ஆன்­மிக வைத்­திய முகாமில் கலந்­து­கொண்ட இருவர் பலி

18 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0 206

அநு­ரா­த­புரம்,- ஹொர­வ­பொத்­தானை பகு­தியில் ஆன்­மிக முறையில் நோய்­களை குணப்­ப­டுத்­து­வ­தாகக் குறிப்­பிட்டு இடம்­பெற்ற வைத்­திய முகாமில் கலந்­து­கொண்ட இருவர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

சம்­ப­வத்தில் 18 பேர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

ஹொர­வ­பொத்­தானை விளை­யாட்­ட­ரங்­கொன்றில் சனிக்­கி­ழ­மை­யி­லி­ருந்து நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­பகல் வரை ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த ஆன்­மிக சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்றுக் கொள்­வ­தற்­காக பல வட்­டா­ரங்­க­ளி­லுமி­ருந்தும் நோயா­ளர்கள் வரு­கை­தந்­துள்­ளனர்.

இந்­நி­லையில் நேற்று அதி­காலை இவ்­வாறு வரு­கை­தந்த நோயா­ளர்­களுள் சுமார் 20 பேர் நோய் அதி­க­ரித்த நிலையில் ஹொர­வ­பொத்­தானை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். பின்னர் இருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் மற்­றைய நோயா­ளர்கள் அநு­ரா­த­புர வைத்­தி­ய­சா­லைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவபொத்தானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.