ஆரோக்கியமான தேர்தல் முடிவுகள்

0 1,312

நாட்டில் மிக முக்­கி­ய­மான ஜனா­தி­பதித் தேர்தல் நடந்து முடிந்­துள்­ளது எதிர்­பார்த்­த­படி சிங்­கள மக்­களின் பெரிய ஆத­ர­வுடன் கோத்­தா­பய ராஜ­பக் ஷ வெற்றி பெற்­றுள்ளார்.

சிலர் மேலோட்­ட­மான கண்­ணோட்­டத்­துடன் இந்தத் தேர்தல் வெற்­றிக்கு நாட்டில் திட்­ட­மி­டப்­பட்ட இன­வா­தம்தான் கார­ண­மெனக் கூறி­னாலும் அதற்­கப்பால் பல பொரு­ளா­தார, சமூ­க­வியல் கார­ணிகள் இருக்­கின்­றன.

மஹிந்த ராஜபக் ஷ, யுத்­தத்­துக்குப் பின் கிடைத்த அரு­மை­யான சந்­தர்ப்­பத்தை எவ்­வாறு நழுவ விட்­டாரோ அதே­போன்று ரணில் அர­சாங்­கமும் இந்த நாட்டை முன்­னேற்­று­வ­தற்கும், ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்கும் கிடைத்த மிக அரு­மை­யான சந்­தர்ப்­பத்தை நழுவ விட்­டது.

நாட்டின் கல்வி, பொரு­ளா­தாரம், வாழ்க்­கைத்­தரம் போன்­ற­வற்றில் குறிப்­பிட்டு சொல்­லக்­கூ­டிய அள­விற்கு ஒரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இருந்த அர­சினால் முடி­யாமல் போனது. அதே­போன்று நாட்டில் ஆங்­காங்கே உரு­வான கல­வ­ரங்­களை முகாமை செய்­வதில் விட்ட குறை­பாடும் இந்தப் பயங்­கரத் தோல்­விக்­கான கார­ண­மாகும்.

சிங்­கள மக்கள் மிகத்­தெ­ளி­வான தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளனர். இது இந்த நாட்டின் அர­சியல் வர­லாற்றில் ஒரு தீர்க்­க­மான முடி­வாக காணப்­படும் என்­பதில் சந்­தே­க­மில்லை. நாங்கள் சில நேரம் சிங்­கள மக்­களின் இந்த மனோ­நி­லையை பிழை­யாக விளங்கி கொள்­கின்றோம். உண்­மையில் சிறு­பான்மை மக்­களின் உரி­மை­க­ளையும் தேவை­க­ளையும் பேரம் பேசும் அர­சியல் ஊடா­கத்தான் பெற­மு­டியும் என சிறு­பான்மை மக்­களின் மனதில் பதி­ய­விட்டு அர­சியல் செய்த சிறு­பான்மை அர­சி­யல்­வா­திகள் மிகப்­பெ­ரிய தவறை செய்­துள்­ளனர்.

உண்­மையில் நாடு என்­கின்ற போதும் தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்கள் ஒரே பாணியில் சிந்­திப்­பதும் ஒரே பாதையில் பய­ணிப்­பதும் நாட்டின் அபி­வி­ருத்­திக்கு முக்­கி­ய­மா­னது. தனித் தனி இனக் குழுக்­க­ளாக சிந்­திப்­பது எந்த வகை­யிலும் நாட்­டிற்கு ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல.

ரணில் அர­சாங்கம் முஸ்லிம் சமூ­கத்தின் மீதான தாக்­கு­தலை தடுத்து நிறுத்­து­வ­தற்குப் பதி­லாக மிக நுணுக்­க­மாக அதனை வள­ர­விட்­டது என்­பதே உண்­மை­யாகும். சுருக்­க­மாகச் சொன்னால் அவர்கள் முஸ்லிம் வாக்கு வங்­கியை காத்துக் கொள்­வ­தற்­காக அர­சியல் செய்­தனர் கோத்­தா­பய என்ற பேய் முஸ்லிம் சமூ­கத்தை அழிக்க வரு­கின்­றது என்ற மனோ­நி­லையை முஸ்லிம் மக்கள் மத்­தியில் பதித்து, முஸ்­லிம்­களின் வாக்­கு­களை பெறு­வதில் மிகவும் கவ­ன­மாக இருந்­தனர் அதில் வெற்­றியும் அடைந்­தனர்.

கோத்­தா­பய தரப்பில் காணப்­பட்ட இன­வா­தி­களும் முஸ்லிம் மக்­க­ளையும் தமிழ் மக்­க­ளையும் ஒரு பக்­க­மாகத் தள்­ளி­விட்­டனர். இது இந்த நாட்­டிற்கு எந்த வகை­யிலும் ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல.

இந்தத் தேர்தல் முடி­விற்கு இன்­னொரு முக்­கிய காரணம் நாட்டில் ஏற்­பட்ட அசா­தா­ரண கால­நிலை மாற்­ற­மாகும். குறிப்­பாக தென்­னி­லங்­கையில் கடந்த ஆறு மாதங்­க­ளாக பொழியும் மழையின் விளை­வாக மக்கள் தொழி­லின்றி அவ­திப்­பட்­டனர். அவர்கள் இதற்கு இயற்­கையை காரணம் பார்க்­காமல் அர­சுதான் இதற்குப் பொறுப்­பென எண்­ணி­யதன் விளைவு இந்தத் தேர்தல் முடி­வு­களில் தாக்கம் செலுத்­தி­யது.

இனி யாருக்கும் இன­வா­தத்தை வைத்து அர­சியல் செய்­வது கடினம். நாட்டின் பிரச்­சி­னையை இப்­போதும் முஸ்­லிம்­களை காட்டி மூடி­ம­றைக்க முடி­யாது. நாட்டின் உண்­மை­யான பிரச்­சினை ஊழலும் மோச­டியும் திட்­ட­மி­டாத முகா­மையும் என்­பது யாரும் அறிந்த விடயம். புதிய ஜனா­தி­பதி இந்த சவாலை எதிர்­கொள்­வது என்­பது அவ்­வ­ளவு இல­கு­வான விட­ய­மல்ல. ஏனெனில், அர­சி­யலில் சுவை­கண்ட பலர் அவ­ருடன் இருக்­கின்­றனர். அவர்கள் எப்­போதும் அர­சையும் அர­சி­ய­லையும் தமது சுய­லா­பத்­திற்­காக பயன்­ப­டுத்­தி­யது என்­பதே வர­லா­றாகும். இந்த தரப்­புக்­களை கோத்­தா­பய ராஜபக் ஷ எவ்­வாறு முகாமை செய்­வது என்­பதிலே அவர்­களின் வெற்றி தங்­கி­யுள்­ளது.

சிறு­பான்மை மக்கள் தமது அர­சியல் பாதை தொடர்பில் மிகத்­தெ­ளி­வான தீர்­மா­னங்­களை எடுக்க வேண்டும். சிங்­கள தேசி­ய­வாத சக்­தி­க­ளுடன் ஒரு முறுகல் அர­சியல் செய்­வதா அல்­லது இலங்­கையர் என்ற தேசத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான இணக்க அர­சியல் செய்­வதா என்­பதைத் தெளி­வாகத் தீர்­மா­னிக்க வேண்டும்.

புதிய ஜனா­தி­ப­திக்­குள்ள மிகப்­பெ­ரிய சவால் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தாகும். ரணில் அர­சாங்கம் கிட்­டத்­தட்ட எல்லா முஸ்லிம் நாடு­க­ளையும் ஒதுக்கி அமெ­ரிக்கா, இந்­தியா ஆகிய இரு சக்­தி­க­ளையும் அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு ஆட்சி நடத்­தி­யது. அதே தவறை எதிர்­கால அரசு விடு­மாயின் நிச்­ச­ய­மாக அது நாட்டின் அபி­வி­ருத்­தியை பெரு­ம­ள­விற்கு பாதிக்கும்.

இலங்­கையை சூழ­வுள்ள நாடுகள் குறிப்­பாக வங்­கா­ள­தேசம், இந்­தோ­னே­ஷியா, மலே­சியா போன்ற நாடுகள் நல்ல பொரு­ளா­தார வளர்ச்­சியை கண்­டு­வ­ரு­கி­றது. பிராந்­திய சக்­தி­யாக இந்­தியா பொரு­ளா­தார வளர்ச்­சியில் அண்­மைக்­கா­ல­மாக ஒரு பெரிய வீழ்ச்­சியை கண்­டு­வ­ரு­கி­றது. குறிப்­பாக, இயற்கை அனர்த்­தங்கள், சூழல் மாசடைதல் போன்ற காரணிகள் இந்தியாவின் பொருளாதாரத்தை பெருமளவு பாதித்துள்ளது.

எனவே, புதிய அரசு முழுமையாக சீனாவின் பக்கம் சாராமலும் , முழுமையாக இந்தியாவின் பக்கம் சாராமல் ஒரு நடுநிலை வெளிநாட்டுக் கொள்கையை மேற்கொள்வதே நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியமானது.

புதிய ஜனாதிபதி நாட்டின் சிறுபான்மை மக்களின் மனதை வெல்வதற்கு செயற்படவேண்டும். அதுவே மொத்த நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியமானது என்பதை அவர் உணர்ந்து செயல்படுவாரெனப் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.-Vidivelli

  • எம்.என்.முஹம்மத்
    ஆசி­ரிய ஆலோ­சகர்
    களுத்­துறை

Leave A Reply

Your email address will not be published.