நாட்டு சட்டத்தை கவனத்திற்கொண்டு உழ்ஹிய்யாவை நிறைவேற்றுங்கள்

பிற சமூகத்தை தூண்டும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் எனவும் உலமா சபை கோரிக்கை

0 241

(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் சட்­டத்தை கவ­னத்திற் கொண்டு உரிய முறையில் உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்­று­மாறு அகி­ல இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.
அத்­தோடு, நாட்டின் மரபை பேணி போயா தினத்தில் உழ்­ஹியா நிறை­வேற்­று­வதை தவிர்த்துக் கொள்­ளு­மாறும், பிற சமூ­கத்­த­வர்கள் வேத­னைப்­படும் வகை­யிலோ அல்­லது அவர்­க­ளு­டைய உணர்வு தூண்­டப்­படும் வகை­யிலோ நடந்து கொள்ளக் கூடாது என்றும் உலமா சபை கோரிக்கை விடுத்­துள்­ளது.

மேலும், நாட்டு மக்கள் பொரு­ளா­தார ரீதியில் பாரிய நெருக்­க­டியைச் சந்­தித்­துள்ள இச்­சூழ்­நி­லையில் உழ்­ஹிய்யா இறைச்­சியை பகிர்ந்­த­ளிக்கும் போது, அரிசி போன்ற அத்­தி­ய­ாவ­சியப் பொருட்­க­ளையும் மேல­திக சத­கா­வாக கொடுப்­ப­தற்கு முடி­யு­மான ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறு உலமா சபை வேண்­டி­யுள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள உழ்­ஹிய்யா வழி­காட்­ட­லி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உலமா சபையின் பதில் பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷைக் எம்.ஏ.ஸி.எம். பாழில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

  • எப்­பி­ர­தே­சங்­களில் மாடு­களை உழ்­ஹிய்­யா­வாக நிறை­வேற்­று­வது சிர­ம­மாக உள்­ளதோ, அப்­பி­ர­தே­சங்­களில் ஆடு­களை உழ்­ஹிய்­யா­வாக நிறை­வேற்றிக் கொள்­ளவும்.
  • நம் நாட்டின் சட்­டத்தை கவ­னத்திற் கொண்டு, மிரு­கத்தின் உரி­மைக்­கான சான்­றிதழ், மாட்டு விபரச் சீட்டு, சுகா­தார அத்­தாட்சிப் பத்­திரம், மிரு­கங்­களை எடுத்துச் செல்­வ­தற்­கான அனு­மதிப் பத்­திரம் போன்ற ஆவ­ணங்­களை முன்­கூட்­டியே தயார்­ப­டுத்திக் கொள்ளல் வேண்டும்.
  • அனு­ம­தி­யின்றி உழ்­ஹிய்­யா­வுக்­கான பிரா­ணி­களை வண்­டி­களில் ஏற்றி வரு­வ­தையும், அனு­மதி பெற்­றதை விட கூடு­த­லான எண்­ணிக்­கையில் எடுத்து வரு­வ­தையும் முற்­றிலும் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.
    மிரு­கங்­க­ளுக்கு எச்­சந்­தர்ப்­பத்­திலும் எவ்­வித நோவி­னை­யையும் கொடுப்­பது கூடாது.
  • குர்­பா­னிக்கு பயன்­ப­டுத்­தப்­படும் இடத்தை சுத்­த­மாக வைத்துக் கொள்­வ­தோடு, அறுவைப் பிரா­ணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழி­வுப்­பொ­ருட்­களை அகற்றும் போது சுகா­தார விதி­மு­றை­களைப் பேணிக் கொள்ள வேண்டும்.
    பல்­லின மக்­க­ளோடு வாழும் நாம் பிற சமூ­கத்­த­வர்கள் வேத­னைப்­படும் வகை­யிலோ அல்­லது அவர்­க­ளு­டைய உணர்வு தூண்­டப்­படும் வகை­யிலோ நடந்து கொள்ளக் கூடாது.
  • நாட்டின் மரபைப் பேணும் வகையில் பௌத்­தர்­களால் கண்­ணி­யப்­ப­டுத்­தப்­படும் போயா தினத்­தன்று உழ்­ஹிய்யா நிறை­வேற்­று­வதை கண்­டிப்­பாக தவிர்ந்துக் கொள்­வ­தோடு, ஏனைய நாட்­களை இதற்­காகப் பயன்­ப­டுத்திக் கொள்ளல் வேண்டும்.
  • உழ்­ஹிய்யா நிறை­வேற்­றப்­படும் போது படங்கள் அல்­லது வீடி­யோக்கள் எடுப்­பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்­பாக, சமூக வலைத்­த­ளங்­களில் அவற்றைப் பகிர்ந்து கொள்­வதை கண்­டிப்­பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பள்­ளி­வாசல் இமாம்கள், கதீப்­மார்கள் உழ்­ஹிய்­யாவின் சிறப்­பையும், அவ­சி­யத்­தையும் பற்றிப் பேசு­வ­தோடு அதன் சட்ட திட்­டங்­க­ளையும், ஒழுங்கு முறை­க­ளையும் குறிப்­பாக மிருக அறுப்பை விரும்­பாத பல்­லின மக்கள் வாழு­கின்ற சூழலில் அவர்­களின் உணர்­வுகள் பாதிக்­கப்­ப­டாத வண்ணம் முறை­யாக இக்­க­ட­மையை நிறை­வேற்­று­வது பற்­றியும் முஸ்­லிம்­க­ளுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ள இச்சூழ்நிலையில் உழ்ஹிய்யா இறைச்சியை பகிர்ந்தளிக்கும் போது அவற்றை சமைத்துண்பதற்குத் தேவையான அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் மேலதிக சதகாவாக கொடுப்பதற்கு முடியுமான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜம்இய்யதுல் உலமாவினால் வலியுறுத்தி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.