மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் சுவீகரிக்க வேண்டும்

பாராளுமன்றத்தில் கல்விப் பிரிவு செயற்குழு

0 813

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ்வின் மட்டக்களப்பில் நிர்­மா­ணி­க­கப்­பட்­டுள்ள ‘பெட்­டி­கலோ கெம்பஸ்‘ (மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழகம்) எனும் கல்வி நிறு­வ­னத்தை அர­சாங்கம் சுவீ­க­ரிக்க வேண்டும் என அக்­கல்வி நிறு­வனம் தொடர்­பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த பாரா­ளு­மன்­றத்தின் கல்விப் பிரிவு செயற்­குழு தெரி­வித்­துள்­ளது.பாரா­ளு­மன்ற கல்­விப்­பி­ரிவு செயற்­கு­ழுவின் அறிக்கை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. ‘குழுவின் அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், குழுவின் சிபா­ரி­சுக்­க­மைய பட்­டி­கலோ கம்­பஸை அரசு சுவீ­க­ரிக்க நட­வ­டிக்கை எடுக்கும் என தான் எதிர்­பார்ப்­ப­தா­கவும் குழுவின் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பேரா­சி­ரியர் ஆசு மார­சிங்க தெரி­வித்தார்.

குறிப்­பிட்ட அறிக்கை இதற்கு முன்பு முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிரி­சே­ன­விடம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் ஆனால் அவரால் குழுவின் சிபா­ரி­சு­களை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாமற் போன­தா­கவும் அவர் கூறினார்.
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த காலத்தில் அர­சாங்­கத்­துடன் உடன்­ப­டிக்­கை­களை மேற்­கொண்டு பட்­டி­கலோ கம்­பஸை நிறு­வி­யமை சட்­ட­வி­ரோத செய­லாகும். இதன் மூலம் அவர் தனது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியைத் தவ­றாகப் பயன்­ப­டுத்­தி­யுள்ளார். இதற்கு எதி­ராக அவர்­மீது நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் எனவும் அவர் தெரி­வி­ததார்.
ஹிஸ்­புல்லாஹ் சவூதி அரே­பி­யா­வி­ட­மி­ருந்து கிடைக்­கப்­பெற்ற சுமார் 300 கோடி நிதியின் மூலம் இப்­பல்­க­லைக்­க­ழ­கத்தை நிறு­வி­யுள்­ளதால் இந்த நிதி எந்த அடிப்­ப­டையில் கிடைத்­தது என்­பது தொடர்பில் சந்­தேகம் நில­வு­வ­தாக கடந்த காலத்தில் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்பு இந்த நிறு­வ­னத்­துக்கு எதி­ராக பலத்த எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­ட­துடன், உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த பாரா­ளு­மன்ற விசேட தெரிவுக் குழு முன்­னி­லை­யிலும் சாட்­சி­ய­ம­ளிக்க ஹிஸ்­புல்லாஹ் அழைக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.