ளித்­தி­ருக்­க­வில்லை.

மஹிந்த ராஜ­பக்ஷ, சனத் நிசாந்த, காமினி லொக்­குகே, பவித்­திரா வன்னி ஆரச்சி, சாகர காரி­ய­வசம், ஜயன்த கெட­கொட, சஞ்­ஜீவ எதி­ரி­மான்ன ஆகிய ஏழு­பேரும் வாக்­கெ­டுப்பு நடக்­கும்­போது பாரா­ளு­மன்­றத்­துக்குள் இருக்­க­வில்லை.

அத்­தோடு ஜி.எல்.பீரிஸ், உபுல் கல­பத்தி, அங்­கஜன் ராம­நாதன், சான் விஜ­யலால் டி சில்வா, திஸ்ஸ விதா­ரன ஆகிய ஐந்து சுயா­தீ­ன­மான பாரா­ளுமன்ற உறுப்­பி­னர்­களும் சபைக்கு சமுக­ம­ளித்­தி­ருக்­க­வில்லை.

ஆர் சம்­பந்தன், எம்.எச்.ஏ.ஹலீம், வடிவேல் சுரேஷ், கஜேந்­திர குமார் பொன்­னம்­பலம், கஜேந்­திரன், ஹெக்டர் அப்­பு­ஹாமி, வேலு­குமார், எஸ்.எம். மரிகார், ஹேஷா விதா­னகே, எம்.ஏ.சுமந்­திரன், இரா­ச­மா­ணிக்கம், தவ­ராசா கலை­ய­ரசன் ஆகிய எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களும் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமு­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை.

அர­சி­ய­ல­மைப்பின் 22 ஆவது திருத்­தச்­சட்ட மூலம் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­வினால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன் பின்பு நீதி­மன்றின் தீர்ப்­புக்­க­மைய திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து அக்­டோபர் 20 மற்றும் 21 ஆம் திக­தி­களில் 22 ஆவது திருத்­தச்­சட்டம் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் இடம்­பெற்­றது. 22 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் முதற்­பணி பாரா­ளு­மன்­றத்தில் அர­சி­ய­ல­மைப்பு சபை­யொன்­றினை நிறு­வு­வ­தாகும். சபா­நா­யகர், பிர­தமர் மற்றும் எதிர்க்கட்­சித்­த­லைவர் அர­சி­ய­ல­மைப்புச் சபைக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நிய­மனம் பெறு­வார்கள்.

மேலும் ஜனா­தி­பதி நிய­மிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர், பிர­த­மரை பிர­தி­நித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர், சிறிய அர­சியல் கட்­சியின் பிர­தி­நி­தி­யாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர், எதிர்க்­கட்­சியை பிர­தி­நி­திப்­ப­டுத்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர், மற்றும் சிவில் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி மூவர் இந்த அர­சி­ய­ல­மைப்பு சபையில் அங்கம் பெறுவர்.

நீதித்­து­றை மற்றும் அரச சேவை­யினை சுயா­தீ­ன­மாக இயங்கச் செய்­வது 22 ஆவது திருத்தச் சட்­ட­மூ­லத்தின் முக்­கி­ய­மான இலக்­காகும். நீதி­ப­திகள், சட்­டமா அதிபர், மத்­திய வங்­கியின் தலைவர், கணக்­காளர் நாயகம், பொலிஸ்மா அதிபர், பாரா-­ளு­மன்­றத்தின் செய­லாளர் நிய­ம­னங்கள் மற்றும் எல்லை நிர்­ணய ஆணைக் குழு உட்­பட ஏனைய ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கு உறுப்­பி­னர்கள் மற்றும் தலைவர் நிய­ம­னங்கள் என்பனவற்றுக்கு அர­சி­ய­ல­மைப்பு சபையின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை பாரா­ளு­மன்­றுக்கு பர­வ­லாக்கும் வகையில் 22 ஆவது திருத்­தச்­சட்ட மூலம் அமைந்­துள்­ளது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் 19 ஆவது திருத்­தச்­சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களைக் குறைக்கும் வகை­யிலும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை உரு­வாக்கும் வகை­யிலும் 19 ஆவது திருத்­தச்­சட்ட மூலம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. அத்­தோடு இதில் இரட்டை பிர­ஜா­வு­ரி­மை­யுள்ள ஒருவர் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது என்றும் இரண்டு தட­வை­க­ளுக்கு மேல் ஒருவர் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது என்றும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தது.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் 18 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்­பட்டு இரண்டு தட­வை­க­ளுக்கு மேல் ஒருவர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடியும் என்றும் இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை உள்ள ஒருவர் தேர்­தலில் போட்­டி­யிட முடியும் எனவும் அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இதனை மாற்­றி­ய­மைக்கும் நோக்­கி­லேயே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் காலத்தில் 19 ஆவது திருத்­தச்­சட்டம் கொண்டு வரப்­பட்­டது. இதில் ஜனா­தி­பதி ஒருவர் பாரா­ளு­மன்­றத்தை 4 ½ வரு­டத்தின் பின்­னரே கலைக்க முடியும் என்ற விட­யமும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தது.

2019 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜ­பக்ஷ வெற்றி பெற்று பொது ஜன பெர­முன அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்தே 19ஆவது திருத்­தச்­சட்­டத்தை மாற்­றி­ய­மைக்கும் வகையில் நிறை­வேற்று அதி­கா­ரத்தை மீண்டும் பலப்­ப­டுத்தும் வகையில் 20 ஆவது திருத்­தச்­சட்ட மூலம் நிறை­வேற்­றப்­பட்­டது. இச்­சட்­டத்தில் இரட்டை பிர­ஜா­வு­ரி­மை­யு­டைய ஒருவர் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யு­மென்றும் பாரா­ளு­மன்­றத்தை இரண்­டரை வரு­டங்­களில் ஜனா­தி­ப­தி­யினால் கலைக்க முடியும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் 20 ஆவது திருத்தச் சட்டம் ஜனா­தி­ப­திக்கு கூடு­த­லான அதி­கா­ரங்­களை வழங்­கி­யுள்­ள­தாக பல வழி­க­ளிலும் அதி­ருப்­திகள் வெளி­யி­டப்­பட்டு வந்­தன. பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக மக்கள் போராட்­டங்கள் கிளர்ந்­தெ­ழுந்­தன. அர­சாங்­கத்­துக்கு எதி­ராக மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்­தி­னார்கள். இந்­நி­லையில் ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்­களைக் குறைக்கும் வகையில் 20 ஆவது திருத்­தச்­சட்­டத்தை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ வாக்­கு­று­தி­ய­ளித்தார். நான்கு பெளத்த பீடங்­களும் ஒன்­றி­ணைந்து 20ஆவது திருத்­தச்­சட்டம் இல்­லா­தொ­ழிக்­கப்­பட வேண்டும் என கோரிக்கை விடுத்­தன.

இவ்­வா­றான நகர்­வு­களின் பின்பே தற்­போது 22 ஆவது திருத்­தச்­சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. இச்­சட்டமூலத்தில் இரட்டைப் பிர­ஜாவு­ரி­மை­யுள்ள பசில் ராஜ­ப­க்ஷவே பிர­தான குறி­யாக இலக்கு வைக்­கப்­பட்­டி­ருந்தார். இரட்டை பிர­ஜா­வு­ரி­மை­யு­டைய ஒருவர் பாரா­ளு­மன்­றத்­துக்குள் பிர­வே­சிக்க முடி­யாது. அதன்­மூலம் பத­வி­களைப் . பெற முடி­யாது.

22 ஆவது திருத்தச் சட்டமூலத்­துக்­கான வாக்­கெ­டுப்பு மூலம் பொது­ஜ­ன­பெ­ர­முன கட்சி பிள­வு­களைச் சந்­தித்­துள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் இக்­கட்சி 2/3 பெரும்­பான்­மையைக் கொண்­டி­ருந்த போதும் தற்­போது பின்­தள்­ளப்­பட்­டுள்­ளது.

பிர­த­மரை பதவி விலக்கல் எனும் விட­யத்தை எடுத்­துக்­கொண்டால் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்­தின்­படி அவர் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்தாலன்றி அவரை பதவி விலக்க முடியாது என்றே கூறப்பட்டுள்ளது. இதேவேளை 20ஆவது திருத்தச்சட்டத்தின்படி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் கூடிய கடிதமொன்றினை அனுப்பி வைப்பதன்மூலம் பிரதமரை பதவி விலக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள 22 ஆவது திருத்தச்சட்டத்தின்படி பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்து கொண்டாலேயன்றி அவரை பதவி விலக்க முடியாது. அதன்படி பிரதமரை பதவி விலக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றே 22 ஆவது திருத்த சட்டம் தெரிவிக்கிறது.

20 ஆவது திருத்த சட்­டத்தை நீக்க வேண்டும். ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்­களைக் குறைக்க வேண்டும் என்­பதே அண்­மைய போராட்­டக்­கா­ரர்­க­ளி­னதும் பொது மக்­க­ளி­னதும் எதிர்­பார்ப்­பா­கவும் அபி­லா­ஷை­யா­கவும் இருந்­தது. இந்­நி­லையில் 179 வாக்­கு­களால் 22 ஆவது திருத்­தச்­சட்டம் பாரா­ளு­மன்றில் நிறை­வே­றி­யி­ருக்­கி­றது. ஒரே ஒரு­வரே எதிர்த்து வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

நாடு தற்­போது எதிர்­நோக்­கி­யுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து மீள­வேண்டும். நாட்டில் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் பல­மாக கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். ஜன­நா­யக விழு­மி­யங்கள் பாது­காக்­கப்­பட வேண்டும். இவற்­றுக்­கெல்லாம் 22 ஆவது திருத்தச்சட்டம் அமுலாக்கம் செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.