முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் கைது

பெப்ரவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியல்: முதல் சந்தேக நபருக்கு பிணை

0 767

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதி­யு­தீனின் சகோ­த­ர­ரான வட­மா­காண சபையின் முன்னாள் உறுப்­பினர் பதி­யுதீன் மொஹம்மட் ரிப்­கான் சி.ஐ.டி. விசா­ர­ணை­களை புறக்­க­ணித்து வந்­த­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

நேற்று முன்­தினம் இரவு அவர் கோட்­டை­யி­லுள்ள சி.ஐ.டி. தலை­மை­ய­கத்­துக்கு சென்று, அங்கு வாணிப விசா­ரணைப் பிரிவு இலக்கம் 3 விசா­ரணை அறையில் ஆஜ­ரா­கிய நிலையில் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார். கெப்­பிடல் சிட்டி எனும் நிறு­வ­னத்­துக்கு மன்னார் பகு­தியில் 78 ஏக்கர் காணியை போலி காணி உறு­தி­க­ளூ­டாக 492 இலட்சம் ரூபா­வுக்கு விற்­பனை செய்­த­தாக சி.ஐ.டி.க்கு கிடைத்­தி­ருந்த முறைப்­பாட்­டுக்­க­மை­வாக முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளி­லேயே அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்டு கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டார்.

இதன்­போது, அவர் சார்பில் முன்­வைக்­கப்­பட்ட பிணை கோரிக்­கையை நிரா­க­ரித்த கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன, பிணை வழங்­கினால் சந்­தேக நபர் நீதி­மன்றை புறக்­க­ணிக்க அதிக வாய்ப்­புள்­ள­தா­கக்­கூறி எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 6 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

கடந்த 2015 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி 78 ஏக்கர் காணியை போலி காணி உறு­தி­க­ளூ­டாக 492 இலட்சம் ரூபா­வுக்கு விற்­பனை செய்­த­தாக சி.ஐ.டி.க்கு கிடைத்­தி­ருந்த முறைப்­பாட்­டுக்­க­மை­வாக, கடந்த 2016 ஆம் ஆண்டு சி.ஐ.டி. கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் அறிக்கை சமர்ப்­பித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில், மன்னார் – தலை­மன்னார் பகு­தியில் 240 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 40 ஏக்கர் காணியை போலி காணி உறு­தி­களை தயார்­செய்து கைய­கப்­ப­டுத்திக் கொண்­ட­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­களில், வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்­க­மைய ரிப்கான் பதி­யு­தீனை சி.ஐ.டி. சந்­தேக நப­ராகக் கடந்த 2019இல் நீதி­மன்­றுக்குப் பெய­ரிட்ட நிலையில் அவரைக் கைது­செய்ய நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. இந்­நி­லையில் அவரைத் தேடி­வ­ரு­வ­தாக சி.ஐ.டி.யினர் மன்றில் தெரி­வித்­தி­ருந்­தனர். அதன்­படி அவ­ரது வீட்­டுக்கு சென்று அவர் தொடர்பில் விசா­ரித்­த­தா­கவும் அவர் வர்த்­தக நட­வ­டிக்­கைக்­காக கொழும்­புக்கு வந்­துள்­ள­தாக அவ­ரது தயார் கூறி­போதும், ரிப்­கானின் தொலை­பே­சியும் செய­லி­ழந்­துள்­ள­தாக சி.ஐ.டி.யினர் மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்­தனர். .

இவ்­வா­றான பின்­ன­ணியில் நேற்று முன்­தினம் மாலை சி.ஐ.டி.க்கு சென்று சர­ண­டைந்­துள்ள ரிப்கான் பதி­யு­தீனை சி.ஐ.டி.யினர் கைது செய்து நேற்று மன்றில் ஆஜர் செய்­தனர். இதன்­போது, ரிப்கான் பதி­யுதீன் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி காலிங்க இந்­ர­திஸ்ஸ மன்றில் ஆஜ­ராகிப் பிணை கோரிக்கை முன்­வைத்தார். ரிப்கான் பதி­யு­தீனை ஆஜர் செய்­த­போது, ரிப்­கா­னினால் விஷேட சத்­தியக் கட­தா­சி­யொன்றும் நீதி­மன்­றுக்கு அளிக்­கப்­பட்­டது.

முன்­ன­தாக போலி உறுதி, காணி அப­க­ரிப்பு விவ­கா­ரத்தில் சி.ஐ.டி. முன்­னெ­டுத்த நீண்ட விசா­ர­ணை­க­ளின்கீழ் தலை­மன்­னாரைச் சேர்ந்த மதார் மொஹிதீன் அன்­சார்தீன் எனும் சந்­தேக நபரை கைது­செய்து, சி.ஐ.டி.யினர் மன்றில் ஆஜர் செய்­தி­ருந்­தனர். சர்ச்­சைக்­கு­ரிய சொத்தின் பகு­தி­யொன்றை விற்­பனை செய்­த­தாகத் தெரி­வித்து சி.ஐ.டி.க்கு அழைக்­கப்­பட்ட அவர் விசா­ரணை, வாக்­கு­மூலம் பதிவு செய்­யப்­பட்ட பின்னர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட அவர் நேற்று வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார். இந்த விசா­ர­ணை­க­ளுடன் தொடர்­பு­டைய சொத்­துடன் தொடர்­பு­ப­டாத மேலும் 280 ஏக்கர் காணி தொடர்பில் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்த நிலையில், அந்த சொத்தின் ஒரு பகு­தியை விற்­பனை செய்­த­வ­ராகக் கரு­தப்­படும் மீனா­புரம், தில்­லை­யடி – புத்­தளம் எனும் முக­வ­ரியைச் சேர்ந்த பதி­யுதீன் மொஹம்மட் ரிப்கான் என்­பவர் வெளி­நாடு சென்றால் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பதில் சிக்­க­லேற்­படும் என்­பதால் அவ­ரது வெளி­நாட்டுப் பய­ணமும் கடந்த டிசம்­பரில் தடை செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யி­லேயே நேற்று இவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு வந்­த­போது கைதாகி விளக்­க­ம­றி­ய­லி­லுள்ள சந்­தேக நபரின் சார்பில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த பிணைக் கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்ட நீதிவான், மதார் மொஹிதீன் அன்­சார்தீன் எனும் சந்­தேக நபரை பிணையில் செல்ல அனு­மதி வழங்­கினார். 15 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை, 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­களில் அவரை செல்ல அனு­ம­தித்த நீதிவான், ஒவ்­வொரு மாதமும் இறுதி ஞாயி­றன்று முற்­பகல் 9.00 மணிக்கும் பிற்­பகல் 4.00 மணிக்கும் இடையில் சி.ஐ.டி.யின் வாணிப விசா­ரணைப் பிரிவில் ஆஜ­ராகக் கட்­ட­ளை­யிட்டார். அத்­துடன் அவ­ரது வெளி­நாட்டுப் பய­ணத்­தையும் தடை செய்து கட­வுச்­சீட்டை மன்றில் ஒப்­ப­டைக்­கவும் உத்­த­ர­விட்டார்.

முன்­ன­தாக கடந்த 2015 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி, அப்துல் காசிம் மொஹம்மட் சலாஹி என்­பவர் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் வணிக விசா­ரணைப் பிரிவில் விஷேட முறைப்­பா­டொன்றை செய்­தி­ருந்தார். அந்த முறைப்­பாட்­டுக்­க­மை­யவே சி.ஐ.டி. இந்தக் காணி மோசடி விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது.

குறித்த முறைப்­பாட்டில், தாம் 40 ஏக்கர் கொண்ட காணித் துண்­டுகள் இரண்டை 240 இலட்சம் ரூபா­வுக்கு கொள்­வ­னவு செய்­த­தா­கவும், அந்தக் காணியை எல்­லை­யிட்டு வேறு வேறாகப் பிரித்­த­தா­கவும் முறைப்­பாட்­டாளர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இந் நிலையில், அவ்­வாறு காணியை கொள்­வ­னவு செய்த சில மாதங்­களில் ரிப்கான் பதி­யுதீன் என்­பவர், தான் கொள்­வ­னவு செய்த காணி­க­ளுக்கு உரிமை கோரிக்­கொண்டு , தனக்குத் தனது காணிக்குள் உள்­நு­ழைய தடை ஏற்­ப­டுத்­தி­ய­தா­கவும், தனது சொத்­துக்குப் போலி உறு­தி­களைத் தயா­ரித்து அவற்றை கைய­கப்­ப­டுத்தி சொத்து மற்றும் பண இழப்பை ஏற்­ப­டுத்­தி­ய­தா­கவும் முறைப்­பாட்­டா­ளரின் முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்பட்­டுள்­ளது.

இது தொடர்பில் விசா­ரித்து வரும் சி.ஐ.டி., தண்­டனை சட்டக் கோவையின் 400,403,454, 457, 459, 102, 113(அ) பிரி­வு­களின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மொன்று இடம்­பெற்­றுள்­ளா­தாகக் கரு­தியே மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

அதற்­க­மை­வா­கவே ரிப்கான் பதி­யுதீன் கைது செய்­யப்­பட்ட நிலையில், அவர் அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். சத்தியக் கடதாசியூடாக அவர் அவற்றை மறுத்துள்ள நிலையில், அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ, தனது சேவை பெறுநர் எந்த மோசடி நடவடிக்கையிலும் ஈடுபடவில்லையென வாதிட்டார். சி.ஐ.டி. சரியான கோணத்தில் விசாரிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் விடய்ங்களை ஆராய்ந்த நீதிவான் லங்கா ஜயரத்ன, சந்தேக நபர் ரிப்கான் பதியுதீனுக்கு பிணையளித்தால் அவர் நீதிமன்றை புறக்கணிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சுட்டிக்காட்டி அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.