அரசியல் களம்
2024 ஆம் வருடம் தேர்தல் ஆண்டாக இருக்கும் என்ற கருத்து கடந்த ஆண்டிலிருந்தே கூறப்பட்டு வந்தது. இது இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியில் பல நாடுகளிலும் தேர்தல் ஆண்டாக இருந்துள்ளது. அண்டை நாடான இந்தியா, பிரித்தானியா, பிரான்ஸ், வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்று முடிந்திருக்கின்றன. அமெரிக்காவிலும் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன.