முஸ்லிம் பெண்கள் வாக்களிப்பு நிலையத்திற்குள் மாத்திரம் முகத்தை திறந்துகொண்டால் போதும்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

0 458

தேர்தல் வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு வரு­கை­தரும் முஸ்லிம் பெண்கள் முகம் மூடும் வழமை உள்­ள­வர்­க­ளாக இருந்தால் முகத்தை மூடி வரலாம். ஆனால், வாக்­க­ளிப்பு நிலை­யத்­தி­லுள்ள அதி­கா­ரி­க­ளுக்கு முகத்தை திறந்து அடை­யா­ளப்­ப­டுத்­தினால் போது­மா­ன­தென்று தேர்தல் ஆணைக்­குழு உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரட்­ன­ஜீவன் ஹூல் தெரி­வித்தார்.

கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ள­னத்தின் பிர­தி­நி­திகள் மற்றும் சமூக நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­களை சந்­தித்து தேர்தல் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கும்­போதே மேற்­கண்­ட­வாறு அவர் தெரி­வித்தார். அவர் மேலும் கருத்து தெரி­விக்கும் போது, வாக்­க­ளிக்­க­வுள்ள வாக்­குச்­சீட்டு வழ­மை­யை­விட அளவில் பெரி­தாக இருப்­பதால் வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்பு நிலை­யத்தின் நுழை­வா­யிலில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் வேட்­பா­ளர்கள் மற்றும் சின்­னங்கள் அச்­சி­டப்­பட்ட அறி­வு­றுத்­தல்­களை நன்­றாகக் கவ­னித்து வாக்­க­ளிக்கத் தீர்­மா­னித்­துள்ள வேட்­பாளர் எந்த இடத்தில் உள்ளார் என்­பதை தீர்­மானம் எடுத்­துக்­கொண்டால் வாக்­க­ளிக்கும் போது நேர விரயம் மற்றும் வீண் சிர­மங்­களை தவிர்க்­க­மு­டியும். அத்­தோடு வாக்­க­ளிக்கும் போது 1,2,3 வரை இலக்­கங்­களை இட்டு மூன்று வேட்­பா­ளர்­க­ளுக்கு தெரிவை வழங்க முடியும். புள்­ளடி இடு­வதன் மூலம் ஒரு வேட்­பா­ளரை மாத்­தி­ரமே தெரிவு செய்ய வேண்டும். மாறாக, ஒன்­றுக்கு மேற்­பட்ட புள்­ள­டிகள் அல்­லது புள்­ளடி மற்றும் இலக்­கங்கள் சேர்த்து வாக்­க­ளிக்­கப்­ப­டு­மாக இருந்தால் அவ்­வாக்கு நிரா­க­ரிக்­கப்­பட்ட வாக்­காகக் கணிக்­கப்­படும்.

எனவே, வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிக்கும் முறைமை தொடர்பில் கவ­ன­மா­கவும் தெளி­வா­கவும் இருக்க வேண்­டு­மென அவர் வலி­யு­றுத்­தினார்.

அத்­தோடு தேர்தல் காலத்தில் இனங்கள் மற்றும் மதங்­க­ளுக்­கி­டையில் பிரி­வி­னைகள், முரண்­பா­டு­களை தோற்­று­விக்கும் வகையில் தேர்தல் பிர­சா­ரங்கள் மேற்­கொள்­வதும், தேர்தல் முடி­வுகள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யி­டு­வ­தற்கு முன்­னரே வேட்­பா­ளர்கள் அல்­லது அவர் சார்ந்­த­வர்கள் முடிவு என்ற பெயரில் அறி­விப்­பது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மா­கு­மென தேர்தல் ஆணைக்­குழு உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரட்­ன­ஜீவன் ஹூல் மேலும் தெரி­வித்தார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.சி.எம்.ஏ.சத்தார், செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் உட்பட சம்மேளன உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.-Vidivelli

  • எம்.எஸ்.எம்.நூர்தீன்

Leave A Reply

Your email address will not be published.