போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் குறித்து கிராமத்தவர்கள் கவனம் செலுத்த வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்

0 263

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘சிறுமி ஆயி­ஷாவை கொடூ­ர­மாக கொலை செய்­த­வர்கள் அது யாராக இருந்­தாலும் எவ்­வித மன்­னிப்பும் வழங்­கப்­ப­டாது நீதியின் முன் நிறுத்­தப்­பட்டு தண்­டிக்­கப்­பட வேண்டும்.
அத்­தோடு இவ்­வா­றான கொடூர செயல்­களைத் தடுப்­ப­தற்கு குறிப்­பாக போதைப் பொரு­ளுக்கு அடி­மை­யா­கி­யுள்ள இளை­ஞர்கள் தொடர்பில் கிரா­மத்­த­வர்கள் உன்­னிப்­புடன் கவனம் செலுத்த வேண்டும்’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் கடந்த ஞாயிற்றுக்­கி­ழமை கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்ட சிறுமி ஆயி­ஷாவின் கிராமம் அட்­டு­லு­க­ம­வுக்கு விஜயம் செய்து, சிறு­மியின் குடும்­பத்­தி­னரைச் சந்­தித்து தனது அனு­தா­பங்­களைத் தெரி­வித்துக் கொண்டார். பின்பு அங்கு குழு­மி­யி­ருந்த கிரா­மத்­த­வர்கள் மத்­தியில் பேசு­கை­யிலே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் அங்கு உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, அட்­டு­லு­கம கிரா­மத்தில் கொடூ­ர­மாக கொலை­செய்­யப்­பட்­டுள்ள சிறு­மியின் கொலை தொடர்பில் முழு இலங்கை மக்­களும் துய­ரத்தில் ஆழ்ந்­துள்­ளனர். இச்­சந்­தர்ப்­பத்தில் எங்­க­ளது ஆழ்ந்த அனு­தா­பங்­க­ளையும் கவ­லை­யையும் தெரி­வித்­துக்­கொள்­கிறேன்.

இந்தக் கொடூரச் செயலைச் செய்­த­வர்கள் அது யாராக இருந்­தாலும் எவ்­வித மன்­னிப்பும் வழங்­கப்­ப­டாது நீதியின் முன் நிறுத்­தப்­பட்டு தண்­டிக்­கப்­பட வேண்டும். இது தொடர்பில் அனை­வரும் எதிர்­பார்த்­தி­ருக்­கி­றார்கள்.

நான் இப்­பி­ர­தே­சத்­துக்குப் பொறுப்­பான பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யுடன் இச்­சம்­பவம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினேன். இச்­சம்­பவம் தொடர்­பான பல தக­வல்கள் தனக்குக் கிடைத்­தி­ருப்­ப­தாக அவர் என்­னிடம் கூறினார். அந்தத் தக­வல்­களின் அடிப்­ப­டையில் இன்னும் இரண்­டொரு தினங்­களில் இறுதி முடி­வுக்கு வரலாம் என்ற நம்­பிக்கை தனக்­கி­ருப்ப­தா­கவும் அவர் கூறினார். இந்த மர்மக் கொலை தொடர்பில் இறுதி தீர்­மானத்தை எட்ட முடியும் என்றும் தெரி­வித்தார்.

மேலும் கொலை தொடர்பில் விட­யங்­களை தேடிக் கண்­டு­பி­டிப்­ப­தற்­காக பெரும் எண்­ணிக்­கை­யி­லான பொலிஸ் அதி­கா­ரிகள், சி.ஐ.டி. விசா­ரணைக் குழு­வினர் கட­மையில் ஈடு­பட்­டுள்­ளனர். விரைவில் இக்­கொ­லை­யுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் சட்­டத்தின் பிடியில் சிக்­கு­வார்­க­ளென நாங்கள் நம்­பு­கிறோம்.

இவ்­வா­றான கொடூர செயல்­களைத் தடுப்­ப­தற்கு குறிப்­பாக போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யா­கி­யுள்ள இளை­ஞர்கள் தொடர்பில் கிராமத்தவர்கள் உன்னிப்புடன் கவனம் செலுத்த வேண்டும். நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பேசப்படுகிறது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை பொலிஸாரும் சிவில் சமூகமும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.