அமைச்சர் கம்பன்பில என்னை பதவி விலகும்படி பணித்தார்

பெற்றோலிய களஞ்சிய நிறுவனத்தின் பணிப்பாளர் உவைஸ்

0 383

(ஏ..ஆர்.ஏ.பரீல்)
இலங்கை பொற்­றோ­லிய களஞ்­சிய டர்­மினல் லிமிடட் (CPSTL) நிறு­வ­னத்தின் தலை­வரும், முகா­மைத்­துவ பணிப்­பா­ள­ரு­மான உவைஸ் மொஹமட் தனது பத­வி­யினை கடந்த 21ஆம் திகதி இரா­ஜி­னாமா செய்­துள்ளார்.

அவர் தனது இரா­ஜி­னாமா கடி­தத்தை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளித்­துள்ளார். உவைஸ் மொஹமட் தனது பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்து கொள்­ளும்­படி எரி­சக்தி அமைச்சர் உத­ய­கம்­மன்­பி­ல­வினால் கடந்த 20 ஆம் திகதி கோரப்­பட்­டி­ருந்­தார். இந்தப் பத­விக்கு அமைச்­சரின் சிபா­ரிசின் கீழ் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்­கா­கவே உவைஸ் மொஹமட் இரா­ஜி­னாமா செய்­யும்­படி அமைச்­ச­ரினால் கோரப்­பட்­டி­ருந்­தது.
எரி­சக்தி அமைச்சர் உதய கம்­மன்­பிலவின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­வா­கவே தான் பத­வியை இரா­ஜி­னாமா செய்­வ­தாக அவர் ஜனா­தி­ப­திக்கு கைய­ளித்­துள்ள இரா­ஜி­னாமா கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார். கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; ‘எனது பத­விக்கு அமைச்சர் உதய கம்­மன்­பில தான் தெரிவு செய்யும் ஒரு­வரை நிய­மிக்­க­வுள்ளார். ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் பொது ஜன பெர­முன கட்சி என்போர் நான் எனது கட­மை­யினை சிறந்த முறையில் மேற்­கொள்­வ­தற்கு ஒத்­து­ழைத்­த­மைக்­காக நன்­றி­க­ளையும் பாராட்­டு­க­ளையும் தெரி­வித்­துக்­கொள்­கிறேன்.

மேலும் நிறு­வ­னத்­தின்­அ­பி­வி­ருத்­திக்­காக என்­னுடன் சேர்ந்து பணி­யாற்­றிய ஊழி­யர்கள் ஐ.ஓ.சி. நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் சபை, அமைச்சின் பணிப்­பா­ளர்கள், அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் அவர்கள் எனது பதவிக் காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.