தெல்தோட்டை சம்பவம் : 26 வரை ஐவருக்கு விளக்கமறியல்

0 624

சில தினங்­க­ளுக்கு முன்னர் கண்டி தெல்­தோட்ட நகரில் இடம்­பெற்ற இரு தரப்­பி­னர்­க­ளுக்கு இடை­யி­லான மோதல் சம்­பவம் தொடர்­பாக சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்ட ஐந்து சந்­தேக நபர்­க­ளையும் கண்டி நீதி­மன்ற நீதிவான் எதிர்­வரும் 26 ஆம் திகதி விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

இந் மோதல் சம்­ப­வத்­தினால் கடந்த இரண்­டொரு தினங்கள் தெல்­தோட்டை நகரில் பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. ஒரு­வ­ரது காணியில் மற்­று­மொரு காணி உரி­மை­யாளர் குப்­பை­களை கொட்­டி­ய­தாகக் கூறப்­படும் சம்­ப­வத்­தை­ய­டுத்து இரு தரப்­பி­னர்­க­ளுக்கு இடையில் கைக­லப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இதனால் ஒரு காணிச் சொந்­தக்கா­ர­ரான வர்த்­தகர் 59 வயது நபர் ஒரு­வரை மண்­வெட்­டியால் தாக்கிக் காயப்­ப­டுத்­தி­ய­தா­கவும் இந்த சம்­ப­வங்­களின் கார­ண­மாக மேலும் இருவர் தாக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதில் காய­ம­டைந்த மூவரில் இருவர் கலஹா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் ஆபத்­தான நிலையில் கண்டி வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

மற்­று­மொரு 20 வயது இளைஞர் காய­ம­டைந்த நிலையில் கலஹா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்றார்.

இச்­சம்­ப­வங்கள் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொண்ட கலஹா பொலிஸ் நிலையப்­பொ­றுப்­ப­தி­காரி கே.எம்.எஸ். கோணார தலை­மை­யி­லான பொலிஸார் ஐந்து சந்­தேக நபர்­களைக் கைது செய்து கண்டி நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­செய்த போது நீதிவான் ஐவ­ரையும் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த மோதல் சம்பவங்களையடுத்து ஏற்பட்ட பதற்றநிலை நீங்கி தற்போது அமைதி ஏற்பட்டுள்ளது.

செங்­க­ட­கல – ஹேவாஹெட்ட நிருபர்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.