ஐக்கிய தேசிய முன்னணியை ஆத­ரிக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்­மானம்

ஜனா­தி­ப­திக்கு கடிதம் மூலம் த.தே.கூ. அறி­விப்பு

0 655

ஐக்­கிய தேசிய முன்­னணி தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தினை அமைப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தமது முழு­மை­யான ஆத­ரவை வழங்கத் தீர்­மா­னித்­துள்­ளது. ஆகவே ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினால் நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்­றத்தின் பெருன்­பான்­மை­யினை பெறக்­கூ­டி­யவர் என  கருதும் நபரை பிர­த­ம­ராக  நிய­மிக்க வேண்­டு­மென தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­திக்கு கடிதம் மூலம் தெரி­வித்­துள்­ளது.

ஜனா­தி­ப­திக்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தில் இந்தக் கார­ணி­களை அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

கடந்த ஒக்­டோபர்  மாதம் 26ஆம் திக­தி­யி­லி­ருந்து நடந்த அனைத்து சம்­ப­வங்­க­ளி­னதும் பின்­ன­ணியின் அடிப்­ப­டையில் மேற்­கு­றித்த விடயம் தொடர்பில் நாங்கள்  இதனை எழு­து­கிறோம். கடந்த ஒக்­டோபர் 26ஆம் திகதி பிர­த­மா­ராக நிய­மிக்­கப்­பட்ட  மஹிந்த ராஜபக் ஷ, அவர் நிய­மிக்­கப்­பட்டு ஒரு மாதம் கடந்­துள்ள நிலை­யிலும், இந்தக் காலப்­ப­கு­தியில் பல தட­வைகள் பாரா­ளு­மன்றம் கூடி­யுள்ள போதிலும் அவரால் தனக்கு பாரா­ளு­மன்­றத்தின் பெரும்­பான்மை நம்­பிக்கை உள்­ளது என்­ப­தனை நிரூ­பித்­துக்­காட்ட முடி­யாத ஒரு­வ­ரா­கவே காணப்­ப­டு­கின்றார்.

அதே­வேளை மஹிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ராக இருப்­ப­தற்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னங்கள் நவம்பர் 14ஆம் மற்றும் 16ஆம் திக­தி­களில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. குரல் அடிப்­ப­டையில் எடுக்­கப்­பட்ட வாக்­குகள் 122 உறுப்­பி­னர்­களின் கையொப்­பங்­க­ளோடு ஜனா­தி­ப­தி­யான உங்­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டன. அது­மட்­டு­மன்றி இது­கு­றித்த சபா­நா­ய­கரின் அறிக்­கை­களும் தங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

மஹிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ராக இருப்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்தின் நம்­பிக்­கையை பெற்­றுள்­ளாரா என்ற வினா­விற்கு பெரும்­பான்­மை­யான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கருத்து மஹிந்த ராஜபக் ஷவிற்கு  எதி­ரா­கவே உள்­ளது. அது மாத்­தி­ர­மன்றி சந்­தே­கத்­திற்­கி­ட­மில்­லாமல் நிரூ­பிக்­கப்­பட்­டு­முள்­ளது. எனவே, மஹிந்த ராஜக் ஷ பிர­த­ம­ராக இனியும் இருப்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்தின் நம்­பிக்­கை­யினை பெற்­றுள்ளார் என்­ப­தனை நிரூ­பித்­துக்­காட்ட இய­லாது போயுள்­ளது. அத்­துடன் மஹிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ராக இருப்­ப­தற்கு எதி­ராக நவம்பர் 14 மற்றும் 16ஆம் திக­தி­களில் நிறை­வேற்­றப்­பட்ட நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னங்­க­ளா­னது, இந்த நாட்டில் ஒரு பிர­தம மந்­தி­ரியோ, அமைச்­ச­ர­வையோ, சட்­ட­பூர்­வ­மாக நிய­மிக்­கப்­பட்ட அர­சாங்கம் ஒன்றோ இருக்­கின்­ற­னவா என்ற முரண்­பாட்­டினை தோற்­று­வித்­துள்­ளது.

இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்க முடி­யாது என்­ப­தனை நாம்  கூறிக்­கொள்ள விரும்­பு­கிறோம். குறிப்­பிட்ட நிலையில் பாரா­ளு­மன்­றத்தின் நம்­பிக்­கையை பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­ப­டு­வ­தனை உறுதி செய்யும் வகையில், இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியை சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கிய நாம் கடந்த 26ஆம் திக­திக்கு முன்னர் இருந்த  ஐக்­கிய தேசிய முன்­னணி தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தினை மீள­மைப்­ப­தற்கு ஆத­ர­வ­ளிப்போம் என்­ப­தோடு, ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினால் நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்­றத்தின் பெரும்பான்மையினை பெறக்கூடியவர் என நீங்கள் கருதும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம் என ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் உள்ளிட்ட 14 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பமும் இடப்பட்டு தமது நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.