சப்தமின்றி கருவறுக்கப்படும் உய்குர் முஸ்லிம்கள்

0 1,338

முத­லா­ளித்­து­வமும் கொம்­யூ­னி­சமும் மாறி மாறிப் பல நாடு­களை வளச்­சு­ரண்டல் நிமித்­தமும் இனச்­சுத்­தி­க­ரிப்­பா­கவும் இரத்த ஆற்றில் பல­முறை மூழ்கச் செய்­துள்­ளன. உதா­ர­ண­மாக, எண்ணெய் வள­மிக்க ஆப்­கானை தன்­ன­கப்­ப­டுத்த முதலில் ரஷ்­யாவும் பின் அதை எதிர்க்க உதவும் போர்­வையில் நுழைந்த அமெ­ரிக்­காவும் மாறி மாறி அந்த நாட்டை சூறை­யா­டின. எண்ணெய் வளத்தை சூறை­யாட ஈராக் மீதும் அதே பொறி­மு­றையை அமெ­ரிக்கா கையாண்­டது. ஈராக்கில் இருந்­தி­ராத இர­சா­யன ஆயு­தங்கள் இருப்­ப­தாக கூறி உள்­நு­ழைந்து தமக்கு சார்­பான ஒரு ஆட்­சியை அமைக்க சூழ்ச்சி செய்­தது முத­லா­ளித்­துவம். உள்­நாட்டு புரட்­சி­க­ளாக துவக்­கப்­பட்டு பின்னர் அமெ­ரிக்கா உள்­நு­ழைந்து தனக்கு சாத­க­மான ஆட்­சியை உரு­வாக்கும் போர்­வையில் லிபியா, எகிப்து போன்ற நாடு­களில் பொம்மை ஆட்­சி­களை ஏற்­ப­டுத்­தி­யது. அதே போன்று சிரி­யா­விலும் தோன்­றிய உள்­நாட்டுப் புரட்­சியை சாத­க­மாக்கி ஆட்­சி­யாளர் சார்பில் கொம்­யூ­னிச ரஷ்­யாவும் துணைக்கு துருக்­கியும் புரட்­சி­யா­ளர்கள் சார்பில் ISIS அழிக்கும் போர்­வையில் முத­லா­ளித்­துவ அமெ­ரிக்­காவும் கள­மி­றங்கி மிகுந்த செழிப்பும் வளங்­களும் நிறைந்த புனித பூமியை குரு­திப்­பு­ன­லாக்­கின.

மியன்­மாரில் ‌நெடுங்­கால வர­லாற்றைக் கொண்­டுள்ள ரோஹிங்ய முஸ்­லிம்­களை வேட்­டை­யாடும் இனச்­சுத்­தி­க­ரிப்பு இரத்த வெள்­ளமாய் இன்­னமும் ஓட்­டப்­ப­டு­கி­றது. இந்­தி­யாவின் இந்­துத்­துவ பாசிசம் காஷ்­மீரின் சிறப்­பு­ரி­மை­களை தகர்த்து அங்­கி­ருந்த முஸ்­லிம்­களின் பெரும்­பான்­மையை தகர்த்து தமது நிலத்­தி­லேயே சிறு­பான்­மை­யாக்கும் முயற்­சியில் ஜம்­மு–­காஷ்மீர், லடாக் யூனியன் பிர­தே­சங்­க­ளாக்­கி­யது; கட்­டுக்­க­டங்­காத கற்­ப­ழிப்­புகள், அடக்­கு­மு­றை­க­ளென அட்­டூ­ழி­யங்­களை கட்­ட­விழ்த்­துள்­ளது. குடி­யு­ரிமை திருத்த மசோதா என ரோஹிங்ய வழியை தானும் கைக்­கொள்­கி­றது. இவ்­வாறு உல­கெங்கும் பல முஸ்லிம் தேசங்­களில் வளச்­சு­ரண்­ட­லுக்­கான குழப்­பங்­களும் சில முஸ்லிம் சிறு­பான்மை நாடு­களில் அவர்­க­ளுக்கு எதி­ரான இன­வாத பாஸிஸ ஒடுக்­கு­மு­றை­களும் இடம்­பெற்­றுத்தான் வரு­கின்­றன. இவை­யெல்லாம் பெரு­ம­ளவில் உலக அரங்கில் பேசு பொரு­ளாக்­கப்­பட்­டாலும் சப்­த­மின்றி நிகழ்த்­தப்­படும் மிகப் பெரும் பிறி­தொரு இனச் சுத்­தி­க­ரிப்பை சீன கொம்­யூ­னிசம் உய்குர் முஸ்­லிம்கள் மீது நிகழ்த்தி வரு­கி­றது.

கொம்­யூ­னிஸ கொலைக் கலா­சாரம்

சீன கொம்­யூ­னிஸம் இன்­ற­ளவில் நிகழ்த்தும் இனச்­சுத்­தி­க­ரிப்பு வர­லாற்றில் புதி­ய­தல்ல. முத­லா­ளித்­துவ ஏகா­தி­பத்­தி­யமும் இன­வாத பாசி­சமும் எந்­த­ளவு உயிர்­களை உலக அரங்கில் குடித்­துள்­ளதோ அதற்கு நிக­ராக கொம்­யூ­னி­ஸமும் உலகில் ஏரா­ள­மான உயிர்­களை காவு­கொண்­டுள்­ளது. R.J. ரம்மல் தனது Death by Governments நூலில் 1900-–1987 வரை கொம்­யூ­னிஸம் 110 மில்­லியன் உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு மக்­களை அம்­மக்கள் ஆயுதம் ஏந்­தாத நிலை­யிலும் கொன்று குவித்­துள்­ள­தெனக் குறிப்­பிட்டார். பின்னர் சீனாவில் மாஓ சேதுங் நிகழ்த்­திய படு­கொ­லைகள் உள்­ள­டங்­க­லாக 1900-–1999 வரை 148 மில்­லியன் மனித உயிர்­களை கொம்­யூ­னிஸம் காவு­கொண்­டுள்­ள­தாகத் தனது கருத்தை 2005 இல் மீள்­தி­ருத்­தினார். கொம்­யூ­னிஸ தலை­வர்­க­ளான மாஓ சேதுங் 30-70 மில்­லியன் கொலை­க­ளு­டனும் ஜோசப் ஸ்டாலின் 20 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட கொலை­க­ளு­டனும் உலகின் முன்­னணி தனி­ம­னித கொலை­கா­ரர்கள் பட்­டி­யலில் முதலாம், இரண்டாம் இடங்­களை தக்க வைக்­கின்­றனர். இப்­புள்­ளி­வி­ப­ரங்­களே கொம்­யூ­னிஸம் உலக அரங்கில் நிகழ்த்­தி­யுள்ள மாபெரும் கொலை­களை பறை­சாற்­று­கி­றது.

கசிந்த 403 பக்க ஆவ­ணங்கள்

மார்க்­ஸியம் மாவோ­யி­ஸ­மாக சீனாவில் அறி­மு­க­மா­ன­போது வர­லாறு காணாத படு­கொ­லை­களை சம்­ப­வித்­ததைப் போல அதன் வழி­செல்லும் தற்­போ­தைய சீன அதிபர் ஷி ஜிங்பிங் ஆட்­சியும் மாஓ வழி­மு­றையில் சிறு­பான்மை முஸ்­லிம்கள் மீது கட்­டுக்­க­டங்­காத அடக்­கு­மு­றை­களை கட்­ட­விழ்த்­துள்­ளமை ஊட­கங்­க­ளுக்கு கசிந்­துள்ள சில சீன அரச ஆவ­ணங்கள் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. New York Times இற்கு கசிந்­துள்ள 403 பக்­கங்­களைக் கொண்ட சீன கொம்­யூ­னிஸ அரசின் ஆவ­ணங்கள் சீனாவின் ஷின்­ஜியாங் மாகா­ணத்தில் மில்­லியன் கணக்­கான உய்குர் முஸ்­லிம்கள் சிறை மற்றும் முகாம்­களில் வதைக்­கப்­ப­டு­வதை உல­கிற்கு வெளிச்­ச­மிட்டுக் காட்­டி­யுள்­ளன.
சீன அதிபர் ஷி ஜிங்பிங் நிகழ்த்­திய உள்­ளக உரைகள் 150க்கு மேற்­பட்ட பக்­கங்­களை இதில் கொண்­டுள்­ளன. இவை உய்குர் முஸ்­லிம்கள் மீது உச்­ச­கட்ட மேற்­பார்வை செலுத்­துதல் மற்றும் சீனாவின் ஏனைய பகு­திகள் இஸ்­லாத்தை தடுப்­ப­தற்­கான உத்­த­ர­வி­டல்­க­ளையும் திட்­ட­மி­டல்­க­ளையும் அம்­ப­லப்­ப­டுத்தி உள்­ளன. மேலும் ஷிங்­ஜி­யாங்கில் நிகழ்த்­தப்­படும் இனச்­சுத்­தி­க­ரிப்பு மற்றும் படு­கொ­லை­களை சர்­வ­தே­சமே எதிர்த்தும் விமர்­சித்தும் வரும் நிலையில், சர்­வ­தே­சத்தை உதா­சீ­னப்­ப­டுத்தி இனச்­சுத்­தி­க­ரிப்பை ஊக்­கு­விக்­கு­மு­க­மாக, “எதிர்க்கும் படை­களின் சிணுங்­க­லுக்கோ ஷிங்­ஜியாங் மீது அவர்கள் தப்­பெண்ணம் கொள்­வ­தையோ அஞ்­சா­தீர்கள்” என சீன அதிபர் பேசு­வ­தையும் இந்த ஆவ­ணங்கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.

மேற்­படி New York Times இற்கு கசிந்­துள்ள அரச ஆவ­ணங்கள் சீன கொம்­யூ­னிஸ அரசு உய்குர் முஸ்­லிம்கள் மீது கட்­ட­விழ்த்­து­விட்­டுள்ள அடக்­கு­மு­றை­களை உல­குக்கு வெளிச்சம் போட்டுக் காட்­டி­யுள்ள நிலையில் யார் இந்த உய்குர் முஸ்­லிம்கள் என்ற கேள்­வியும் ஒரு சாரா­ருக்கு எழாமல் இல்லை.

யார் இந்த உய்குர் முஸ்­லிம்கள்?

தற்­போ­தை­ய சீனாவில் 55 சிறு­பான்மை இனக்­கு­ழுக்­க­ளுடன் 91.6% பெரும்­பான்­மை­யி­ன­ராக ஹன் இன சீனர்கள் வாழ்­வ­தாக சீன அரச புள்­ளி­வி­ப­ரங்கள் தெரி­விக்­கின்­றன. சிறு­பான்மை இனங்­களுள் 10 இனக்­கு­ழுக்கள் இஸ்­லா­மி­யர்­க­ளாவர். எண்­ணிக்­கையில் சுமார் 2-10 கோடிகள் வரை முஸ்­லிம்கள் சீனாவில் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதில் உய்குர் மற்றும் ஹுய் இன முஸ்­லிம்­களை அரச ஆவ­ணங்­களில் அறிய முடி­கி­றது. இவர்­களில் பதி­னொரு மில்­லியன் உய்குர் முஸ்­லிம்கள் வாழ்­வ­தாக புள்­ளி­வி­வ­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

பிராந்­தி­யத்தின் பூர்­வீக குடி­யி­ன­ரான உய்குர் முஸ்­லிம்கள் தற்­போ­தைய சீனாவின் ஷின்­ஜியாங் மாகா­ணத்தில் வாழ்­கின்­றனர். துர்க்­கர்­க­ளான இவர்கள் அரபி எழுத்­துக்­களை எழுத்து வடி­வ­மாக கொண்ட துருக்­கிய மொழி­களுள் ஒன்­றான உய்குர் மொழி பேசு­வோ­ராவர். இவர்கள் வாழும் பிராந்­தியம் ஷின்­ஜியாங் எனவும் சீனாவின் ஒரு பிராந்­தி­ய­மா­கவும் தற்­போது அறி­யப்­பட்­டாலும், 1949 இலேயே இது சீனா­வுடன் இணைக்­கப்­பட்­டது. சீனப் படை­யெ­டுப்பின் மூலம் சீனா­வுடன் அத்­து­மீறி இணைக்­கப்­பட்­டது. அது­வரை முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்­டி­ருந்த ஒரு சுதந்­திர நாடாக கிழக்கு துர்­கிஸ்தான் என அறி­யப்­பட்ட தேசமே இப்­பி­ராந்­தி­ய­மாகும்.

கிழக்கு துர்­கிஸ்தான்

உய்குர் முஸ்­லிம்­களின் தாய் நாடான கிழக்கு துர்­கிஸ்தான் மிகப் புரா­தன வர­லாற்றுப் பாரம்­ப­ரியம் கொண்­டது. வர­லாற்­றா­சி­ரியர் முஹம்மத் ஐமின் பேக்ரா தனது A History of East Turkestan எனும் நூலில் துர்க்­கர்கள் 9000 ஆண்டு கால வர­லாற்றைக் கொண்­ட­வர்கள் எனக் குறிப்­பி­டு­கிறார். டேகன் அல்மாஸ் எனும் வர­லாற்­றா­சி­ரியர் இப்­ப­கு­தியில் பெறப்­பட்ட தாரிம் மம்­மிகள் அடிப்­ப­டையில் உய்குர் இனத்­த­வர்கள் 6400 வரு­ட­கால வர­லாற்றைக் கொண்­ட­வர்கள் எனக் கரு­து­கிறார். மேலும் கிழக்கு துர்­கிஸ்தான் சுமார் 4000 ஆண்­டு­கால வர­லாற்றைக் கொண்­டுள்­ள­தாக உலக உய்கூர் காங்­கிரஸ் குறிப்­பி­டு­கி­றது. இத்­த­ர­வுகள் இவ்­வி­னத்­த­வர்­களின் தொன்­மை­யையும் பூர்­வீ­கத்­தையும் தெளி­வு­ப­டுத்­து­கி­றது.

உய்குர் காகனைட், கன்சு பேர­ரசு, கோச்சோ பேர­ரசு (உய்­கு­ரிஸ்தான்), காராகான் கானைட் உள்­ளிட்ட பல ஆட்­சி­களின் கீழ் எட்டாம் நூற்­றாண்டு முதல் ஆளப்­பட்ட இப்­பி­ர­தேசம் பத்தாம் நூற்­றாண்டில் இஸ்­லா­மிய மய­மா­னது. 934 இல் உய்குர் ஆட்­சி­யா­ள­ரான சதுக் போக்ரா கான் இஸ்­லாத்தை ஏற்றார். அதைத் தொடர்ந்து குறித்த பிராந்­தி­யத்தில் இஸ்லாம் துரித வளர்ச்­சி­கண்­டது. இதி­லி­ருந்து 1759 வரை உய்குர் இனத்­த­வர்கள் சுயா­தீன பேர­ர­சாக சிறப்­பான ஆட்­சியை அங்கு வழி­ந­டத்­தினர். 1759 இல் இடம்­பெற்ற சீனாவின் மஞ்சு படை­யெ­டுப்பால் இராச்­சியம் அவர்கள் வச­மா­னது. உஸ்­மா­னிய பேர­ரசின் உத­வி­யுடன் 1864 இல் அந்­நியர் ஆட்­சி­யி­லி­ருந்து உய்­குர்கள் விடு­பட்­டனர். மீண்டும் 1884இல் மிகுந்த படைப்­ப­லத்­துடன் சீனர்கள் கிழக்கு துர்­கிஸ்­தானை கைப்­பற்றி ஷின்­ஜியாங் என பெயர் மாற்றம் செய்­தனர். ஆனாலும் உய்குர் அடி­ப­ணி­ய­வில்லை. புரட்­சிகள் பல வெடித்­தன; 1945 இல் புரட்சி வெற்றி கண்­டது; கிழக்கு துர்­கிஸ்தான் மக்கள் குடி­ய­ரசு சுதந்­தி­ரமும் அடைந்­தது.

ஆனால், அத்­தோடு அதன் சுதந்­திரம் நிலைத்­து­வி­ட­வில்லை. மீண்டும் சீனா தாக்­கி­யது; இப்­போது ஏற்­க­னவே தாக்­கிய புரா­தன சீனா அல்ல, ஒரு புதிய சீனா தோன்­றி­யி­ருந்­தது. அது கொம்­யூ­னிஸ சீனா, மாஓ வழி­ந­டாத்­திய சீனா. 1949 இல் உய்­குரின் சுதந்­தி­ரத்தைப் பறித்து அத்­து­மீறி சட்­ட­வி­ரோ­த­மாகத் தன்­னாட்சி கொண்ட ஷின்­ஜியாங் மாகாணம் எனும் பெயரில் கிழக்கு துர்­கிஸ்தான் எனும் சுதந்­திர நாட்டை கொம்­யூ­னிஸ சீனா தன்­ன­கப்­ப­டுத்­தி­யது. இந்­தி­யா­விற்கு ஒரு சுதந்­திர காஷ்மீர் போன்று கொம்­யூ­னிஸ சீனா­விற்கு சுதந்­திர கிழக்கு துர்­கிஸ்தான் அமைந்­துள்­ளது.

கேந்­திர முக்­கி­யத்­துவம்

மிகப் புரா­தன வர­லாற்றைக் கொண்ட இப்­பி­ராந்­தியம் சீனாவின் மொத்த நிலப்­ப­ரப்பில் ஆறில் ஒரு பங்­காகும். மொங்­கோ­லியா, ரஷ்யா, கஸ­கஸ்தான், கிர்­ஜிஸ்தான், தஜி­கிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்தான், இந்­தியா உள்­ளிட்ட நாடு­களால் சூழப்­பட்ட ஒரு கேந்­திர மையத்தில் இப்­பி­ராந்­தியம் அமைந்­துள்­ளது. இதனால் சீனாவின் பட்டுப் பாதையில் கிழக்கு துர்­கிஸ்­தானின் பங்கு அளப்­ப­ரி­யது. ஐரோப்பா மற்றும் மத்­திய ஆசி­யாவை இலக்கு வைக்கும் தரை­வழி பட்டுப் பாதையின் மும்­மார்க்­கங்­களும் இதைத் தாண்­டியே செல்­லுதல் வேண்டும். பட்டுப் பாதையில் இதன் அமை­வி­ட­மா­னது வர்த்­தக, கல்வி மற்றும் கலா­சாரப் பர­வலில் மிக வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த பிராந்­தி­ய­மாக இதை ஆக்­கி­யுள்­ளது. மேலும் எண்ணெய், எரி­வாயு உள்­ளிட்ட பல வளங்கள் நிறைந்த நிலத்­தோற்ற அமைப்­பையும் கொண்ட பிராந்­தி­ய­மாகும்.

இக்­கேந்­திர முக்­கி­யத்­து­வங்கள் கிழக்கு துர்­கிஸ்­தானை சீனா கைப்­பற்றி வைத்­தி­ருக்க ஏது­வான கார­ணி­க­ளாகும். மேலும், அதி­க­ரித்த சீன சனத்­தொ­கையும் கார­ணங்­களுள் ஒன்­றாக இருக்­க­லா­மெனக் கரு­தப்­ப­டு­கி­றது‌. இவற்­றிற்­கெல்லாம் மேலாக கொம்­யூ­னிஸம் கொண்­டுள்ள இஸ்­லா­மிய எதிர்ப்பும் கொம்­யூ­னிஸத் திணிப்பும் இங்கு நிகழ்த்­தப்­படும் வன்­கொ­டு­மை­க­ளுக்குப் பிர­தான கார­ண­மா­கி­றது.

கட்­டுக்­க­டங்­காத ஒடுக்­கு­முறை

1949 இல் வலுக்­கட்­டா­ய­மாக கிழக்கு துர்­கிஸ்­தானை இணைத்துக் கொண்­ட­தோடு நிறுத்­த­வில்லை சீன அரசு. தன்னை மதங்­க­ளுக்கு ஆத­ர­வற்ற நாத்­திக சிந்­தனை கொண்ட கொம்­யூ­னிஸ அர­சாக வெளிப்­ப­டுத்தும் சீன அரசு, தனது கட்­டுப்­பாட்டில் தொடர்ந்தும் குறித்த பிராந்­தி­யத்தை பேண இஸ்ரேல், அமெ­ரிக்க பாணியில் முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொள்­கி­றது. பெரும்­பான்மை முஸ்­லிம்­க­ளோடு வாழ்ந்த பாலஸ்­தீனப் பகு­தியில் பல்போர் பிர­க­ர­டனப் போர்­வையில் இல்­லாத நாடொன்றை ஏற்­க­னவே இருந்து வந்த நாட்டில் உரு­வாக்கி அங்­கி­ருந்த முஸ்­லிம்­களை அங்கு கூறாக்கி சித­றச்­செய்து கட்­டுப்­பா­டற்ற யூதக் குடி­யி­ருப்­பு­களை துரி­தப்­ப­டுத்தி முஸ்­லிம்­களை தங்கள் நிலத்­தி­லேயே சிறு­பான்­மை­யாக்கும் நோக்கில் பய­ணிக்­கி­றது இஸ்ரேல்.

இதே வழி­மு­றை­யைத்தான் சீனா கையாள்­கி­றது. ஆரம்­பத்தில் தற்­போது ஷின்­கியாங் என அறி­யப்­படும் கிழக்கு துர்­கிஸ்தான் 95% முஸ்­லிம்­களை கொண்­டி­ருந்­தது. பின்னர் படிப்­ப­டி­யாக ஹன் இன சீனர்­களை திட்­ட­மிட்டு குடி­யேற்­றினர்; நூற்­றுக்­க­ணக்­கான இரா­ணுவ கிரா­மங்­களை உரு­வாக்கி அவர்­க­ளது குடும்­பங்­களை குடி­ய­மர்த்­தினர். இவ்­வாறு கட்டம் கட்­ட­மாக குறித்த பிராந்­திய சனத்­தொ­கையில் நூதன மாற்­றத்தை சீனா முன்­னெ­டுத்­தது. தற்­போது 95% இருந்த முஸ்­லிம்கள் 57% ஆகி­யுள்­ளனர். இவ்­வாறு அங்கு வாழும் முஸ்­லிம்­களை சிறு­பான்­மை­க­ளாக்கி பல­மி­ழக்கச் செய்து தமது ஆதிக்­கத்தை கொம்­யூ­னிஸம் நிலை­நாட்­டு­கி­றது.

இதுபோல் ஒரு யுக்­தி­யையே காஷ்­மீரை இரு யூனியன் பிரதேங்­க­ளாக்­கி­யதன் மூலம் முஸ்­லிம்­களை சித­றச்­செய்து அவர்­க­ளது பூமியில் அவர்­க­ளையே சிறு­பான்­மை­யாக்கும் முயற்­சியில் மோடி அரசும் ஈடு­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்­கலாம்.

அத்­தோடு நிறுத்­தாத சீனா 2001 செப்­டம்பர் தாக்­கு­தலைத் தொடர்ந்து அமெ­ரிக்கா கையி­லெ­டுத்த பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போர் எனும் போர்­வையை தானும் போர்த்­திக்­கொள்ள விழைந்­துள்­ளது. சிறு­பான்மை ஆக்­கு­வ­தோ­டல்­லாது, சிறு­பான்மை ஆகிய அவர்­க­ளது மத உரி­மை­களைப் பறித்து, வதை முகாம்­களில் மூளைச்­ச­லவை செய்து தமது நியா­ய­மான சுதந்­திர வேட்­கையை உய்குர் முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து தகர்த்து ஷி ஜிங்பிங் அர­சுக்கு வாலாட்டும் கொம்­யூ­னிஸ அடி­மை­க­ளாக்க முயல்­கி­றது.

சுமார் இரண்டு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான உய்குர் முஸ்­லிம்­களை ஆயி­ரக்­க­ணக்­கான சீன கொம்­யூ­னிஸ தடுப்பு முகாம்­களில் “மீளக் கல்­வி­யூட்டல்” எனும் போர்­வையில் அரசு தடுத்து வைத்­துள்­ளது. இஸ்­லாத்தை கைவி­டு­மாறு நிர்ப்­பந்­தித்தல், பன்றி இறைச்சி உண்ண வைத்தல், படு­கொ­லைகள், பெண்கள் மீதான பாலியல் வன்­கொ­டு­மை­க­ளென ஏரா­ள­மான சித்­தி­ர­வ­தை­களை முகாம்­களில் செய்­கின்­றனர். இம்­மு­காம்­களில் இருந்து தப்பி அமெ­ரிக்கா, துருக்கி, கஸ­கஸ்தான் போன்ற நாடு­களில் அக­தி­க­ளாக குடி­யே­றிய உய்­குர்கள் இதை வெளி உல­கிற்கு அறியத் தந்­துள்­ளனர்.

மனித உரிமை மீறப்­படும் வகையில் ஒரு வகுப்பில் ஐந்­துக்கும் மேற்­பட்ட CCTV கம­ராக்­களால் முற்­றிலும் அவர்­களைக் கண்­கா­ணித்து கொம்­யூ­னிஸம் போதிக்­கப்­பட்டு மூளைச்­ச­லவை செய்­யப்­ப­டு­கி­றார்கள்; படு­கொலை செய்­யப்­ப­டு­கி­றார்கள். இத்­த­கைய வன் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு Huawei போன்ற முன்­னணி நிறு­வ­னங்கள் பங்­க­ளிப்பு செய்­கின்­றன. இதை பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போரென நாகூ­சாது பேசு­கி­றார்கள். இஸ்­லாத்­திற்கு முற்­றிலும் எதி­ரான போக்கைக் கொண்ட சீன கொம்­யூ­னிஸ அரசு ஹலாலை தடை செய்­தது, தொழு­கைக்­கான அதானை தடை செய்­தது, நோன்பு நோற்கத் தடை­வி­தித்­தது, ஹஜ்­ஜுக்குத் தடை­வி­தித்­தது, இஸ்­லா­மிய ஆடை­களை தகர்த்­தது, அரபு மொழியை நீக்­கி­யது, மஸ்­ஜித்­களை நிர்­மூ­ல­மாக்­கி­யது, பெண்­களை கற்­ப­ழித்து, சிறு­வர்­களை கொன்­று­கு­வித்து இன­வ­ழிப்பு நிகழ்த்­து­கி­றது. இவ்­வாறு ஒட்­டு­மொத்த குரோ­தத்­தீயை இஸ்­லாத்­திற்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விட்­டுள்­ளது. இவற்றை கசிந்த 403 பக்க அரச ஆவ­ணங்கள் தோலு­ரித்­துள்­ளன.

2017 இல் சீன கட்­ட­டக்­கலை மர­பு­ரி­மை­களுள் ஒன்­றாக பட்­டி­ய­லி­டப்­பட்ட, 1237 களில் கட்­டப்­பட்ட கெரியா பள்­ளி­வா­சலும் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டது. RFA உய்கூர் அறிக்கை பிர­காரம் 2017 இல் மட்டும் சுமார் 5000 பள்­ளி­வா­சல்கள் தகர்க்­கப்­பட்­டுள்­ளன. மீத­முள்ள பள்­ளி­வா­சல்­க­ளிலும் உச்சகட்ட சோதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. இஸ்லாமிய மரபு என்ற எதற்கும் இடமற்ற ஒன்றாக அவற்றை ஆக்குவதோடு தொடர்ந்தும் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டே வருகின்றன. ஆனாலும் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை இது ஏற்படுத்தவில்லை.

தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் முழு மக்களும் எவ்விதசுதந்திரமுமற்ற முழுநேர அரச கண்காணிப்பின் கீழ் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை வழிநடாத்தும் சீன அரசு மற்றும் அதன் அதிபரை தோலுரித்து உலகுக்கு ஆவணப்படுத்தி அம்பலப்படுத்துவதாகவே கசிந்த ஆவணங்கள் அமைந்துள்ளன.

நிலைமை ஆய்வுசெய்ய செல்லும் ஊடகங்களை அரச படைகள் கட்டுப்படுத்துகின்றன. ஊடக சுதந்திரம் புறக்கணிக்கப்படுகிறது. கசிந்தும் அங்கிருந்து தப்பியவர்கள் மூலமும் சில உண்மைகள் வெளிவருகின்றன. ஆனாலும் அதை வெறுமனே பொய்யெனக் கடந்தும் செல்கிறது சீனா. இங்கு எழும் கேள்வி யாதெனில், 1948 இல் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பிரகடனத்தை நிறைவேற்றியுள்ளது.

டிசம்பர் 10 இல் மனித உரிமைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. ஆனாலும், பன்னெடுங்கால வரலாற்றைக் கொண்ட ஓரினம் எம் கண்ணெதிரே இனச் சுத்திகரிப்புக்கு உள்ளாகி வருகிறது; மத சுதந்திரம் மீறப்பட்டு கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு வாழும் உரிமையைக்கூட அதன் அரசே அவர்களிடமிருந்து பறிக்கிறது ஆனாலும் சர்வதேசம் இரு வரி மறுப்புகளோடு மறு கதை தேடித் தாவுகிறது. பாலஸ்தீன், ரோஹிங்யா, ஸ்ரப்ரனீட்சா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, எகிப்து, சிரியா, காஷ்மீர் வரிசையில் இதுவும் ஒரு துர்கிஸ்தான் என சர்வதேச உலகும் பெயரளவில் தங்களை இஸ்லாமிய பேரரசுகள் எனக் கூறிக்கொள்ளும் நாடுகளும் கடந்து செல்கின்றன.-Vidivelli

  • ஓட்டமாவடி
    எம்.ஐ.முஹம்மது ஸப்ஷாத்
    மொறட்டுவ பல்கலைக்கழகம்

Leave A Reply

Your email address will not be published.