முஸ்லிம்களுக்கான அரசியல் அந்தஸ்தை மறுக்கிறதா அநுரவின் தே.ம.ச. அரசாங்கம்!
ஐரோப்பியரால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் இலங்கை அரசியல் நிர்வாக முறைமை அறிமுகமானது. 1505 இல் போர்க்கீசர் இலங்கையின் கரையோரங்களை கைப்பற்றினர், அவர்களிடமிருந்து 1658 இல் ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டனர். இவர்கள் இந்நாட்டை ஆக்கிரமித்த போது நாட்டில் பல்வேறு நிர்வாக முறைமை இருந்துவந்தது.