கனு­கெட்­டி­யவில் முஸ்லிம் வர்த்­த­கரின் கடை தீக்­கிரை

0 671

புத்­தளம்- குரு­நாகல் பிர­தான வீதியில் அமைந்­துள்ள கனு­கெட்­டிய நகரில் முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலையம் ஒன்று நேற்று முன்­தினம் இரவு தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளது. கட்­டிடப் பொருட்கள் விற்­பனை செய்யும் வர்த்­தக நிலையம் ஒன்றே இவ்­வாறு தீயில் எரிந்­துள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இத் தீ விபத்­துக்­கான காரணம் இது­வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு, பாணந்­துறை நகரில் இவ்­வாறு முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான நான்கு வர்த்­தக நிலையங்கள் தீயில் எரிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.