ஐ.எஸ். உடனான போரில் வெற்றி ஈராக்கில் மக்கள் கொண்டாட்டம்

0 530

ஐ.எஸ். தீவிரவாதிகளை வெற்றி கொண்டு  ஒரு வருடம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஈராக் அரசு அதனை கொண்டாடியுள்ளது.

பல ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த போரை ஈராக்  அரசு கடந்த டிசம்பர் மாதம் வெற்றி கொண்டது.  இதனைக் கொண்டாடும் விதமாக திங்கட்கிழமை தேசிய விடுமுறை அறிவித்து ஈராக் கொண்டாத்தில் ஈடுபட்டது. மேலும் அரசு சார்பில் வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது.  அந்நாட்டின் தேசியக் கொடி மற்றும் பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

மேலும், இந்தக் கொண்டாட்ட தினத்தில், அரச தூதரக அலுவலங்கள் போன்றவற்றைக் காண  பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் எழுச்சியால் பெரும் குழப்பம், அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிலையில் ஈராக்கிலிருந்து 2014 ஆம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமானது. இதையடுத்து அவர்களை ஒடுக்க ஈராக்  நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனைத் தொடர்ந்து ஈராக் நாட்டுக்கு உட்பட்ட மோசூல் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.