சவூதி அரேபியாவில்: 18 வயதுக்குட்பட்டோர் திருமணம் செய்ய தடை

0 784

சவூதி அரே­பி­யாவின் நீதி­ய­மைச்சு 18 வய­துக்குக் கீழ்­ப்பட்­ட­வர்­களின் திரு­ம­ணத்­துக்கு தடை விதித்­துள்­ளது. திரு­மணம் செய்து கொள்­வ­தற்­கான ஆகக்­கு­றைந்த வய­தெல்லை 18 என அறி­வித்­துள்­ளது.

சவூதி அரே­பி­யாவின் நீதி­ய­மைச்­சரும், உயர் நீதிச்­ச­பையின் தலை­வ­ரு­மான ஷேக்.கலா­நிதி வலீத் அல்­ஸ­மானி 18 வய­துக்­குட்­பட்­ட­வர்­களின் திரு­ம­ணத்­துக்கு தடை விதிக்­கு­மாறு வலி­யு­றுத்தி அனைத்து நீதி­மன்­றங்­க­ளுக்கும் சுற்று நிருபம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்ளார். 18 வய­துக்­குட்­பட்­ட­வர்­களின் திரு­ம­ணத்­துக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அச்­சுற்­று­நி­ரு­பத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இது போன்ற அனைத்து கோரிக்­கை­களும், சர்­வ­தேச சிறுவர் பாது­காப்புச் சட்ட விதி­களை பூர­ணப்­ப­டுத்­து­வ­தற்கும் நிறு­வப்­பட்­டுள்ள விதி­மு­றை­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்கும் சிறப்பு நீதி­மன்­றத்­துக்கு பரிந்­து­ரைக்­கப்­ப­ட­வுள்­ளது.

நீதி­ய­மைச்சர் வலீத் அல்­ஸ­மா­னியின் கட்­ட­ளைகள் சிறுவர் பாது­காப்புச் சட்­டத்தின் நிறை­வேற்று விதி­மு­றை­களின் பிரிவு 16/3 ஐ அடிப்­ப­டை­யாகக் கொண்­டவை. இது திரு­மண ஒப்­பந்­தங்­களை நடத்­து­வ­தற்கு முன்பு 18 வய­துக்­குட்­பட்ட ஒருவர் திரு­மணம் செய்­வ­தா­னது அவ்­ஆணின் அல்­லது அப்­பெண்ணின் சிறந்த நலன்களை அடைவதில் தீங்கு விளைவிக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவு தெரிவிக்கிறது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.