தமிழ் – முஸ்­லிம்­களின் ஆத­ரவு முக்­கி­ய­மா­னது

சஜித்திடம் ரணில் வலியுறுத்து

0 613

ஜனா­தி­பதி தேர்­தலில் வெறு­மனே ஐக்­கிய தேசியக் கட்­சியின் வாக்­கு­களை கொண்டு வெற்­றி­பெற முடி­யாது. தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் முக்­கி­ய­மா­ன­தென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸ­விடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார். 

அத்­துடன், ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னதும், ஐக்­கிய தேசிய முன்­னணி பங்­காளிக் கட்­சி­க­ளி­னதும் ஆத­ரவைப் பெற்றால் போதாது, ஜனா­தி­பதி தேர்­தலை வெற்­றி­கொள்ள வேண்­டு­மாயின் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் சிவில் அமைப்­பு­க­ளி­னதும் ஆத­ரவைப் பெற்­றாக வேண்டும். மேலும், நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­குதல் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கல் என்ற வாக்­கு­று­தி­களை மீற­மு­டி­யாது எனவும் பிர­தமர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் கட்­சியின் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் இரு­வ­ருக்கும் இடையில் நிலவும் இணக்­கப்­பா­டற்ற நிலை­மைகள் கார­ண­மாக ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் கட்­சியின் பிர­தித்­த­லை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித்­பி­ரே­ம­தா­ச­விற்கும் இடையில் ஏற்­க­னவே சந்­திப்­பொன்று இடம்­பெற்ற நிலையில் சஜித்­திடம் தாம் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வேண்­டு­மென்றால் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் ஆத­ரவை பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற கோரிக்­கையை பிர­தமர் ரணில் விடுத்­தி­ருந்தார். அதனைத் தொடர்ந்து இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் மூல­மாக சஜித் தனக்­கான பங்­கா­ளிக்­கட்­சி­களின் ஆத­ரவை பெற்றுக் கொண்­ட­துடன் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பெரும்­பான்மை பலத்­தையும் தன்­வ­சப்­ப­டுத்­திக்­கொண்டார்.

இந்­நி­லையில் மீண்டும் பிர­த­ம­ருடன் அமைச்சர் சஜித் தனித்து பேச்­சு­வார்த்தை நடத்த வேண்­டு­மென்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டதன் விளை­வாக நேற்று காலையில் இரு­வரும் தனித்து பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்­டி­ருந்­தனர். அல­ரி­மா­ளி­கையில் இந்த சந்­திப்பு இடம்­பெற்ற நிலையில் நேற்றும் பிர­தமர் மேலும் சில சவால்­களை அமைச்சர் சஜித்­திடம் முன்­வைத்­துள்ளார். ஆரம்­பத்தில் தனக்­கான பலத்தை பற்றிக் கூறிய அமைச்சர் சஜித் பிரே­ம­தாச தான் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வையும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் ஆத­ர­வையும் பெற்­றுள்ளேன், மக்­களின் ஆத­ர­வையும் பெற்­றுள்ளேன் என்ற கார­ணி­களை பிர­த­ம­ரிடம் முன்­வைத்­துள்ளார். இதற்குப் பதி­ல­ளித்த பிர­தமர், ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னதும் ஐக்­கிய தேசிய முன்னணியி­னதும் ஒத்­து­ழைப்­பு­களை பெற்று போதாது கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் எமக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கிய சிவில் அமைப்­பு­களின் ஆத­ர­வையும் அதற்கும் அப்பால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பூரண ஒத்­து­ழைப்­பையும் பெற்­றாக வேண்டும். இன்­று­வரை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக கூற­வில்லை. ஆகவே அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஆத­ர­வையும் பெற்­றாக வேண்டும். ஆகவே அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தமிழ் மக்­களின் மனங்­களை வெற்­றி­கொள்ளும் நட­வ­டிக்­கையை கையா­ளு­மாறு பிர­தமர் பணித்­துள்ளார். அதற்கு இணக்கம் தெரி­வித்த அமைச்சர் சஜித் விரைவில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புடன் பேசி ஒரு தீர்­ம­னத்தை எடுப்­ப­தா­கவும் சிவில் அமைப்­புகள் மற்றும் ஏனைய கட்­சி­களை சந்­தித்து பேசு­வ­தா­கவும் கூறி­யுள்ளார்.

அதேபோல் 19 ஆம் திருத்­தத்தை கையாள்­வது குறித்தும் 20 ஆம் திருத்தம் முழு­மைப்­ப­டுத்­தப்­பட வேண்­டிய கட்­டாயம் குறித்தும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்சர் சஜித்­திடம் கூறி­யுள்ளார். கடந்த அமைச்­ச­ரவை கூட்­டத்தில் நடந்த விட­யங்கள் அமைச்­ச­ர­வையை கூட்ட ஜனா­தி­பதி முன்­வைத்த கார­ணிகள் என்ற பல விட­யங்­களை கூறி­யுள்ளார். குறிப்­பாக ஐக்­கிய தேசியக் கட்சி நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தான வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்ள நிலையில் அதனை மீற முடி­யாது. 19 ஆம் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது அதில் சகல கார­ணி­க­ளையும் நிறை­வேற்ற முடி­யாது போயுள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யங்­களை கைவிட வேண்­டிய நிலை­மையில் இன்று தள்­ளப்­பட்­டுள்ளோம். ஆனால் இவற்றை நம்பி எம்மை ஆத­ரித்த கட்­சி­க­ளுக்கு இன்று எம்­மீ­தான நம்­பிக்கை இழக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கு­வ­தாகக் கூறிய நிலையில் இன்று உங்­களின் கருத்­துக்கள் எமது வாக்­கு­று­தி­க­ளுக்கு மாறா­ன­தாக அமைந்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். எனினும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­களின் நிலைப்­பாட்டை எடுத்­து­ரைத்த அமைச்சர் சஜித் இந்த நகர்­வு­களை தான் இப்­போது செய்ய வேண்டாம் என கூறி­ய­தாக பிர­த­ம­ரிடம் கூறி­யுள்ளார்.

மேலும் ஐக்­கிய தேசிய கட்­சியின் வாக்­கு­களை மாத்­திரம் வைத்­து­க்கொண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற முடி­யாது என்­பதை நினைவில் வைத்­து­கொள்ள வேண்டும். ஜனா­தி­பதி தேர்­தலில் வெறு­மனே ஐக்­கிய தேசிய கட்­சியின் வாக்­கு­களை கொண்டு வெற்றி பெற முடி­யாது. ஆகவே தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் முக்­கி­ய­மா­னது. ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு அப்­பாற்­பட்ட மக்­களின் ஆத­ர­வையும் பெற்­றுக்­கொள்ள வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை கையா­ளுங்கள் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சஜித்திடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் இருவருக்கும் இடையில் பல தரப்பட்ட கருத்துக்கள் பகிரப்பட்ட போதிலும் நேற்றும் இறுதித் தீர்மானம் எதுவும் இல்லாமலே முடிவுக்கு வந்துள்ளது. எனினும் இன்று திங்கட்கிழமை பிற்பகலில் மீண்டும் இருவரும் சந்தித்துக் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய இன்று பிற்பகலில் மீண்டும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.