பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள் தொடர்கின்றன

தடுப்புக்காவலில் 161 பேர் ; 167 பேர் சிறையில் ; 99 பேர் சந்தேகத்தில் கைது என்கிறார் பிரதமர்

0 564

பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் தொடர்­புட்ட 161 பேர் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். 167 பேர் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். 99 பேர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்று பிர­த­ம­ரிடம் கேள்­வி­கேட்கும் நேரத்தில், உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் மற்றும் அதன் பிறகு குரு­நாகல், குளி­யாப்­பிட்­டியில் அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என கைது­செய்­யப்­பட்­ட­வர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­படும் விசா­ர­ணைகள் தொடர்­பாக ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பினர் எஸ்.எம். மரிக்கார் கேட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

ஏப்ரல் 21 பயங்­க­ர­வாத தாக்­குதல் தொடர்பில் கைதான 161 பேர் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தோடு 167 பேர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். 99 பேர் சந்­தே­கத்தின் பேரில் கைதா­கி­யுள்­ளனர். தடுப்­புக்­கா­வ­லிலும் விளக்­க­ம­றி­ய­லிலும் வைக்­கப்­பட்­டுள்ள சந்­தே­க­ந­பர்கள் குறித்து தொடர்ந்து விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. இவர்கள் தொடர்பில் சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னைக்­க­மைய தேவை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

அத்­துடன் குளி­யாப்­பிட்டி, ஹெட்­டி­பொல தாக்­குதல் சம்­ப­வங்கள் தொடர்பில் 39 பேர் கைதா­கி­யுள்­ளனர். இவர்கள் தொடர்பில் நீதி­மன்­றத்தில் விளக்­க­ம­ளித்து தேவை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது. இவற்­றுக்கு உதவி வழங்­கியோர் தொடர்­பாக விசா­ரணை தொடர்ந்து இடம்­பெ­று­கி­றது. தவறு செய்­தோ­ருக்கு உரிய தண்­டனை வழங்­கப்­படும்.

மேலும் தாக்­கு­த­லுக்கு இலக்­கான மதஸ்­த­லங்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. கிறிஸ்­தவ மதஸ்­த­லங்கள், வியா­பார நிலை­யங்கள், வீடுகள் என்­ப­வற்­றுக்கு நஷ்­ட­ஈடு வழங்க மதிப்­பீ­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. கிறிஸ்­தவ மதஸ்­த­லங்­க­ளுக்கு ஆரம்ப கொடுப்­ப­னவு வழங்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் வியா­பார நிலை­யங்­க­ளுக்கும் நஷ்­ட­ஈடு வழங்க முஸ்லிம் விவ­கார அமைச்­ச­ருக்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு தெரி­வித்­தி­ருக்­கின்றோம்.

இதன்­போது மரிக்கார் எம்.பி. திகன தாக்­குதல் தொடர்­பிலும் மதிப்­பீ­டுகள் செய்யப்பட்டாலும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை என குறிப்பிட்டபோது, அதற்கு பிரதமர் பதிலளிக்கையில், திகனவில் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரச்சினை இருந்தால் அடுத்த கூட்டம் இடம்பெறும்போது உங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன். அதில் வந்து தெரிவிக்கலாம் என்றார்.

ஆர்.யசி , எம்.ஆர்.எம்.வஸீம்

vidivelli 

 

Leave A Reply

Your email address will not be published.