சிறுபான்மையினர் இனவாத ரீதியில் வாக்களிக்கவில்லை

ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டுமென்கிறார் முஜிபுர் ரஹ்மான்

0 743

சிறு­பான்மை மக்கள் இன­ரீ­தி­யாக சிந்­தித்து வாக்­க­ளிக்­க­வில்லை. அவர்கள் கொள்­கைக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளித்து தமது வாக்­கு­களை பிரயோ­கித்­தனர் என்­பதைஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ புரிந்­து­கொள்ள வேண்­டு­மென கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மத்­திய கொழும்பு தொகுதி பிர­தான அமைப்­பா­ள­ரு­மான முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

அத்­துடன், இன­வாத ரீதி­யி­லான பொது­ஜன பெர­மு­ன­வி­னரின் போலிப்­பி­ர­சா­ரங்­களை முறி­ய­டிக்க ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிங்­களத் தலை­வர்கள் முயற்­சிக்­கா­ததால் தோல்­வியை சந்­திக்க நேரிட்­ட­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

70 சத­வீ­த­மான பெரும்­பான்­மை­யி­னரின் வாக்­கு­க­ளுடன் குறிப்­பிட்ட தொகை சிறு­பான்மை வாக்­குகள் கிடைத்­த­மை­யி­னா­லேயே ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­ாபய தெரி­வு­செய்­யப்­பட்டார். அவரின் பத­வி­யேற்பு நிகழ்­வின்­போது, சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ரவு கிடைக்­க­வில்லை என்று ஆதங்கம் தெரி­வித்­துள்ளார்.

எனினும், சிறு­பான்மை மக்கள் ஒரு­போதும் இன­ரீ­தி­யாக வாக்­கு­களைப் பிர­யோ­கிக்­க­வில்லை.

தமி­ழர்­களும் முஸ்­லிம்­க­ளுக்கு ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்ட முஸ்லிம் வேட்­பா­ள­ருக்கோ, தமிழ் வேட்­பா­ள­ருக்கோ வாக்­க­ளிக்­க­வில்லை. மாறாக ஒரு சிங்­களத் தலை­வ­ருக்கே வாக்­க­ளித்­துள்­ளனர். அவர்கள் பெரும்­பான்­மை­யி­ன­ருடன் இணைந்து வாழவே விரும்­பு­கின்­றனர். இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் இதனை மீண்டும் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றனர். வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட சிறு­பான்­மை­யினர் சிங்­கள பௌத்­த­ரான சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு பெரு­ம­ளவில் வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றனர். இதனை சிலர் இன ரீதியில் வாக்­குகள் பிரிந்­தி­ருப்­ப­தாக குறிப்­பி­டு­கின்­றனர். எனினும், அது தர்க்க ரீதியில் முரண்­ப­டு­கின்­றது.

அவர்கள் வாக்­க­ளித்­தது ஒரு பௌத்­த­ருக்கு என்­பதை புரிந்­து­கொள்ள வேண்டும்.

கோத்­தா­பய தரப்­பினர் கடந்த ஈஸ்டர் தாக்­கு­த­லுக்குப் பின்னர் முஸ்­லிம்கள் மீது வெறுப்புப் பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்­தனர். இதனால், அவர்­க­ளி­ட­மி­ருந்து முஸ்லிம் சமூகம் ஒதுங்கி நின்­றது.

அது­போல, கடந்த கால கசப்­பான சம்­ப­வங்­க­ளினால் தமி­ழர்­களும் கோத்­தா­ப­ய­வுக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வ­ர­வில்லை. இவ்­வாறு, பொது­ஜன பெர­மு­னவின் கொள்­கைகள், போக்­கு­களை தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஏற்­றுக்­கொள்­ளாத நிலையில் அவர்கள் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வாக்­க­ளித்­தனர். பௌத்த, சிங்­கள மக்கள் மத்­தியில் பொது­ஜன பெர­மு­ன­வினர் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக மோச­மான முறையில் இன­வாத பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தனர். ஈஸ்­டர்­தின தாக்­கு­த­லை­ய­டுத்து இது மேலும் தீவி­ர­ம­டைந்­தது. டாக்டர் ஷாபி விவ­கா­ரத்தை பூதா­க­ர­மாக்கி அதில் அர­சியல் இலா­ப­ம­டைந்­தனர். எனினும், ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லுள்ள சிங்­களத் தலை­வர்கள் அதனை முறி­ய­டிக்க முன்­வ­ர­வில்லை. இன­வா­தத்தை தோற்­க­டிக்கப் பின்­வாங்­கினர். இத­னா­லேயே சிங்கள மக்கள் ஒரு பக்கத்திற்கு தள்ளப்பட்டனர். இதனை ஓர் ஆரோக்கியமான நகர்வாகக் கருத முடியாது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ சிறுபான்மையினரை தூரப்படுத்திப் பார்க்காமல் அவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். இதுவே இந்நாட்டில் எதிர்காலத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் தெரிவித்தார்.-Vidivelli

  • எம்.ஆர்.எம்.வஸீம்

Leave A Reply

Your email address will not be published.