நேரில் வரவழைத்து பாகிஸ்தான் கண்டனம்

0 852

இந்திய ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தியதாகவும், இத் தாக்குதலில் பாகிஸ்தான் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளதாகவும் கூறி பாகிஸ்தானுக்கான இந்திய தற்காலிக துணை தூதருக்கு அழைப்பாணையை பாகிஸ்தான் அனுப்பி வரை நேரில் வரவழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்ததாக  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஷக்கோட் செக்டாரில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் அதில் ஆசியா பிபி என்ற பெண் உயிரிழந்ததாகவும், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.  மேலும் எல்லையில் வசிக்கும் கிராமங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்துவதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.