தேர்தல் பணிப்பாளர் நாயகமாக எம்.எம்.முஹம்மத் பதவி உயர்வு

0 865

2014 ஆம் ஆண்டு முதல் இது­வரை தேர்­தல்கள் திணைக்­க­ளத்தில் மேல­திக தேர்தல் ஆணை­யாளராகக் கடமை­யாற்றிய எம்.எம். முஹம்மத் தேர்தல் பணிப்­பாளர் நாய­க­மாக பத­வி­யு­யர்வு பெற்­றுள்ளார். அத்­த­ன­கல தொகு­தியைச் சேர்ந்த கஹட்­டோ­விட்­டவைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட எம்.எம்.முஹம்மத் தனது ஆரம்­பக்­கல்­வியை கஹட்­டோ­விட்ட அல் பத்­ரியா மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். பின்பு பேரு­வளை ஜாமிஆ நளீ­மியா கலா­பீ­டத்தில் உயர்­கல்­வியை மேற்­கொண்ட அவர் அங்கு 7 வரு­டங்கள் கல்வி கற்று தேறி­யதன் பின்பு அக்­கா­ல­சா­லை­யிலே விரி­வு­ரை­யா­ள­ராகப் பணி­யாற்­றினார்.

பின்பு அவர் அர­சாங்க சேவையில் பட்­ட­தாரி ஆசி­ரி­ய­ராக நிய­மனம் பெற்று 5 ஆண்­டுகள் பணி­யாற்­றினார். இவர் பேரா­தனை பல்­க­லைக்­க­ழகம் மற்றும் ஜாமிஆ நளீ­மியா கலா­பீடம் என்­ப­ன­வற்றின் பட்­ட­தா­ரி­யு­மாவார். பொது முகா­மைத்­துவ விசேட கற்கை நெறி­யி­னையும் பூர்த்தி செய்­துள்ளார்.

இலங்கை நிர்­வாக சேவை திறந்த போட்டிப் பரீட்­சையில் 1991 ஆம் ஆண்டு 19 ஆம் திகதி சித்­தி­ய­டைந்த மொஹமட் 1992 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை மொன­ரா­கலை மாவட்­டத்தில் உத­வித்­தேர்தல் ஆணை­யா­ள­ராக நிய­மனம் பெற்றார். பின்பு 1996 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2003 டிசம்பர் மாதம் வரை பதுளை மாவட்­டத்தின் உதவித் தேர்தல் ஆணை­யா­ள­ரா­கவும், 2004 ஆம் ஆண்டு முதல் 2007 நவம்பர் மாதம் வரை கம்­பஹா மாவட்­டத்தின் உத­வித்­தேர்தல் ஆணை­யா­ள­ரா­கவும் பதவி வகித்தார்.

இதே­வேளை, 2007 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2010 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி வரை கம்­பஹா மாவட்­டத்தின் பிர­தித்­தேர்தல் ஆணை­யா­ள­ராக பதவி உயர்வு பெற்று கட­மை­யாற்­றினார். 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் தேர்­தல்கள் திணைக்­க­ளத்தின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் இணைந்து கொண்ட அவர் 2014 ஆம் ஆண்டு வரை பிரதி தேர்தல் ஆணை­யா­ள­ராக (நிர்­வாகம்) பதவி வகித்தார்.

2014 ஆம் ஆண்டு முதல் தேர்தல் திணைக்­க­ளத்தின் மேல­திகதேர்தல் ஆணை­யா­ள­ராக கட­மை­யாற்­றி வந்த எம்.எம்.முஹம்மத் தேர்தல் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாய­க­மாக இன்று முதல் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவர் தனது புதிய பத­வி­யினை நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பொறுப்­பேற்றுக் கொண்டார். நீண்­ட­காலம் தேர்தல் திணைக்களத்தில் பல்வேறு பதவிகளை வகித்த முஹம்மத் அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமனம் பெற்றுள்ளமையானது முஸ்லிம் சமூகத்தை பெருமையடையச் செய்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.