பாரிய கூட்டணி அமைக்க சுதந்திர கட்சி தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு அழைப்பு

பாரிய கூட்டணி அமைத்து தேர்தலுக்கு முகம்கொடுக்கத் தயாராகி வருகின்றோம். அதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றோம். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புக் குழுக்கள் அனைத்தையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் இடம்பெறவிருக்கும் தேர்தல்களுக்கு முகம்கொடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர்…

அமெரிக்காவும் இஸ்ரேலும் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறின

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ அமைப்பிலிருந்து புத்தாண்டு ஆரம்பித்த நள்ளிரவில் உத்தியோகபூர்வமாக வெளியேறின. வெளியேறவுள்ளதாக கடந்த வருடம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அச்செயற்பாடு இடம்பெற்றுள்ளது. சமாதானத்தைப் பேணிக் காக்கும் நோக்கில் இரண்டாம் உலக மகா யுத்தத்தினைத் தொடர்ந்து அமெரிக்கா இணைந்து ஆரம்பித்த யுனெஸ்கோ அமைப்பிற்கு இந்த வெளியேற்றம் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது. 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ட்ரம்ப் நிருவாகம் தனது வெளியேற்றம் தொடர்பில்…

மாவனெல்லை விவகாரம்: 7 சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு

மாவனெல்லை பகுதியில்  புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும்  ஜனவரி 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணா நேற்று உத்தரவிட்டார். கைதாகியுள்ள ஏழு சந்தேக நபர்களும் நேற்று மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இந் நிலையில் மாவனெல்லை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இந்த 7 பேரும் கண்டி - வெலம்பொட பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சிலை உடைப்புக்கள் மற்றும் குருணாகல் - பொத்துஹரையில் இடம்பெற்ற சிலை…

நேரில் வரவழைத்து பாகிஸ்தான் கண்டனம்

இந்திய ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தியதாகவும், இத் தாக்குதலில் பாகிஸ்தான் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளதாகவும் கூறி பாகிஸ்தானுக்கான இந்திய தற்காலிக துணை தூதருக்கு அழைப்பாணையை பாகிஸ்தான் அனுப்பி வரை நேரில் வரவழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்ததாக  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஷக்கோட் செக்டாரில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் அதில் ஆசியா பிபி என்ற பெண் உயிரிழந்ததாகவும், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் …