வக்பு சபையின் செயற்பாடுகள் அமைச்சரினால் நிறுத்தம்

தலைவர் உட்பட உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அறிவிப்பு

0 318

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் பத­வி­யி­லி­ருந்த வக்பு சபையின் செயற்­பா­டு­களை நிறுத்தி வைத்­துள்­ள­தாக புத்த சாசன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க கடிதம் மூலம் வக்பு சபையின் தலைவர் உட்­பட உறுப்­பி­னர்­க­ளுக்கு அறி­வித்­துள்ளார்.

இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ள வக்பு சபை 2020 ஆம் ஆண்டு அப்­போ­தைய பிர­த­மரும், புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்­ச­ராக பதவி வகித்த மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் நிய­மிக்­கப்­பட்­ட­தாகும். இதன் பத­விக்­காலம் 3 வரு­டங்கள் எனினும் பத­விக்­காலம் நிறை­வு­பெ­று­வ­தற்கு முன்பே வக்பு சபை கலைக்­கப்­பட்­டுள்­ளது.

2020 முதல் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வரை சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மையில் வக்பு சபை செய­லாற்றி வந்­தது. இதன் ஏனைய உறுப்­பி­னர்­க­ளாக ஏ.உதுமான் லெப்பை, ஸக்கி அஹமட், அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், எம்.ரபீக் இஸ்­மாயில், எம்.சிராஜ் அப்துல் வாஹிட் மற்றும் மெளலவி எம்.பஸ்ருல் ரஹ்மான் ஆகியோர் பதவி வகித்தனர்.

வக்பு சபையின் செயற்பாடுகள் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுரவிக்ரமநாயக்கவின் சார்பில் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபதி கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அக் கடிதத்தில் தற்போதைய வக்பு சபை செயற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் வக்பு சபைக்கு புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வக்பு சபையின் 1982 ஆம் ஆண்டின் 33 ஆம் பிரிவின் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் வக்பு சபையின் செயற்பாடுகள் நிறுத்தி வைத்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் சோமரத்ன தெரிவித்தார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.