பாபர் மசூதி வழக்கும் வரலாறும்

0 1,445

மிகவும் எதிர்­பார்க்­கப்­பட்ட அயோத்தி நிலத்­த­க­ராறு வழக்கின் உச்ச நீதி­மன்ற இறுதித் தீர்ப்பு நவம்பர் 9 சனிக்­கி­ழமை அன்று வெளி­யா­னது. தலைமை நீதி­பதி ரஞ்சன் கோகோய் தலை­மை­யி­லான ஐந்து பேரைக் கொண்ட நீதி­ப­திகள் குழு ஒரு­மித்த தீர்ப்­பாக இதை வெளி­யிட்­டுள்­ளது. குறித்த தீர்ப்பை புரிந்து கொள்­ள வழக்கின் பின்­ன­ணி­யையும் பாபர் மசூ­தியின் வர­லாற்றுப் பக்­கங்­க­ளையும் சற்று அலச நேர்­கி­றது.

வழக்கின் பின்­னணி

சுமார் ஐந்­நூ­றாண்­டுகள் வர­லாற்றைக் கொண்ட இஸ்­லா­மிய வழி­பாட்டுத் தல­மான பாபர் மசூதி இந்­துக்­களின் இராமர் கோவிலை இடித்துக் கட்­டப்­பட்­டது என்றும் குறித்த மசூதி அமை­யப்­பட்­டுள்ள இடம் இராமர் பிறந்த இட­ம் என்றும் இதனால் மசூதி அமை­யப்­பெற்ற நிலம் இந்­துக்­க­ளுக்கு சொந்­த­மா­னது என்­பது சில இந்து அமைப்­பு­களின் நம்­பிக்கை. ஆனால் 500 ஆண்­டுகள் வர­லாற்­றுடன் அங்கு மசூதி இருக்­கி­றது. இது இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு சொந்­த­மான நிலம் என்­பது இஸ்­லா­மி­யர்­களின் வாதம். இந்த நிலம் யாருக்கு சொந்­த­மா­னது என்­பதே உச்ச நீதி­மன்ற வழக்­காகும். இந்தப் பின்­ன­ணி­யுடன் வர­லாற்­றினுள் செல்­லலாம்.

பாபர் மசூதி கட்­டப்­படல்

மொக­லாய பேர­ரசர் பாபரினது கட்­ட­ளையின் பெயரில் அவ­ரது ஆளுநர் மீர் பாகியினால் 1528 களில் தற்­போ­தைய உத்­தரப் பிர­தேச அயோத்­தி­யாவின் மலைக்­குன்றில் கட்­டப்­பட்ட பள்­ளி­வா­சலே பாபர் மசூ­தி­யாகும். இவ்­வ­ர­லாற்றை மசூ­தியின் முகப்பு வாயிலின் பார­சீக எழுத்­து­ருக்கள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன. அதி­லி­ருந்து சுமார் மூன்­றரை நூற்­றாண்­டு­க­ளாக மசூதி இயல்­பா­கவே செயற்­பட்டு வந்­தது.

வர­லாற்றில் முதன்­மு­றை­யாக 1857 இல் நவாப் ஆட்சி முடிந்து பிரித்­தா­னியர் ஆட்சி தொடங்­கி­ய­போது, இராமர் பிறந்த இடம் அது­வெனக் கோரி வழி­பா­டுகள் செய்ய இந்­துக்கள் விழை­கின்­றனர். பீடம் அமைத்து பூஜை செய்­கின்­றனர். இதனால் எழுந்த பிரச்­சி­னை­களை தீர்க்க பிரித்­தா­னிய அரசு தடுப்பு சுவரை எழுப்­பி­யது. ஒரே வாயிலில் அரு­க­ருகே மசூ­தியும் பீடமும் தடுப்பு சுவரால் பிரிக்­கப்­பட்டு இயங்கி வந்­தன. தொடர்ந்தும் இஸ்­லா­மிய வழி­பா­டு­க­ளுக்கு இடை­யூ­றாக இந்­துக்கள் நடந்­து­கொள்ள பல ரிட் மனுத்­தாக்­கல்­களும் பிரித்­தா­னிய அரசில் மேற்­கொள்­ளப்­பட்­டது.

நிர்­மோஹி அகாரா அமைப்பின் வகிபாகம்

கருத்து வேறு­பா­டுகள் தொடர நிர்­மோஹி அகாரா எனும் துற­விகள் குழுவின் அமைப்பு குறித்த இடத்தில் கோவில் அமைக்க 1883 இல் பைசாபாத் துணை ஆணை­ய­ருக்கு விண்­ணப்­பிக்க அது நிரா­க­ரிக்­கப்­பட்­டது. பீடம் அமைந்த இடமே இராமர் பிறந்த இட­மென இவ்­வ­மைப்பு ஆதா­ரங்கள் ஏது­மின்றிக் கோஷ­மிட்­டது. அதை முன்­னி­றுத்தி 1885 இல் கோவில் கட்ட அனு­மதி மறுத்­த­மைக்கு எதி­ராக வழக்கும் தொடுத்­தது. மூன்­றரை நூற்­றாண்­டு­க­ளாக மசூதி இருந்து வரு­வதைக் காட்டி கோரிக்கை மறுக்­கப்­பட்­டது. 1886 இல் இவர்கள் மேற்­கொண்ட இரண்டாம் மனுவும் நில­வு­ரி­மைக்­கான எந்த ஆதா­ரங்­களும் நிர்­மோஹி அகா­ரா­விடம் இல்­லை­யெனத் தீர்ப்­ப­ளித்­தது.

பாபர் மசூதி: இந்­துத்­துவா அர­சியல்

இந்­துத்­துவா தனது அர­சி­யலை அஹிம்­சையின் தந்­தையின் கொலை­யி­லி­ருந்து துவங்­கி­யது. இந்து மகா சபா உறுப்­பினர் மஹந் திக்­விஜய் நாத் திட்டம் தீட்ட கோட்­சேவால் 1948 இல் மகாத்மா கொல்­லப்­பட்டார். இதற்­காக சிறை சென்று திரும்­பிய விஜய் நாத் இனது அடுத்த அர­சியல் பொறி­யாக இராமர் கோவில் அமைந்­தது.

சிறு­பான்­மை­க­ளுக்கும் சம­மான குர­லாக ஒலித்த காந்­தியைக் கொன்ற இந்­துத்­து­வாக்கள், 1949 டிசம்­பரில் பாபர் மசூ­தி­யினுள் அத்­து­மீறி உள்­நு­ழைந்து இராமர், சீதை, இலட்­சு­மணன் சிலை­களை வைத்­தனர். மசூ­தியின் சுவ­ரெங்கும் ஆண் பெண் தெய்வ உரு­வங்­களை வரைந்­தனர். சிலை தானாக தோன்­றி­ய­தாக கதை கூறினர்.

ஆனால் RSS அமைப்­பினைச் சேர்ந்த மாவட்ட ஆட்­சியர் நாயரின் இர­க­சிய உத­வி­யோடு அபி­ரம்தாஸ் என்­ப­வனும் இன்னும் சிலரும் இணைந்து மதி­லேறி குதித்து இத்­த­கைய இழி­செயல் மேற்­கொண்­டமை தெரி­ய­வந்­தது. மசூ­தியை களங்கம் செய்­த­தாக காவல்­துறை மூலமே அவன்­மீது வழக்கும் தொடுக்­கப்­பட்­டது, பின் அது நீரில் எழுத்­தா­னது.

பிர­தமர் நேரு இதைக் கண்­டித்­தாலும் மாவட்ட ஆட்­சியர் நாயர் நகர நீதிவான் குருதத் சிங் ஆகியோர் RSS அமைப்பைச் சேர்ந்த இந்­து­வாக்கள் என்­பதால் குறித்த ஈனச்­செயல் அர­சியல் அரங்­கேற்றம் கண்­டது. RSS உடன் இதில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) உம் கைகோர்த்­தது. பள்­ளியில் தொழ முஸ்­லிம்கள் தடுக்­கப்­பட்­டார்கள். மசூதி மூடி முத்­தி­ரை­யி­டப்­பட்­டது.

தங்கள் உரி­மைக்­காக முஸ்­லிம்கள் சார்பில் சன்னி வக்பு வாரியம் நீதி­மன்­றத்தை நாடியது. RSS இன­வா­தி­களே அங்கும் இருக்க சிலையை மசூ­தியில் இருந்து நீக்­கவோ, வழி­பாட்டைத் தடுக்­கவோ நீதி­மன்றம் தடுத்­தது. 1986 இல் இந்­துக்­க­ளுக்கு அதை திறக்க ஆவன செய்­தது. அதே ஆண்டில் பாபர் மசூதி செயற்­பாட்­டுக்­குழு நிறு­வப்­பட்­டது.

கட­வுளின் நண்­ப­ராக வழக்கில் மூன்றாம் தரப்பு

1989 இல் வழக்­குகள் உத்­தரப் பிர­தேச உயர் நீதி­மன்­றத்­துக்கு மாற்­றப்­பட, இந்­துக்கள் கடவுள் எனக் கருதும் இரா­மரின் நெருங்­கிய நண்பர் எனக்­கூறி திரி­லோக்நாத் பாண்டே வழக்கில் இணைந்தார். கட­வுளின் நண்­ப­ராக ஒருவர் வழக்கில் இணை­வது உலக வர­லாற்றில் இதுவே ஒரே முறையாய் இருக்க வேண்டும். இத்­த­கைய அதி­ச­யங்கள் இந்­தி­யா­வி­லேயே சாத்­தி­ய­மாகும்.

RSS இன் தீவிர பக்­த­ரான இவர் VHP அங்­கத்­த­வ­ராவார். அயோத்­தியில் பாபர் மசூ­தியை இடித்து கோவில் கட்­டு­வோ­மெனக் கலகம் புரியும் குறித்த அமைப்­புக்கள் தங்கும் VHP வளா­கத்­தி­லேயே இவர் தங்­கினார். கடவுள் சார்பில் இவரே கையெ­ழுத்­தி­டுவார். கட­வுளின் சிலை தனி­ந­ப­ராக கரு­தப்­ப­டு­வ­தோடு கடவுள் தனக்கு ஒரு நண்­ப­ரையும் தேர்ந்­தெடுத்துக் கொள்­ளலாம் என்­பது இந்­திய சட்டம்.

இங்கு எழும் கேள்வி கட­வுளின் நண்­பரை தீர்­மா­னிக்கும் வரை­யறை தான் என்ன? ஏனெனில், இதற்­காக மேலும் இரு­வரும் விண்­ணப்­பித்­தி­ருந்­தனர்.

ஆனால், அதற்கு இவரே தெரிவு செய்­யப்­பட்டார். இது எந்த அடிப்­ப­டையில், அவர் ஒரு இந்­துத்­துவா என்­ப­தாலா? சட்டம் இதற்­கான எந்த வரை­ய­றை­யையும் வழங்­க­வில்லை.

1992 மசூதி இடிப்பு

வழக்­குகள் தொடர்­கின்­றன. மத்­திய அரசு பேச்­சு­வார்த்தை மூலம் தீர்வை எட்ட முயன்­றாலும் இந்­துத்­துவா அமைப்­புகள் தங்கள் சூழ்ச்­சியைத் தொடர்ந்­தன. RSS தம் கர­சேவை எனும் தீவி­ர­வா­தத்தை தொடங்­கு­வ­தாக அறி­வித்­தது. மாநில ஆட்­சியில் இருந்த BJP இந்­துத்து­வாக்­களும் கரம் கோர்த்­தனர். VHP உடன் இணைந்து 1992 இல் பாபர் மசூ­தியை இடிப்­ப­தற்­கான திட்­டத்தை தீட்­டி­னார்கள்.

1992 டிசம்பர் 6 ஆம் திகதி VHP, BJP தலை­வர்கள் சிலரும், அதன் தோழமை அமைப்­பு­களைச் சேர்ந்­த­வர்­களும், கர சேவ­கர்கள் எனும் 150,000 RSS, BJP தொண்­டர்­களைக் கொண்ட ஒரு பேர­ணியை அந்த இடத்தில் ஏற்­பாடு செய்து BJP தலைவர் அத்­வா­னியின் ரத யாத்­தி­ரை­யுடன் அயோத்தி நக­ரி­லி­ருந்த 16 ஆம் நூற்­றாண்டைச் சேர்ந்த பாபர் மசூ­தியை இடித்துத் தள்­ளினர். RSS சார்பு மாநில அரசு என்­பதால் காவற்­று­றையும் அமைதி காத்­தது; சேர்ந்தும் முஸ்­லிம்­களை தாக்­கி­யது; கல­வரம் மூண்­டது; நாடெங்­கிலும் 2000 பேர் உயி­ரி­ழந்­தனர்.
இதை தற்­செ­ய­லாக இடம்­பெற்ற கல­வரம் போல் சிலர் கரு­தி­னாலும் அது திட்­ட­மி­டப்­பட்டு குறித்த தினத்தில் மசூ­தியை உடைப்­ப­தற்­காக ஒத்­தி­கை­களும் பயிற்­சி­களும் அதற்கு முன்­பா­கவே RSS மற்றும் BJP நிகழ்த்­தி­யமை ஊட­க­வி­ய­லாளர் ப்ரவீன் ஜைன் மூலம் வெளிக்­கொ­ண­ரப்­பட்­டது. அதன்­படி BJP இன் முக்­கிய தலை­வர்­களை உள்­ள­டக்­கிய RSS டிசம்பர் 4 ஆம் திக­தியே கர­சே­வ­கர்­களை ஒன்­று­தி­ரட்டி அவர்­க­ளுக்கு கட்­டிடம் உடைப்­ப­தற்­கான பயிற்­சியை வழங்கி ஒத்­திகை மேற்­கொண்­டார்கள்.

மேலும் தொழில் முறை­யாக கட்­டிடம் உடைப்­ப­வர்­களும் அதில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தனர். இவற்றை பட­மெ­டுத்­த­தோடு லிபரன் கமி­ஷ­னிலும் ப்ரவீன் ஜைன் வாக்­கு­மூலம் அளித்­துள்ளார். ஒத்­திகை முதல் முழுக் கல­வ­ரத்­திலும் அவர் களத்தில் நின்று ஆதா­ரங்­களை திரட்­டினார். டிசம்பர் 6, நண்­பகல் 12.15 மணி­ய­ளவில் இந்­துத்­து­வாவின் விஷமப் பிர­சா­ரத்தில் வீழ்ந்து மசூ­தியை தரை­மட்­ட­மாக்­கிய இந்­துக்­களை காணும்­போது ஒரு இந்­து­வாக பிறந்­ததை எண்ணி தானும் வெட்கித் தலை­கு­னிந்தேன் எனவும் அவர் மேலும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்­த­ளவு தீவிர திட்டம் தீட்டி இந்­துத்­துவா போக்கைத் தூண்டி இந்து -– முஸ்­லிம்­க­ளுக்­கி­டை­யேயான பரஸ்­பர உறவைக் குலைத்து அந்த இன­வாதத் தீயில் குளிர் காய்­வதே இவர்­க­ளது இலக்­காக இருந்­தது. அப்­போது குடி­ய­ரசுத் தலை­வ­ராக இருந்த சங்கர் தயாள் ஷர்மா, உத்­த­ரப்­பி­ர­தேச அரசின் அனைத்து நிர்­வாகப் பொறுப்­பு­க­ளையும் ஏற்றுக் கொண்டு, மாநில சட்டப் பேர­வையைக் கலைத்து உத்­த­ர­விட்டார்.

சர்ச்­சைக்­கு­ரிய 67.7 ஏக்கர் நிலத்­தையும் 1993 இல் நிர்­வாக உத்­த­ரவின் மூலம் மத்­திய அரசு கைய­கப்­ப­டுத்­தி­யது. பாபர் மசூதி இடிப்பு சம்­பவம் தொடர்­பாக, பின்னர் அமைக்­கப்­பட்ட லிபரன் ஆணையம், BJP, VHP தலை­வர்கள் பலர் உள்­ளிட்ட 68 பேர் இதற்குக் காரணம் என்று கூறி­யது. அந்த வழக்கு இன்னும் நிலு­வையில் உள்­ளது. உச்ச நீதி­மன்றம் இதை சட்­ட­வி­ரோதம் என்­றுள்­ளதால் இதில் குற்­ற­வா­ளிகள் இனி­யேனும் தண்­டிக்­கப்­ப­டு­வார்­களா என்ற கேள்­வியும் எழு­கி­றது.

நீதி தேடி…

பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 ஆம் திகதி இடிக்­கப்­பட்­டதன் பிறகு நிலத்­துக்கு உரிமை கோரி அல­காபாத் உயர் நீதி­மன்­றத்தில் வழக்கு தொட­ரப்­பட்­டது. அந்த வழக்கின் தீர்ப்பு 2010 செப்­டம்பர் 30 இல் வழங்­கப்­பட்­டது. அல­காபாத் உயர்­நீ­தி­மன்­றத்தின் மூன்று நீதி­ப­தி­களைக் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்­பின்­படி, அயோத்­தியில் சர்ச்­சைக்­கு­ரிய 2.77 ஏக்கர் நிலம் மூன்று பகு­தி­க­ளாகப் பிரிக்­கப்­பட்டு, மூன்றில் ஒரு பகுதி குழந்தை வடிவ இரா­ம­ரான ராம் லல்­லா­வுக்கும், இன்­னொரு மூன்றில் ஒரு பகுதி நிலம் சன்னி வக்பு வாரி­யத்­துக்கும், மீதி மூன்றில் ஒரு பகுதி நிலம் நிர்­மோஹி அகாரா எனும் துற­விகள் குழுவின் அமைப்­புக்கும் வழங்­கப்­பட வேண்டும் என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

அல­காபாத் உயர்­நீ­தி­மன்­றத்தின் மூன்று நீதி­ப­தி­களைக் கொண்ட அமர்வில் இடம் பெற்­றி­ருந்த இரு நீதி­ப­திகள், இந்­தி­யாவில் மொக­லாய பேர­ரசை நிறு­விய பாபர் அந்த இடத்தில் கட்­டிய கட்­டடம், மசூதி அல்ல என்று கூறினர். ஏனெனில் அது “இஸ்­லா­மிய கோட்­பா­டு­க­ளுக்கு முர­ணாக” இந்துக் கோவிலை இடித்­து­விட்டு கட்­டப்­பட்­டி­ருப்­ப­தாகக் கூறினர். ஆனால், அமர்வில் இடம் பெற்­றி­ருந்த ஒரு நீதி­பதி அக்­க­ருத்தை ஏற்­க­வில்லை. கோவில் எதுவும் இடிக்­கப்­ப­ட­வில்லை என்றும், அத்­தி­வா­ரத்தில் இருந்து அது மசூ­தி­யாகத் தான் கட்­டப்­பட்­டுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

உச்ச நீதி­மன்­றத்தில்

உயர் நீதி­மன்ற தீர்ப்பில் அதி­ருப்­தி­யுற்ற ராம் லல்லா, நிகோரி அகாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பும் 2011 இல் உச்ச நீதி­மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்­தன. இதை விசா­ரிக்க தலைமை நீதி­பதி ரஞ்சன் கோகோய் தலை­மை­யி­லான ஐந்து பேரைக் கொண்ட அர­சியல் சாசன அமர்வு அமைக்­கப்­பட்­டது. கோகோய் தவிர SA பாப்டே, சந்­தி­ர­சவுட், அசோக் பூஷன், SA நஷீர் ஆகிய நீதி­ப­திகள் இதில் அடங்­குவர்.

தலைமை நீதி­பதி கோகோய் எதிர்­வரும் நவம்பர் 17 இல் ஓய்வு பெற உள்ள நிலையில் அதன் முன்­பாக தீர்ப்பு அளிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. அவ்­வாறே நவம்பர் 9 சனிக்­கி­ழமை வழக்கின் தீர்ப்பும் அறி­விக்­கப்­பட்­டது. தீர்ப்பின் சில முக்­கிய அம்­சங்­க­ளாக,

1992 இல் பாபர் மசூதி இடிக்­கப்­பட்ட செயல் உச்ச நீதி­மன்ற தீர்ப்பை மீறிய சட்­ட­ வி­ரோத செயல்.

அயோத்­தியில் ராமர் பிறந்­த­தாக இந்து சாஸ்­தி­ரங்கள் கூறு­கின்­றன. இந்­துக்கள் நம்­பு­கின்­றனர்.

பாபர் மசூ­தியின் கீழ் தொல்­பொருள் ஆய்வில் கண்­ட­றி­யப்­பட்ட கட்­டடப் பாகங்கள் இஸ்­லா­மிய கட்­ட­மைப்பில் இல்லை.

இராமர் கோவிலை இடித்து பள்­ளி­வாசல் கட்­டி­னார்கள் என்­ப­தற்கு ஆதா­ர­மில்லை. ஆனால் 1528 முதல் மசூதி அங்­கி­ருந்து வந்­துள்­ளது.

நிலத்தின் உரி­மையை நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் முடிவு செய்ய முடி­யாது.

சர்ச்­சைக்­கு­ரிய நிலத்தில் இந்­துக்கள் கோவிலை அமைக்­கலாம். இராமர் கோவிலை கட்ட மத்­திய அரசு மூன்று மாதத்­தினுள் புதிய அறக்­கட்­டளை நிறுவ வேண்டும்.

முஸ்­லிம்­க­ளுக்கு அயோத்­தி­யாவில் 5 ஏக்கர் நிலம் மசூதி அமைக்க மத்­திய அரசு, மாநில அரசு வழங்க வேண்டும்.

இவ்­வா­றாக 1045 பக்க தீர்ப்பின் சில முக்­கிய அம்­சங்கள் அமை­கின்­றன.

தீர்ப்பின் மீதான பார்­வைகள்

தொல்­பொருள் ஆய்­வு­களில் இஸ்­லா­மிய கட்­ட­மைப்பு சாராத சில செதுக்­கல்கள் மற்றும் தூண் அமைப்­புக்கள் இருந்­தமை கண்­ட­றி­யப்­பட்­டது. இது 1990 இல் கே.கே. முஹம்­மதின் அறிக்­கையில் வெளி­யி­டப்­பட்­டது. மசூ­திக்கு கீழாக பத்தாம் நூற்­றாண்டைச் சேர்ந்த சில தூண் சிதை­வுகள் இராமர் கோவில் சிதை­வாக இருக்­கலாம் என அகழ்­வா­ராய்ச்­சி­யா­ளர்கள் கரு­தினர். ஆனால் அதற்­கான ஆதா­ரங்கள் இல்லை. அனு­மா­னங்­களை மட்டும் வைத்து உறு­தி­யாக கூற­மு­டி­யாது, அக்­காலப் பகு­தியில் எவ்­வித கோவிலும் கட்­டப்­ப­ட­வில்லை என வர­லாற்­றா­சி­ரி­யர்கள் அது இராமர் கோவில் என்­ப­தனை மறுத்­தனர். மேலும் குறித்த சிதை­வுகள் சம­ணர்கள், பௌத்­தர்கள், வழி­படும் தள­மா­கவோ அரண்­ம­னை­யா­கவோ இருக்­கலாம். எந்த ஆதா­ரத்தை வைத்து இராமர் கோவில் என்­பது எனக் கேள்வி எழுப்­பினர்.

மேலும் நில­வு­ரிமை வழக்கில் தொல்­லியல் பொருட்கள் எப்­படி உறு­தி­யான ஆதாரம் ஆக முடியும்? அவ்­வாறு ஆகு­மெனின் தமி­ழ­கத்தில் காஞ்­சி­புரம் மாவட்­டத்தில் உள்ள ஏகம்­ப­ர­நாதர் கோவில் பௌத்த சிற்பம் எடுக்­கப்­பட்­டது; பௌத்த கல்­வெட்டும் உண்டு; பழனி முருகன் கோவிலில் சமண சமய தீர்த்­தங்­கரர் சிலை; கேரள கொடுங்­கலூர் கோவிலில் பௌத்த சமய தாரா தேவி அல்­லது ஜேஷ்ட தேவி எடுக்­கப்­பட்­டது, எனவே இவற்றின் நில­வு­ரி­மையும் சம­ணர்­க­ளுக்கும் பௌத்­தர்­க­ளுக்கும் வழங்­கப்­ப­டுமா? என்­றெல்லாம் பல கேள்­வி­களை தீர்ப்பு எழுப்­பி­யுள்­ளன.

ஆனால் இந்த ஆய்வும் அங்­கி­ருந்த கட்­டடம் உடைக்­கப்­பட்டு மசூதி கட்­டப்­பட்­ட­தையோ, அது இராமர் கோவில் என்­ப­தையோ உறு­திப்­ப­டுத்­த­வில்லை. இதை நீதி­மன்ற தீர்ப்பும் ஏற்­றுள்­ளது. அங்­கி­ருந்த புரா­தன அரண்­மனை சிதை­வு­களில் இருந்து மசூ­தியை மீர் பாகி பூர­ணப்­ப­டுத்தி இருக்க வேண்டும், அல்­லது புன­ர­மைப்பு செய்­தி­ருக்க வேண்டும் என்றே கருத முடி­கி­றது. எனவே மூன்­றரை நூற்­றாண்­டு­க­ளாக இருந்து வந்த மசூதி மீது நில­வு­ரிமை உள்ள நிலையில், 12 இலட்சம் வரு­டங்­க­ளுக்கு முன் பிறந்­த­தாக கருதும் இரா­மரின் பிறப்­பி­டத்தை எந்த அறி­வியல் ஆதா­ரத்தின் அடிப்­ப­டையில் உறுதி செய்­வது என தீர்ப்பு விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது. வெறும் நம்­பிக்கை அடிப்­ப­டையில் அது இராமர் கோவி­லுக்கு சொந்­த­மா­னது என நீதி­மன்றம் முடி­வுக்கு வர­மு­டி­யாது என்­பது இத்­த­கையோர் வாத­மாகும்.

மேலும் தீர்ப்­பா­னது பாபர் மசூதி இடிப்பு சட்­ட­வி­ரோ­த­மா­னது என்று கரு­து­வதால், பாபர் மசூதி இடி­பட முன் இந்த வழக்கு பரி­சீ­லிக்­கப்­பட்டு இருப்பின் தீர்ப்பு எத்­த­கை­ய­தாக அமைந்­தி­ருக்கும் என்ற வாதத்­தையும் இது கிளப்­பி­யுள்­ளது. அதே வேளை BJP, VHP அமைப்­பினர் இத்­தீர்ப்பை நீதி­யான தீர்ப்­பாக கரு­து­கின்­றனர். இன்னும் சிலர் தீர்ப்பு எத்­த­கை­ய­தெ­னினும் தீர்ப்­புக்கு கட்­டுப்­ப­டு­வது தார்­மீக பொறுப்பு என அமை­தியை விரும்­பு­கின்­றனர்.

மேலும் நில­வு­ரிமை தொடர்­பான வழக்கில் கோவில் கட்ட அறக்­கட்­டளை நிறுவும் தீர்ப்பு நீதி­மன்­றத்­துக்கு அப்­பாற்­பட்­டது என்று, தங்­க­ளது வர­லாற்­றுக்­காக, தங்கள் மீது பூசப்­பட்ட அவ­தூ­றுக்­காக, உரிமை கோரி ஜன­நா­ய­க­மாக போரா­டிய முஸ்­லிம்­க­ளுக்கு பள்ளி கட்ட வேறு நிலம் வழங்­கு­வ­தாக அவர்­க­ளது புரா­தன வர­லாற்றை அங்கு நிர்­மூ­ல­மாக்­கு­வது அதி­ருப்­திக்கு உரி­யது எனவும் தீர்ப்பு தொடர்பில் விமர்­சித்து வரு­கின்­றனர்.

உச்­ச­நீ­தி­மன்ற தீர்ப்பு சட்­டத்தின் அடிப்­ப­டை­யிலோ ஆதா­ரங்­களின் அடிப்­ப­டை­யிலோ அளிக்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை, சட்ட ஒழுங்­கையும் சமூக நல்­லி­ணக்­கத்­தையும் கருத்தில் கொண்டு அளிக்­கப்­பட்ட சம­ரசத் தீர்ப்­பா­கவே தெரி­கி­றது எனவும் விமர்­ச­னங்கள் எழுந்த வண்ணம் உள்­ளன. அதே­வேளை, உச்ச நீதி­மன்ற தீர்ப்பை மதித்து அமைதி காத்து குழப்­பங்­களை விளை­விக்­காது இந்­திய முஸ்­லிம்கள் தமது கண்­ணி­யத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

ஆனாலும் தீர்ப்­புக்கு முன்­னரே இராமர் கோவில் கட்ட தயார் நிலையில் இருந்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயற்­பாடும், இந்த பாபர் மசூதி மட்­டு­மல்ல இது போன்று 3000 பள்­ளி­வா­யல்கள் தகர்க்­கப்­பட வேண்டும் என்­ப­தான எச்­ச­ரிக்­கையை தொலைக்­காட்சி விவாதம் ஒன்றில் முன்­வைக்கும் BJP இன் உறுப்­பினர் ஒரு­வரின் இன­வாதப் பேச்சும் மிகுந்த சர்ச்­சைக்­குள்­ளா­கி­யது.
சம­ர­சத்தை விரும்பும் மக்­க­ளுக்கு மத்­தியில் இந்­துத்­துவா இன­வாதத் தீயையே தொடர்ந்தும் BJP உம் அதன் தாய­மைப்பு RSS மற்றும் VHP போன்ற இந்­துத்­துவா அமைப்­புகள் பரப்­பு­வ­தையே இது காட்டுகிறது. தீர்ப்பை கொண்டாடுவது கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த போதும் தீர்ப்பின் பின் நீதிமன்ற வளாகத்திலேயே ஜெய் சிறீ ராம் கோஷங்களை இட்டு கூச்சலிட்டமையும் பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

பாபர் மசூதி எனும் ஐந்நூறாண்டு வரலாற்று சின்னம் அங்கிருந்து நீக்கப்பட்டாலும் இந்துக் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டது எனும் குற்றச்சாட்டு தகர்க்கப்பட்டு, மசூதியை சட்ட விரோதமாக இடித்து தான் சட்ட பூர்வமாக இராமர் கோவில் கட்டப்படப் போகிறது என்று வரலாறு பதிவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரமற்ற இராமர் கோவிலுக்கு நம்பிக்கை அடிப்படையில் அனுமதியும், ஆதார பூர்வமாக ஐந்நூறாண்டுகளாய் மசூதியாக நிற்கும் தளம் நீக்கப்படுமாறும் இத்தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.

ஆனால் நீதியை வழங்கியதா என்பது கேள்விக்குறியே?! காஷ்மீர் சிறப்புரிமை நீக்கம், பாபர் மசூதி நீக்கம் என தொடர்ந்தும் சிறுபான்மையினர் மீதான தனது மேலாதிக்கத்தை செலுத்த விழையும் BJP அரசு, இத்தீர்ப்பை மேற்கோள் காட்டி இன்னும் எத்தனை நம்பிக்கைகளுக்காக எத்தனை ஆதாரங்களை அழிக்கவுள்ளன என பொறுத்திருந்தே பார்க்க முடியும்.

எது எவ்வாறாயினும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து இஸ்லாமியர்கள் நிலைநாட்டிய பொறுமை வர வேற்கத்தக்கது. இதே பொறுமை, இத்தீர்ப்பு இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களுக்கு ஆதரவாக அமைந்திருந்தால் இந்துத்துவாக்களிடம் எதிர்பார்க்கப்பட முடியுமா என்பது சந்தேகமே?-Vidivelli

  • முஹம்மது ஸப்ஷாத்,
    ஓட்டமாவடி

Leave A Reply

Your email address will not be published.