ஜனாசா எரிப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம்

வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களின் வாக்குகள் தங்கத்துக்கு ஒப்பானவை என்கிறார் பிமல் ரத்நாயக்க

0 253

நேர்­காணல்: எம்.வை.எம்.சியாம்

சிங்­க­ள­வர்கள் மத்­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவும் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும் பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுத்தே பிர­தான அர­சியல் தரப்­பினர் இது­வ­ரையில் செயற்­பாட்டு ரீதி­யி­லான அர­சி­யலில் ஈடு­பட்­டுள்­ளார்கள். அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கப்­பட்டே முஸ்­லிம்­களின் வாக்­குகள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களை விற்­பனை செய்யும் ஒரு கலாச்­சா­ரமே தற்­போது காணப்­ப­டு­கி­றது என்று தேசிய மக்கள் சக்­தியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

அத்­துடன் முறை­யற்ற அர­சியல் கலாச்­சா­ரத்தை இம்­முறை முடி­வுக்கு கொண்டு வர­வேண்டும். அனைத்து இன மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து சிறந்த அர­சியல் கலாச்­சா­ரத்தை நாங்கள் தோற்­று­விப்போம். முஸ்லிம் மக்கள் எம்­முடன் உள்­ளார்கள். அவர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நியா­யத்தை பெற்­றுக்­கொ­டுப்போம் என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

விடி­வெள்­ளிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

Q: தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரது வெற்றி வாய்ப்பு எந்­த­ள­வுக்கு உள்­ளது?
இம்­முறை தேர்­தலில் வெற்றி பெற அதிக வாய்ப்­புள்­ளது.எமக்கு பல­மிக்க மக்­க­ளாணை கிடைக்கும் என நம்­பு­கிறோம். சாதா­ரண பொது­மக்கள் தொழில் வல்­லு­நர்கள் இளைஞர் யுவ­திகள் உள்­ளிட்ட வெவ்­வேறு துறை­களில் உள்­ள­வர்கள் எமக்­காக வாக்­க­ளிக்க தயா­ராக உள்­ளனர்.

நாம் அவர்­க­ளி­டத்தில் எமக்­காக வாக்­க­ளிக்­க­ளி­யுங்கள் எனக்­கூ­ற­வில்லை.இம்­முறை மக்­களே புதிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என நினைக்­கி­றார்கள். அதே­போன்று இதற்கு முன்னர் ஆட்சி செய்த அர­சாங்­கங்கள் ஆட்­சி­யா­ளர்கள் மீது மக்கள் அதி­ருப்தி அடைந்­துள்­ளனர்.எனவே இந்த தேர்­தலை வெற்­றி­கொள்ள முடியும் என நான் நினைக்­கிறேன்.

Q:அ­நு­ர­கு­மார திசா­நா­யக்க 50 வீதத்­துக்கும் மேல் வாக்­கு­களைப் பெற்று வெற்றி பெறுவார் என்ற நம்­பிக்கை உள்­ளதா? அல்­லது விருப்பு வாக்­குகள் தான் வெற்­றியை தீர்­மா­னிக்­குமா?
நிச்­சயம் பெரும்­பான்மை வாக்­குடன் அநு­ர­கு­மார வெற்றி பெறுவார். விருப்பு வாக்­குக்கு செல்ல வேண்­டிய தேவை ஏற்­ப­டாது. காரணம் தற்­போ­தைய ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களில் அநு­ர­கு­மார திசா­நா­யக்க மற்றும் சஜித் பிரே­ம­தாச இடை­யி­லேயே போட்டி நில­வு­கி­றது. எனவே மக்கள் அநு­ரவை ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்வர்.

Q:ஜ­னா­தி­ப­தித்­தேர்­தலில் வெற்றி பெற்­றாலும் பாரா­ளு­மன்­றத்தில் உங்­களால் பெரும்­பான்­மையைப் பெற முடி­யுமா? ஜனா­தி­பதி ஒரு கட்சி பிர­தமர் வேறு கட்சி என்ற ஸ்திர­மற்ற ஆட்­சிதான் வருமா?
ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெற முடி­யு­மானால் எம்மால் நிச்­சயம் பொதுத்­தேர்­த­லிலும் வெற்றி பெற முடியும். அதே­போன்று பாரா­ளு­மன்­றத்­திலும் பெரும்­பான்மை பலத்தை நிரு­பிக்க முடியும்.

Q:ஜே.வி.பி.யின் கடந்த கால வர­லா­றுகள் குறிப்­பாக 1980 களில் ஏற்­பட்ட கிளர்ச்­சி­களை அடிப்­ப­டை­யாக வைத்து தேசிய மக்கள் சக்­திக்கு எதி­ராக பிரா­சாரம் செய்­கி­றார்­களே?
இந்த குற்­றச்­சாட்­டுக்கள் அடிப்­ப­டை­யற்­றவை. 1989 இல் இருந்து இன்­றைக்கு 35 வரு­டங்கள் கடந்­துள்­ளன. நாம் தற்­போது ஜன­நா­யக கோட்­பாட்­டுக்குள் உள்­வாங்­கப்­பட்­டுள்ளோம். கடந்த பல தசாப்­தங்­க­ளாக ஜன­நா­யக ரீதி­யாக நாம் தேர்தல் பிர­சா­ரங்­களில் ஈடு­பட்டு வரு­கிறோம். தேர்­தலின் பின்­னரும் எமக்கு வாக்­க­ளித்த மற்றும் வாக்­க­ளிக்­காத அனைத்து தரப்­பி­ன­ரையும் இணைத்­துக்­கொண்டே அர­சியல் செய்வோம்.

கடந்த காலங்­களில் தேர்தல் பிர­சா­ரங்­களில் பொது­ஜன பெர­முன மற்றும் ஐக்­கிய தேசிய கட்­சியின் அர­சாங்­கத்தில் எங்­க­ளு­டைய தரப்பை சேர்ந்த சுமார் 10க்கும் மேற்ப்­பட்­ட­வர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள். எமக்கு எதி­ராக துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­டனர். கடத்திச் சென்று தாக்­குதல் மேற்­கொண்­டனர். துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கினர். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது. குறிப்­பாக பிள்­ளையான் என்­பவர் யார்? இந்த தாக்­கு­த­லுக்கும் அவ­ருக்கும் தொடர்­புள்­ள­தாக தற்­போது சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது. ஆனால் அவர் ஆளுங்­கட்­சியின் இரா­ஜாங்க அமைச்சர் பொறுப்பில் இருக்­கிறார்.

அத்­துடன் எமக்கு எதி­ராக குற்றம் சுமத்­து­ப­வர்கள் ஜனா­தி­ப­தி­யா­கவும் பிர­த­ம­ரா­கவும் பத­வியில் இருக்கும் போதே கொலை செய்யும் அர­சியல் கலா­சா­ரத்­தையே பின்­பற்­றினர்.சட்­டங்­களை புறக்­க­ணித்து குற்­றங்­களை செய்து விட்டு தமக்கு எதி­ராக செயற்­ப­டு­வர்கள் மீது அந்தப் பழியை போட்டு விடு­கி­றார்கள்.
குறிப்­பாக 2001 இல் அர­சி­ய­ல­மைப்பின் 17 ஆவது திருத்­தத்­தையும் 2019 இல் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தத்தின் தேவைப்­பாட்­டையும் நாமே வலி­யு­றுத்­தினோம். எனவே நாம் ஜன­நா­ய­கத்­துக்­கா­கவும் நாட்டின் நல்­லி­ணக்­கத்­துக்­கா­கவும் பல தட­வைகள் குரல் எழுப்­பி­யுள்ளோம். எனவே தற்­போது உள்ள கட்­சி­களை விடவும் அர­சி­யல்­வா­தி­க­ளையும் விடவும் நாமே மக்­க­ளுக்­காக முன்­னிற்­கிறோம்.

Q: வடக்கு கிழக்கில் தங்­க­ளது கட்­சியின் பிரா­சா­ரங்கள் போதா­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. அநு­ரவின் வெற்­றிக்கு வடக்கு கிழக்கு சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் தேவை­யில்லை என்று கரு­து­கி­றீர்­களா?
அவ்­வாறு நாம் கரு­த­வில்லை. நாம் வடக்கு கிழக்கு பிர­தே­சங்­களில் முடிந்­த­ளவு தேர்தல் பிர­சாங்­களை முன்­னெ­டுத்­துள்ளோம். யாழ்ப்­பாணம் முல்­லைத்­தீவு வவு­னியா மன்னார் உள்­ளிட்ட மாவட்­டங்­களின் தேசிய மக்கள் சக்­தியின் பிர­சா­ரங்கள் பிரத்­தி­யேக கூட்­டங்­களை முன்­னெ­டுக்­கிறோம். அண்­மையில் காங்­கே­சன்­துறை கிளி­நொச்சி மன்னார் பகு­தியில் எமது கட்சி அலு­வ­ல­கங்­க­ளையும் திறந்து வைத்தோம்.

அத்­துடன் வடக்கில் தேர்தல் இன்­னமும் சூடு பிடிக்­க­வில்லை.இருப்­பினும் நாம் எம்மால் முடிந்­த­ளவு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­துக்­கொண்டு செல்­கிறோம்.வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு மத்தி என அனைத்து பிர­தே­சங்­களில் உள்ள மக்­களின் வாக்­கு­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­பதி ஒரு­வரே நாட்­டுக்கு அவ­சி­யப்­ப­டு­கிறார். வடக்கு கிழக்கு மற்றும் மலை­யக மக்­களின் வாக்­கு­களை தங்­கத்­துக்கு ஒத்­த­தாக கரு­து­கிறோம். அவை அதிக பெறு­ம­தி­யு­டை­யவை. சிங்­கள முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் ஒன்­றி­ணைந்த சமூ­கத்தை உரு­வாக்­கவே எதிர்­பார்க்­கிறோம். மாற்­ற­மாக பிரித்­தாளும் கொள்கை எமக்­கில்லை.

Q:தே­சிய மக்கள் சக்­திக்கு முஸ்லிம் மத்­தியில் ஆத­ரவு அதி­க­ரித்­துள்­ள­தாக கரு­து­கி­றீர்­களா? அப்­ப­டி­யானால் இந்த மாற்­றத்­துக்கு என்ன காரணம்?
ஆம். குறிப்­பாக இம்­முறை தேர்தல் அனை­வ­ராலும் எதிர்­பார்க்­கப்­படும் மிக முக்­கிய தேர்­த­லாக கரு­தப்­ப­டு­கி­றது. காரணம் கடந்த காலங்­களில் முஸ்லிம் மக்­க­ளி­டத்தில் இன­வா­தத்தை அடிப்­ப­டை­யாக்­கொண்டே வாக்­குகள் பெறப்­பட்­டன. அத்­தோடு இந்த மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தலை­வர்கள் மக்­களின் வாக்­கு­களை பெற்றுக் கொண்டு அவர்கள் தனிப்­பட்ட அர­சியல் இலா­பங்­க­ளுக்­காக மக்­களை பயன்­ப­டுத்திக் கொண்­டார்கள். ஆனால் இம்­முறை மக்கள் அதனை புரிந்து கொண்­டுள்­ளனர். இன­வாத அர­சியல் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் மீது அதி­ருப்தி ஊழல் மோசடி மிக்க அர­சியல் மீது கொண்­டுள்ள வெறுப்பு என்­பன இவற்­றுக்கு மிக முக்­கிய கார­ண­மாகும். குறிப்­பாக முஸ்லிம் மக்கள் மாத்­தி­ம­ரல்ல தமிழ் மக்­க­ளுக்கும் எமக்கு ஆத­ர­வாக நிற்­கின்­றனர்.

Q: உங்­க­ளது ஆட்­சி­யிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான மத வன்­மு­றைகள் வெறுப்புப் பிர­சா­ரங்கள் இடம்­பெ­றாது என உத்­த­ர­வாதம் தர­மு­டி­யுமா?
நிச்­ச­ய­மாக அவ்­வாறு எதுவும் நடக்­காது என உறுதி வழங்­குவோம். அனைத்து இன மக்­களும் ஒற்­று­மை­யாக வாழக்­கூ­டிய தேசத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வதே எமது நிலைப்­பாடு.அனைத்து மக்­களின் அடிப்­படை உரி­மை­களும் பாது­காக்­கப்­பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது .அப்­பாவி கத்­தோ­லிக்க மக்கள் கொல்­லப்­பட்­ட­துடன் முஸ்லிம் மக்கள் பல்­வேறு நெருக்­க­டிக்கு முகங்­கொ­டுத்­தனர். எனவே இது தொடர்பில் உரிய முறையில் விசா­ரணை மேற்­கொண்டு நிச்­சயம் எமது அர­சாங்­கத்தில் தண்­டனை பெற்­றுக்­கொ­டுப்போம். அத்­தோடு கொவிட் காலப்­ப­கு­தியில் பல­வந்­த­மாக முஸ்லிம் மக்­களின் ஜனா­சாக்கள் எரிக்­கப்­பட்­டன. தற்­போது அர­சாங்கம் இதற்­காக பகி­ரங்­க­மாக மன்­னிப்பு கோரி­யுள்­ளது .இருப்­பினும் மன்­னிப்பு கோரு­வதன் மூலம் இதனை இல­கு­வாக கடந்து செல்ல முடி­யாது. அந்த காலப்­ப­கு­தியில் இன­வாத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு அர­சியல் செய்­வ­தற்கு பயன்­ப­டுத்­திய உத்­தியே இந்த ஜனாசா எரிப்பு விவ­காரம். எனவே இந்த தீர்­மா­னத்தை மேற்­கொண்ட தரப்­பி­னரை சட்­டத்­துக்கு முன்­னி­றுத்­துவோம்.

Q: ஈஸ்டர் தாக்­கு­தலின் பின்னர் நீங்­களும் அநு­ர­கு­மா­ரவும் பாரா­ளு­மன்­றத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக உரை­யாற்­றி­ய­தாக எதிர்க்­கட்­சிகள் சமூக வலைத்­த­ளங்­களில் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­துள்­ளன. ரவூப் ஹக்கீம் ஒரு கூட்­டத்தில் இது பற்றிக் குறிப்­பிட்­டுள்­ளாரே?
– உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்லிம் மக்­க­ளுக்­காக அவர்கள் பக்கம் உள்ள நியா­யங்­களை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைத்தோம்.குறிப்­பாக 2014 அளுத்­கம கல­வரம் தொடர்பில் கதைத்தோம்.தைரி­ய­மாக இந்த நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு வாழ்­வ­தற்கு உள்ள உரி­மையை பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறும் கோரிக்­கையை முன்­வைத்தோம்.

அடிப்­ப­டை­வாதம் முஸ்லிம் தாய்­மாரின் கரு­வ­றையில் இருந்த உரு­வா­கு­வ­தாக கூறப்­பட்ட அந்த உரை உண்­மையில் இன­வா­தத்தை தோற்­று­விக்கும் வகையில் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. ரவூப் ஹக்கீம் போன்­ற­வர்­களே எமக்­குக்கு எதி­ராக சேறு­பூசும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர். ராஜ­ப­க்ஷக்­களின் அர­சாங்­கத்தில் முஸ்லிம் மக்கள் தாக்­கப்­படும் போதும் அமைச்­சுப்­ப­த­வி­களை பெற்­றுக்­கொண்­ட­வர்கள் யார்? அந்த மக்கள் தாக்­கப்­படும் போது முஸ்லிம் தலை­வர்கள் என்ன செய்­தார்கள். தேர்தல் காலங்­களில் முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களை பெற்­றுக்­கொண்டு அர­சியல் மாத்­தி­ரமே செய்­தார்கள். இவர்­களின் செயற்­பா­டுகள் தொடர்பில் நாம் வெட்­கப்­ப­டு­கிறோம்.

கடந்த காலங்­களில் அனைத்து மக்­க­ளுடன் நான் இணைந்து செயற்­பட்­டுள்ளேன். முஸ்­லிம்­க­ளுக்­காக நாம் குரல் எழுப்­பிய போது என்னை ‘முஹமட் பிமல்’ என அழைத்­தனர். அதற்கு நான் பதி­ல­ளிக்க விரும்­ப­வில்லை. நாம் ஒரு­போதும் தேர்­த­லுக்­காக அர­சியல் செய்­ய­வில்லை.

கொள்கை ரீதி­யான அர­சி­ய­லையே செய்­கிறோம். முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக உதய கம்­மன்­பில போன்ற தரப்­பினர் இன­வா­தத்தை கட்­ட­விழ்த்­து­விட்­ட­போது நாம் தான் மக்­க­ளுக்­காக முன்­னின்று செயற்­பட்டோம்.

Q: இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் தனித்­து­வ­மான பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் நீங்கள் விடே கவனம் செலுத்­து­வீர்­களா?
– ஆம். நாம் எமது கொள்கைப் பிர­க­ட­னத்தில் இவை பற்றிக் குறிப்­பிட்­டுள்ளோம். சட்­ட­ரீ­தி­யான அதி­கா­ரங்­களைக் கொண்ட பார­பட்­சத்­திற்கு எதி­ரான ஆணைக்­குழு ஒன்­றிணைத் தாபிப்போம். ஜனா­தி­பதித் தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம். தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம். அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டயமாக்குவோம். அத்துடன் மலையக மக்களுக்காக நாம் விசேட வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்போம்.

Q: தேர்தலுக்கு இன்னமும் குறுகிய காலமே உள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு நீங்கள் கூறும் செய்தி என்ன?
கடந்த காலங்களில் சிங்களவர்களுக்கு எதிராக முஸ்லிம்களிடத்திலும் முஸ்லிமகளுக்கு எதிராக சிங்கள மக்களிடத்திலும் அரசியல் செய்யப்பட்டது. தலைவவர்களின் பேச்சைக்கேட்டும் பயந்து கொண்டும் மக்கள் வாக்களித்தனர். எனவே இந்த அரசியல் கலாசாரம் மாறவேண்டும்.எமது நோக்கமும் இலக்கும் ஒரே இலங்கை என்பதே. குறிப்பாக அரசியல் மற்றும் கலாசாரம் ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். எனினும் அதனை எற்றுக்குகொண்டு அனைத்து இன மக்களுக்கும் தமது அடிப்படை உரிமைகளை அனுபவிக்கக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவோம். முதல் தடவையாக நாட்டில் அனைத்து மக்களின் வாக்குடன் அநுரகுமார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். இலங்கையர் என்ற ரீதியில் இம்முறை அனைவவரும் ஒன்றிணைவோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.