ஒரே நாடு ஒரே சட்டமும் இஸ்லாம் பாடப் புத்தகங்களும்

0 672

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

ஒரே நாடு ஒரே சட்டச் செய­ல­ணியின் பரிந்­து­ரை­க­ளினால் பாட­சா­லை­களில் மாண­வர்கள் படிக்கும் இஸ்லாம் சமய பாடப்­புத்­த­கங்­களின் உள்­ள­டக்­கத்தில் சில மாற்­றங்­களை கல்வி இலாகா புகுத்­தி­யுள்­ள­தாக அறி­கிறோம். இந்த மாற்­றங்கள் எவை, அவை ஏன் மாற்­றப்­பட்­டன என்­பன பற்­றிய விப­ரங்­களை இது­வரை கல்வி இலாகா வெளி­யி­டா­தது பல சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ளது. இந்தச் சந்­தே­கங்­களை நீக்­கு­வதில் முஸ்­லிம்­களின் நாடா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­களும் மௌனி­க­ளாகிச் செய­லி­ழந்து நிற்­பதை முஸ்­லிம்­களால் புரிந்­து ­கொள்ள முடி­ய­வில்லை. எனவே இப்­பிரச்­சி­னை­களைப் பற்­றிய சில பொது­வான கருத்­துக்­களை இக்­கட்­டுரை விடி­வெள்ளி வாச­கர்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்ள விளை­கின்­றது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷம் எழுந்­ததன் பின்­ன­ணியே முஸ்­லிம்­களின் திரு­மண விவா­க­ரத்துச் சட்டம் சம்­பந்­த­மான பிரச்­சி­னைதான். கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சா­ரத்தில் இந்­நாட்டின் இஸ்­லா­மோ­போ­பி­யர்கள் அந்தப் பிரச்­சி­னையை மைய­மா­க­ வைத்து ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்­தையும் முன்­வைத்து சிங்­கள பௌத்த வாக்­கா­ளர்­க­ளி­டையே கோத்­தா­பய ராஜ­பக்­ச­வுக்கு ஆத­ரவு திரட்டித் தேர்­தலை வென்­றெ­டுத்­தனர். எனவே வெற்­றி­பெற்ற புதிய ஜனா­தி­பதி இஸ்­லா­மோ­போ­பி­யர்­களின் கோஷத்தை அமுல்­ப­டுத்­த­வேண்­டிய கட்­டா­யத்­துக்கு உள்­ளானார். ஆகவே அதற்­காக ஒரு செய­ல­ணியை உரு­வாக்கி அதற்குத் தலை­வ­ராக ஞான­சார தேரரை நிய­மித்தார். இவ­ரைப்­பற்றி ஏற்­க­னவே ஒரு கட்­டு­ரையில் நான் விளக்­கி­யுள்­ளதால் அந்த விப­ரங்­களை மீண்டும் இங்கே விப­ரிப்­பது பொருத்­த­மா­காது.

இச்­செ­ய­லணி சட்டம் சம்­பந்­த­மா­னது என்­பதை வாச­கர்கள் முதலில் உண­ர­வேண்டும். இந்­நி­லையில் சட்ட வல்­லுனர் ஒருவர் நீதி அமைச்­ச­ராக இருக்­கையில் அவ­ரையும் கலந்­தா­லோ­சிக்­காமல் நீதி­மன்­றத்­தையே அவ­ம­தித்­த­தற்­காகச் சிறை­சென்று முன்­னைய ஜனா­தி­பதி சிறி­சே­னாவின் அர­சியல் நலன்­க­ருதி மன்­னிப்பு வழங்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்ட ஒரு கைதியை இச்­செ­ய­ல­ணிக்குத் தலை­வ­னாக்­கி­யமை நீதி அமைச்­சரின் முகத்தில் கரி பூசவா அல்­லது முஸ்லிம் சமூ­கத்­தையே அவ­மா­னப்­ப­டுத்­தவா? எது­வா­கினும் பள்­ளிக்­கூட மாண­வர்­களின் இஸ்­லாம்­பாடப் புத்­த­கங்­களில் இந்தச் செய­லணி கைவைத்­ததன் பொது­வான நோக்­க­மென்ன?

2019 ஈஸ்டர் பண்­டிகை தினத்­தன்று சஹ்­ரானின் கொலை­காரக் கும்பல் நடத்­திய கொலை­வெறி ஆட்­டத்தால் இஸ்­லாமே பயங்­க­ர­வா­தத்தைத் தோற்­று­விக்கும் ஒரு மார்க்கம் என்ற இஸ்­லா­மோ­போ­பி­யரின் உல­க­ளா­விய விஷ­போ­த­னையை அவர்­க­ளது இலங்­கையின் சகாக்­களும் இங்கே பரப்­ப­லா­யினர். அதனை நிரூ­பிக்கும் முக­மாக குர்­ஆ­னி­லுள்ள போர்­பற்­றிய வச­னங்­களைப் பொறுக்­கி­யெ­டுத்து அவை என்ன சந்­தர்ப்­பத்தில் நபி­க­ளா­ருக்கு அரு­ளப்­பட்­டன என்­பதை உத­றித்­தள்ளி அவைதான் இப்­ப­யங்­க­ர­வா­தத்­துக்கு வழி­காட்­டு­கின்­றன என்று வாதிட்­டனர்.

இவ்­வா­றான ஒரு கொந்­த­ளிப்­பான சூழ­லுக்கு மத்­தி­யி­லேதான் முஸ்­லிம்­களை மூளைச்­ச­லவை செய்­ய­வேண்டும் என்ற குரல்கள் உல­கெங்கும் கேட்கத் தொடங்­கின. அந்தக் குரல்­க­ளுக்குப் பின்னால் சில பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பணி­பு­ரியும் இஸ்­லா­மோ­போ­பிய பேரா­சி­ரி­யர்­களும் அடங்­குவர். அவர்­களின் ஆலோ­ச­னை­களை சில அர­சாங்­கங்கள் விலை­கொ­டுத்து வாங்­கி­ய­தாலும் பல செய்­தித்­தா­ப­னங்கள் அவர்­களின் கருத்­து­க­ளுக்கு முக்­கிய இட­ம­ளித்­த­தாலும் அவர்கள் சர்­வ­தேச மேடை­களில் கொடி­கட்டிப் பறக்­க­லா­யினர். ஆனால் அவர்­க­ளுக்கு இஸ்­லாத்­தைப்­பற்­றியோ அதன் வர­லாறு பற்­றியோ முஸ்­லிம்கள் பேசும் மொழி­களைப் பற்­றியோ எந்த அள­வுக்கு அறி­வுண்டு என்­பதை யாரும் எடை­போட முன்­வ­ர­வில்லை.

அவர்­களின் அரை­குறை அறிவால் எவ்­வாறு சில முஸ்லிம் சிறு­பான்மைச் சமூ­கங்கள் இன­வெ­றிக்குப் பலி­யா­கி­யுள்­ளன என்­பதை இப்­போ­துதான் சில ஆய்­வா­ளர்கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். உதா­ர­ண­மாக, இன்று சீனாவில் உய்கர் முஸ்­லிம்கள் சீன அரசின் மூளைச்­ச­ல­வைக்குப் பலி­யா­கி­யுள்­ளதை உலகே அறியும். அந்த உய்­கர்­களின் மொழியே தெரி­யாமல் அவர்­களின் அர­சியல் இயக்­கங்­க­ளுக்கு பயங்­க­ர­வாதப் பட்­டம்சூட்டி அவர்­களை பயங்­க­ர­வா­தி­க­ளென உல­குக்குச் சித்­த­ரித்த சிங்­கப்பூர் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பேரா­சி­ரியர் ரொஹான் குண­ரத்­தி­னவின் விஷ­மத்­த­ன­மான ஆய்­வினை உய்கர் மொழி­யைக்­கற்று அவர்­களை நேரில் சந்­தித்து உரை­யாடி உண்­மையை அறிந்த அமெ­ரிக்கப் பேரா­சி­ரியர் Sean Robers தனது The War on The Uyghurs என்ற நூலில் வெகு­வாகக் கண்­டித்­துள்ளார். அதே பேரா­சி­ரியர் குண­ரத்­தின காத்­தான்­குடி மௌலவி அப்துல் ரவூபின் “வான்­மறை மறுக்கும் வஹ்­ஹா­பிஸம்” என்ற தமிழ் நூலுக்கும் ஒரு முன்­னுரை ஆங்­கி­லத்தில் எழு­தி­யுள்ளார் என்­பதும் இங்கே குறிப்­பி­டத்­தக்­கது. இந்தப் பேரா­சி­ரியர் அந்தத் தமிழ் நூலை முற்­றாக வாசித்­தாரா என்­பது வேறு விடயம்.

எனினும் இந்தப் பேரா­சி­ரி­யரின் முஸ்லிம் பயங்­க­ர­வாதம் பற்­றிய கருத்­துக்­களும் வாதங்­களும் ஒரே நாடு ஒரே சட்டச் செய­லணித் தலைவர் ஞான­சா­ர­ரையும் அவ­ரது பொது­பல சேனா இயக்­கத்­தையும் கவர்ந்­துள்­ளது பர­க­சியம். ஞான­சாரர் காத்­தான்­குடி சென்­றதும் அங்கே அவ­ருக்கு ரவூப் மௌல­வியின் பள்­ளி­வா­சலில் வர­வேற்­ப­ளிக்­கப்­பட்­டதும் அதன் பிறகு ஞான­சா­ரரின் தூண்­டு­தலால் இரா­ஜாங்க அமைச்சர் ஒருவர் நீதி அமைச்­ச­ருக்கு இந்த மௌலவி சார்­பாகக் கடிதம் எழு­தி­யதும் நாட­றிந்த விட­யங்கள். இந்த நிகழ்­வு­களைப் பின்­ன­ணி­யாகக் கொண்­டுதான் ஒரே நாடு ஒரே சட்டச் செய­ல­ணியின் பாடப்­புத்­தகம் சம்­பந்­த­மான பரிந்­து­ரை­களை அணு­க­வேண்­டி­யுள்­ளது. ஆனால் அந்தப் பரிந்­து­ரைகள் என்­ன­வென்­பதை அரசு வெளிப்­ப­டுத்­த­வேண்டும். அதை­யா­வது ஏன் முஸ்லிம் பிர­தி­நி­திகள் நாடா­ளு­மன்­றத்தில் கேட்­கக்­கூ­டாது?

இது­பற்றி இன்­னு­மொரு உண்­மை­யையும் மறந்­து­விடக் கூடாது. அதா­வது பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­தின்கீழ் குற்­ற­வா­ளி­க­ளென நிரூ­பிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்கும் திட்­ட­மொன்றும் அர­சிடம் உண்டு. அதற்­கென பிரத்­தி­யே­க­மான முகாம்­களும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இவை சீனாவின் உய்கர் முகாம்­களின் ஒரு நகல் என்­பதை மறுக்­க­மு­டி­யுமா? சீனாவின் சீட­னல்­லவா இன்­றைய இலங்கை அரசு? ஆகவே அங்­குபோல் இங்கும் நடக்­கப்­போ­வது மூளைச்­ச­லவை எனக்­க­ரு­து­வதில் தவ­றுண்டா?
இவற்­றை­யெல்லாம் பின்­ன­ணி­யா­கக்­கொண்டு நோக்­கு­கையில் கல்வி இலா­காவின் இஸ்லாம் பாடப்­புத்­த­கங்­களின் திருத்தம் பலத்த சந்­தே­கங்­களை எழுப்­பு­கின்­றன. மாண­வர்­க­ளுக்கு ஊட்­டப்­படும் கல்வி அவர்­களை எதைப்­பற்­றியும் யதார்த்­த­மாகச் சிந்­திக்கத் தூண்­டு­வ­தா­கவும் நாட்­டுப்­பற்­றையும் இன ஒற்­று­மை­யையும் வளர்ப்­ப­தா­கவும் அதே­ச­மயம் மாண­வர்கள் தொழில்­வாய்ப்­பினைப் பெறு­வ­தற்கு ஏது­வா­கவும் அமைதல் வேண்டும் என்­பதை யாரும் மறுக்க முடி­யாது. கிளிப்­பிள்­ளைபோல் பழை­ய­தையே மனப்­பா­டம்­ பண்ணி ஒப்­பு­விக்கும் கல்வி ஏட்டுச் சுரைக்­கா­யா­கவே இருக்கும். இந்த எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு இஸ்லாம் பாடம் விதி­வி­லக்­காக இருக்க முடி­யாது. எனவே அவற்றை நோக்­கா­கக்­கொண்டு மேற்­கொள்­ளப்­படும் பாடச் சீர்­தி­ருத்­தங்­களை எல்­லாரும் வர­வேற்­க­வேண்டும். அதே சமயம் பல்­லி­னக்­ க­லா­சா­ரத்தைக் கொண்ட இலங்­கையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்­வையில் ஓரி­னக்­க­லா­சா­ரத்­துக்கு மாற்­று­வ­தாக கல்விச் சீர்­தி­ருத்­தங்கள் அமை­யு­மாயின் அது நாட்டின் இன அமை­தி­யையும் குலைத்து பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் தடை­யாகி உலக அரங்கின் எதிர்ப்­பையும் சம்­பா­திக்­கலாம். அவ்­வா­றான மாற்­றங்கள் மூளைச்­ச­ல­வையின் படி­மு­றை­க­ளாக அமை­வது திண்ணம். சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்­தையே சதா உச்­ச­ரித்துக் கொண்­டி­ருக்கும் அரசின் கல்­வி­யா­ளர்கள் மத்­தியில் சீர்­தி­ருத்­தங்கள் மூளைச்­ச­ல­வையின் படிக்­கல்­க­ளாக அமை­யலாம் என்ற ஒரு பயம் இப்­போது எழுந்துள்ளது.

இஸ்லாம் பாடப்­புத்­த­கங்­களில் நுழைக்­கப்­பட்­டுள்ள கருத்­துக்கள் எல்­லாமே அடிப்­ப­டையில் குர்­ஆனை தழு­வி­ய­ன­வா­கவே இருப்­பது தவிர்க்க முடி­யாத ஒரு நியதி. இந்த நியதி எல்லா மதங்­க­ளுக்கும் பொருந்தும். உதா­ர­ண­மாக, ஒரு பௌத்­த­மதப் பாடப்­புத்­த­கத்தில் பௌத்த பெரு­மானின் போத­னை­க­ளுக்கு நேர்­மா­றான கருத்­துக்­களை அனு­ம­திக்­க­லாமா? அவ்­வாறு அனு­ம­திக்­கப்­பட்டால் அது ஈற்றில் பௌத்த பெரு­மா­னையே நிரா­க­ரிக்கும் அள­வுக்கு அவற்றைப் படிக்கும் மாண­வர்­களைக் கொண்டு செல்­லாதா? அதே போன்­றுதான் குர்­ஆ­னுக்கு நேர்­மா­றான கருத்­துக்கள் சீர்­தி­ருத்தம் என்ற போர்­வையில் பாடப்­புத்­த­கங்­க­ளுக்குள் நுழைக்­கப்­ப­டு­மானால் அது குர்­ஆ­னையே நிரா­க­ரிப்­ப­துபோல் ஆகாதா? என­வேதான் இப்­போது கல்வி இலாகா எடுத்­துள்ள நட­வ­டிக்கை முஸ்­லிம்கள் மத்­தியில் பல சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ளது. அதனைத் தீர்த்­து­வைப்­பது அவ்­வி­லா­காவின் கடமை. முஸ்லிம் பிரதிநிதிகள் உண்மையை அறிந்து அதனை விரைவில் வெளிப்படுத்துவார்களா?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.