தனியார் சட்டம் குறித்த பிரேரணையை ரதன தேரர் மீளப்பெறுதல் வேண்டும்

பைஸர் முஸ்தபா எம்.பி. வலியுறுத்தல்

0 721

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் எண்­ணக்­க­ருவில் உதித்த சுபீட்­ச­மான இலங்கை, இன­வா­த­மற்ற அர­சியல் போன்ற கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டு­மாக இருந்தால், நாட்டில் வாழ்­கின்ற அனைத்து சமூ­கங்­க­ளி­னதும் மத, கலா­சார உரி­மை­களை செயற்­ப­டுத்­தக்­கூ­டிய சூழல் உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைஸர் முஸ்­தபா தெரி­வித்­துள்ளார்.

அத்­து­ர­லியே ரதன தேர­ரினால் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து தனியார் சட்­டத்தை நீக்­கக்­கோரி முன்­வைத்­துள்ள பிரே­ர­ணையை மீளப்­பெற வேண்­டு­மென்றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இது­தொ­டர்பில் அவர் மேலும் குறிப்­பி­டும்­போது,

அத்­து­ர­லியே ரதன தேர­ரின் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தை நீக்க வேண்­டு­மென்ற பிரே­ரணை, ஜனா­தி­ப­தியின் கொள்கைப் பிர­க­ட­னத்­திற்கு முர­ணாக இருப்­ப­தா­கவே நாம் கரு­து­கின்றோம்.

எனவே, இந்தப் பிரே­ர­ணையை ரதன தேரர் மீளப்­பெ­ற­வேண்டும் என்­ப­தோடு, இந்த விவ­காரம் பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு வரு­மாக இருந்தால், பல்­லினச் சூழலை அனு­ம­திக்­கின்ற அனைத்து அர­சியல் கட்­சி­களும் இப்­பி­ரே­ர­ணையைத் தோற்­க­டிக்க வேண்­டு­மென்று, முஸ்லிம் சமூகம் சார்­பாக நான் வேண்டிக் கொள்­கின்றேன்.

அத்­துடன், இது விட­யத்தில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அர­சியல், தலை­மைத்­துவ, கட்சி, கொள்கை பேதங்­களை மறந்து பொறுப்­புடன் செயற்­பட வேண்டும் என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன்.

முஸ்லிம் தனியார் சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கா­கவும், பொதுக் கட்­டளைச் சட்­டத்­திலும் மாற்றம் வேண்­டு­மென, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேர­ரினால் பாரா­ளு­மன்­றத்தில் தனி நபர் பிரே­ரணை ஒன்று கடந்த புதன்­கி­ழமை சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில், அன்­றைய தினமே எனது தலை­மையில் முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், உல­மாக்கள் மற்றும் புத்­தி­ஜீ­விகள் உள்­ளிட்ட சம்­பந்­தப்­பட்ட பலரும் நீதி, மனித உரி­மைகள் மற்றும் சட்ட மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் நிமல் சிறி­பால டி. சில்­வாவை, நீதி அமைச்சில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினோம். இதன்­போது, இவ்­வா­றான தனி­நபர் சட்ட மூல­மொன்று பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தாலும், முஸ்லிம் சமூ­கத்­துக்கு எவ்­விதப் பாதிப்­புக்­களும் இல்­லாத வகையில் தீர்வு காணப்­ப­டு­மென அமைச்சர் உறு­தி­ய­ளித்தார்.

ஏற்­க­னவே கடந்த ஆட்­சிக்­கா­லத்தில், முஸ்­லிம்­களின் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் சில மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்­பது சம்­பந்­த­மாக, முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள சிவில் அமைப்­புக்­க­ளி­னாலும் புத்­தி­ஜீ­வி­க­ளி­னாலும் தயா­ரிக்­கப்­பட்ட சிபாரிசுகள், நீதி அமைச்­சுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.

முஸ்லிம் சமூ­கத்­தி­னு­டைய மார்க்க விவ­கா­ரங்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட விட­யங்கள், அச்­ச­மூ­கத்தின் பங்­கு­பற்­று­த­லு­டனும், அனு­ம­தி­யு­ட­னுமே தீர்­மா­னிக்­கப்­பட வேண்டும்.

முஸ்லிம் தனியார் சட்டம் என்­பது, இலங்கை போன்ற பல்­லினச் சூழலில் ஒவ்­வொரு சமூ­கத்­தி­னு­டைய மத மற்றும் தனி­யான அடை­யா­ளங்­களை மதித்து கால­னித்­துவ அர­சாங்­கங்­க­ளி­னாலும், சுதந்­தி­ரத்தின் பின்­ன­ரான அர­சு­க­ளி­னாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு நடை­மு­றை­யி­லுள்ள ஒரு விட­ய­மாகும்.

இது, முஸ்லிம் சமூ­கத்­திற்கு மாத்­திரம் கொடுக்­கப்­பட்ட விசே­ட­மான அனு­ம­தி­யாகக் கரு­த­மு­டி­யாது. நாட்­டி­லுள்ள ஏனைய சமூ­கங்­க­ளுக்கும் இவ்­வா­றான விசேட சட்ட ஒழுங்­குகள் பொதுச் சட்­டத்தின் கீழ் வழங்­கப்­பட்­டுள்­ளன. அந்த வகையில், தேச வழமைச் சட்டம், கண்­டிய சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இதன்மூலம், முஸ்லிம் சமூகம் விவாகம், விவாகரத்து மற்றும் ஏனைய கடமைகளை இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் வாழ்வதற்கு உதவியாக இருக்கின்றது. இதனை நீக்க வேண்டுமென்பது, முஸ்லிம்களின் மார்க்கக் கடமைகளை அவர்கள் நடைமுறைப் படுத்துவதற்குத் தடையாக இருப்பதோடு, முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளையும் அது பாதிப்பதாக அமையும் என்றார்.-Vidivelli

  • ஐ. ஏ. காதிர்கான்

Leave A Reply

Your email address will not be published.