2020 ஹஜ் யாத்திரை: கோட்டா பகிர்வு ஏற்பாடுகள் குறித்து பிரதமருக்கு அறிக்கை

விரைவில் கையளிப்பு என்கிறது ஹஜ் தூதுக்குழு

0 700

2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டு­வ­தற்­காக சவூதி அரே­பி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு நாடு திரும்­பி­யுள்ள ஹஜ் தூதுக்­குழு ஹஜ் கோட்டா பகிர்வு மற்றும் ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் தனது அறிக்­கையை இரண்­டொரு தினங்­களில் பிர­த­மரும் கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷவிடம் கைய­ளிக்கத் திட்­ட­மிட்­டுள்­ளது.

2020 வரு­டத்­துக்கு இலங்­கைக்கு 3500 ஹஜ் கோட்டா கிடைத்­துள்­ள­தா­கவும் ஹஜ் கோட்டா பகிர்வில் புதிய முறை கையா­ளு­வ­தற்கு திட்­ட­மிட்­டப்­பட்­டுள்­ள­தா­கவும் ஹஜ் தூதுக்­கு­ழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரி­விக்­கையில் ‘ஹஜ்’ தூதுக்­கு­ழுவின் அறிக்கை இவ்­வா­றான சிபா­ரி­சு­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவே இருக்கும். ஹஜ் ஏற்­பா­டு­களில் ஊழல்­க­ளற்ற சிறந்த சேவை வழங்­கப்­பட வேண்டும். நியா­ய­மான முறையில் கோட்டா பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிலே பிர­த­மரும் இருக்­கிறார். இவ்­வ­கை­யான ஆலோ­ச­னை­க­ளையே அவர் எமக்கு வழங்­கி­யி­ருக்­கிறார்.

இலங்­கைக்கு இம்­முறை ஒரே தட­வையில் 3500 ஹஜ் கோட்டா சவூதி ஹஜ் அமைச்­சினால் வழங்­கப்­பட்­டுள்­ளது. நாம் மேலும் மேல­திக கோட்டா வேண்­டி­யி­ருக்­கிறோம். 2020இல் அதிக எண்­ணிக்­கை­யானோர் ஹஜ் கட­மையை நிறை­வேற்ற வேண்டும் என்­பதே எமது இலக்­காகும்.

மேல­திக ஹஜ் கோட்டா வழங்­கும்­போது ரமழான் மாதத்­துக்கு முன்பே வழங்­கப்­பட வேண்டும். அவ்வாறெனிலே எம்மால் மேலதிக கோட்டா தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்பதை விளக்கியிருக்கிறோம் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.