7 வயதில் அல்குர்ஆனை முழுமையாக  மனனமிட்ட சகோதரியும் சகோதரனும்

இங்கிலாந்தின்  லூடோனைச் சேர்ந்த யூசுப் அஸ்லம் எனும் சிறுவன் தனது ஏழாவது வயதில் குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே வயதில் இவரது சகோதரி மாரியாவும் குர்ஆனை மனனம் செய்து முடித்திருந்தார். அல்குர்ஆனிலுள்ள 114 சூராக்களையும் மனனம் செய்து முடிக்க இந்த சிறுவனுக்கு இரண்டு வருடங்கள் மாத்திரமே போதுமாக இருந்தது. யூசுப்புடைய இந்த பயணத்தில் அவருக்கு வழிகாட்டி ஒத்துழைப்பு நல்கிய அவருடைய தாய் யூசுப் மற்றும் மாரியா ஆகியோர் அல்குர்ஆனை மனனமிட்டமை தொடர்பில்  பகிர்ந்து கொள்கிறார். உங்களுடைய…

ஹிஜாபுடன் தற்காப்புக் கலையை போதிக்கும் கதீஜா ஸபாரி

பெண்­க­ளு­டைய வேலைத்­த­ளங்கள் மற்றும் அவர்கள் வெளிச்­செல்லும் இடங்­களில் பல்­வேறு சவால்­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது. அதில் முதன்­மை­யா­ன­துதான் ஆண்­க­ளு­டைய ஆதிக்கம் ஆகும். பெண்கள் தம்மைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­காக வேண்டி தற்­காப்புக் கலையை பயி­ல­வேண்டும் என்ற நோக்­கத்தில் ஐக்­கிய இராச்­சி­யத்தைச் சேர்ந்த கதீஜா ஸபாரி என்ற சகோ­தரி ஒரு தற்­காப்­புக்­கலைப் பள்­ளியை தனது கண­வ­ருடன் இணைந்து நடாத்தி வரு­கிறார். தற்­காப்புக் கலையை பெண்­க­ளுக்கு, அதிலும் குறிப்­பாக முஸ்லிம் பெண்­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுத்து…

காஸா சிறார்களின் எதிர்காலத்தை சிதைக்கும் இஸ்ரேலிய துப்பாக்கிகள்

ஈவிரக்கமற்ற இஸ்­ரே­லிய இராணுவத்தின் துப்­பாக்கிச் சூட்­டு­க­ளுக்கு இலக்­காகி படுகாயமடைந்து ஆறாத வடுக்க­ளுடன் கல்வியையும் தொடர முடியாதுள்ள காஸாவின் சிறுவர்கள் சிலரின் கதைகளே இவை. காஸாவின் பதின்ம பரு­வத்தில் உள்ள  16 வயது சிறு­வ­னான அப்துல் கஸ்ஸாமுக்கு தினமும் பாட­சாலைக்குச் சென்று வரு­வதே பெரும் சவா­லாக மாறி­விட்­டது. சில மாதங்­க­ளுக்கு முன் ஜுலிஸ் பொது மக்கள் உயர்­தரப் பாட­சா­லைக்கு நடந்தே செல்லும் கஸ்­ஸாமுக்கு வீட்­டி­லி­ருந்து பாட­சா­லையை அடைய வெறும் 15 நிமி­டங்­களே போது­மா­னது. ஆனால்  மீளத்திரும்பும் உரிமைக்காக…

நமது அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் அளவுக்கதிகமான சலுகைகள்

 இலங்கையை பொறுத்த வரையில் குறுகிய காலத்தில் செல்வந்தனாக மாற வேண்டும் என்றால், அதற்கான சிறந்த வழி ஒரு அரசியல்வாதியாகுவதுதான் என்று கூறினால் அது மிகையான வார்த்தை கிடையாது. அந்த அளவிற்கு அரசியல்வாதிகளுடைய சொத்தின்மதிப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சாதாரண பொருளாதார நிலையில் இருந்த பல்வேறு உள்ளூராட்சி, மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தற்போதய சொத்தின் பெறுமதி பல மில்லியன்களாகவும், கோடிகளாகவும் உயர்ந்த வண்ணமுள்ளது.