ஈரான் விவகாரத்தில் கடும்போக்கிலிருந்து தளர்வை வெளிப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்

0 1,397

பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் அண்­மையில் நடை­பெற்ற ஜி-7 உச்சி மாநாட்டின் போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தனது நாடு ஈரானில் ஒரு தலை­மைத்­துவ மாற்­றத்தை எதிர்­பார்க்­க­வில்லை என்று பிரெஞ்சு ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக்­ரோ­னிடம் கூறி­யி­ருந்தார். ‘இந்த நாட்டில் முன்­னரும் பல தட­வைகள் தலை­மைத்­துவ மாற்றம் இடம்­பெற்­றி­ருந்­தது. அதனால் பல­னேற்­ப­ட­வில்லை” என்று ட்ரம்ப் கூறினார்.

பல மாத­கால பதற்ற அதி­க­ரிப்­பிற்குப் பிறகு வாஷிங்­ட­னுக்கும், தெஹ்­ரா­னுக்கும் இடையே உத்­தேச பேச்­சு­வார்த்தை ஒன்­றுக்­கான நம்­பிக்­கை­யான சமிக்­ஞை­யாக அவரின் இந்தக் கூற்று அமைந்­தி­ருக்­கி­றது. ஈரானின் ஏற்­று­ம­தி­களை முற்­று­மு­ழு­தாகத் துண்­டிக்க முன்னர் நாட்டம் கொண்­டி­ருந்த அமெ­ரிக்க ஜனா­தி­பதி, புதிய அணு உடன்­ப­டிக்கை ஒன்றை எட்­டு­வ­தற்­கான ஊக்­கு­விப்­பாக அமெ­ரிக்­காவும், அதன் நேச நாடு­களும் ஈரா­னுக்கு கடன் உத­வி­களை அல்­லது சில தவணை அடிப்­ப­டை­யி­லான கடன்­களை வழங்­கலாம் என்ற யோச­னை­க­ளையும் கூடத் தெரி­வித்­தி­ருந்தார்.

நேசக்­கரம் நீட்­டுதல்

ட்ரம்­பி­ட­மி­ருந்து வெளிப்­பட்­டி­ருக்கும் இந்த நல்­லெண்ண சமிக்­ஞைகள் கடந்த காலத்தில் ஈரான் தொடர்பில் அவர் கொண்­டி­ருந்த நிலைப்­பாட்­டி­லி­ருந்து குறிப்­பி­டத்­தக்க ஒரு வில­க­லாக அமைந்­தி­ருக்­கி­றது. ஈரா­னுக்கும் ஐக்­கிய நாடுகள் பாது­காப்­புச்­ச­பையின் நிரந்­தர உறுப்பு நாடு­க­ளுக்கும், ஜேர்­மனி மற்றும் ஐரோப்­பிய ஒன்­றியம் ஆகி­ய­வற்­றுக்கும் இடையே 2015 இல் கைச்­சாத்­தி­டப்­பட்ட அணு உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து 2018 மே மாதத்தில் அமெ­ரிக்கா வில­கிக்­கொண்­டது. அந்த உடன்­ப­டிக்­கையை ட்ரம்ப், ‘முன்­னொ­ரு­போதும் இல்­லாத படு­மோ­ச­மான உடன்­ப­டிக்கை” என்று ஏளனம் செய்­தி­ருந்தார். உடன்­ப­டிக்கை பய­னு­டை­ய­தாக இருக்­கி­றது என்று சர்­வ­தேச அணு­சக்தி நிறு­வ­னமும், தனது சொந்த உயர்­மட்ட ஆலோ­ச­கர்­களும் கூறிய அபிப்­பி­ரா­யங்கள் அனைத்­தையும் அலட்­சியம் செய்தே ட்ரம்ப் அதி­லி­ருந்து வெளி­யே­றி­யி­ருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அண்­மையில் ட்ரம்ப் தெரி­வித்த கருத்­துக்­களைத் தொடர்ந்து நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருப்­பதால் அமெ­ரிக்க தடை­வி­திப்­பு­க­ளி­லி­ருந்து ஈரா­னுக்கு நிவா­ர­ணத்தைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கும், யுரே­னி­யத்தை வளப்­ப­டுத்தும் செயற்­பா­டு­களை மீண்டும் ஆரம்­பிக்­கா­தி­ருக்க தெஹ்­ரானை வழிக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்கும் கைக்­கொள்ளும் முயற்­சிகள் பலம் பெற்­றி­ருக்­கின்­றன.

ட்ரம்பின் கருத்­துக்கள் ஈரா­னிய ஜனா­தி­பதி ஹஸன் ரூஹானி மனதில் படி­ய­வில்லை. உடன்­ப­டிக்­கையை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பு­வ­திலும் உள்­நாட்டில் தனது நிலைப்­பாட்டை முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­திலும் பெரு­ம­ளவு நலன்கள் அவ­ருக்கு இருக்­கின்ற போதிலும், சகல தடை­களும் நீக்­கப்­ப­டும்­வரை பேச்­சு­வார்த்­தை­களை நடத்த முடி­யாது என நிரா­க­ரித்­து­விட்டார். மேலும் புகைப்­ப­டத்­திற்குப் பாவ­னை­காட்டும் வாய்ப்­புக்­களில் தனக்கு அக்­க­றை­யில்லை என்றும் அவர் கூறி­யி­ருந்தார். இந்தக் கூற்று உருப்­ப­டி­யான எந்த விளை­வு­க­ளையும் தராத உச்­சி­மா­நா­டு­களை ட்ரம்பும், வட­கொ­ரிய ஜனா­தி­பதி கிம்-­ஜொங்-­உன்னும் நடத்­தி­ய­தையே குத்­த­லாகச் சுட்­டிக்­காட்­டி­யது.

எவ்­வா­றெ­னினும், பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு ஈரான் ஜனா­தி­பதி விதிக்­கின்ற நிபந்­த­னைகள் விளங்­கிக்­கொள்ளக் கூடி­யவை. ஈரானைத் தண்­டிக்கும் நோக்­கி­லான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வதை ஐரோப்­பிய ஒன்­றியம், ரஷ்யா, சீனா ஆகி­யவை எதிர்த்த போதி­லும்­கூட தடைகள் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரத்தில் ஈரா­னுக்கு எந்த நிவா­ர­ணமும் கிடைக்­க­வில்லை. அமெ­ரிக்கத் தடை­களைத் தவிர்ப்­ப­தற்கு மறை­மு­க­மான வழி­மு­றை­களை ஐரோப்­பிய கொடுப்­ப­ன­வுகள் ஏற்­பாட்டு நிறு­வனம் இன்ஸ்டெக்ஸ் (The European Payments Channel) மிகவும் காலந்­தா­ம­தித்து மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பயன்­க­ளையே தந்­தன.

ஏனென்றால், ஈரானின் வெளி­நாட்டு அந்­திய செலா­வணி வரு­வாயில் பிர­தா­ன­மா­ன­தொரு மூலா­தா­ர­மாக இருக்கும் எண்ணெய் விற்­ப­னை­களை இன்ஸ்டெக்ஸ் முறைமை உள்­ள­டக்­க­வில்லை. அண்­மைய மதிப்­பீ­டு­க­ளின்­படி 2-18 ஏப்ரல் அளவில் தின­மொன்­றுக்கு 25 இலட்­சத்­திற்கும் அதி­க­மான பீப்­பாய்­க­ளாக இருந்த தெஹ்­ரானின் மசகு ஏற்­று­ம­திகள், இப்­போது தின­மொன்­றுக்கு 3 இலட்சம் பீப்­பாய்­க­ளாக வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருக்­கின்­றன. ஈரா­னுடன் வர்த்­த­கத்தைத் தொடர்ந்து செய்யும் கோப்­பரேட் நிறு­வ­னங்கள் டொலர் முறை­மை­யி­லி­ருந்து துண்­டித்து விடப்­படும் ஆபத்தை எதிர்­நோக்­கி­யி­ருக்­கி­றது.

ஈரான் மீது ‘உச்­ச­பட்ச நெருக்­கு­தலை” பிர­யோ­கிக்கும் அமெ­ரிக்கத் தந்­தி­ரோ­பா­யத்தில் இது­வ­ரையில் எந்­த­வொரு ஓய்­வையும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­க­வில்லை. இம்­மாத ஆரம்­பத்தில் ட்ரம்ப் நிர்­வாகம் ஈரா­னிய வெளி­யு­றவு அமைச்சர் ஜவாத் சரீஃ­புக்கு எதி­ராகத் தடை­களை விதித்­தது. ஜூன் மாதத்தில் ஈரா­னிய அதி­யுயர் தலைவர் ஆய­துல்லா அலி கொமை­னிக்கு எதி­ராக விதிக்­கப்­பட்ட தடை­களை ஈரான் ‘கொடு­மை­யா­னதும், முட்­டாள்­த­ன­மா­னதும்” என்று ஆத்­தி­ரத்­துடன் வர்­ணித்­தி­ருந்­தது. ஏப்ரல் மாதம் ஈரானின் இஸ்­லா­மிய புரட்­சி­கர காவலர் படையை பயங்­க­ர­வாத அமைப்பு என்று அமெ­ரிக்கா பட்­டி­ய­லிட்­டது.

இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்­கான பதி­ல­டி­யாக ஜேர்மன் நீர­ிணையில் எண்ணெய்த் தாங்கிக் கப்­பல்­களைக் கைப்­பற்­றி­யதன் மூல­மாக மேற்கு நாடு­களின் கடற்­போக்­கு­வ­ரத்து நட­வ­டிக்­கை­களை முடங்­கச்­செய்­வதில் தனக்­கி­ருக்கும் ஆற்­றலை ஈரான் வெளிக்­காட்­டி­யது. அமெ­ரிக்க ஆளில்லா வேவு விமா­னத்தை ஈரான் சுட்டு வீழ்த்­தி­யதைத் தொடர்ந்து பதி­லடி கொடுப்­ப­தி­லி­ருந்து ட்ரம்ப் பின்­வாங்­கிய அதே­வேளை அந்த ஏவு­கணைத் தாக்­குதல் எந்த நேரத்­திலும் மோதல் மூளக்­கூ­டிய ஆபத்தைப் பிர­கா­ச­மாக வெளிப்­ப­டுத்­தி­யது.

முன்­நோக்கி நகர்தல்

ஈரானில் ஆட்­சி­மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் திட்டம் எதுவும் அமெ­ரிக்­கா­விடம் இல்லை என்று ஜனா­தி­பதி ட்ரம்ப் கூறி­யதை வெளி­யு­றவு அமைச்சர் மைக் பொம்­பி­யோவோ அல்­லது தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் ஜோன் வோல்ற்­றனோ எளிதில் விளங்­கிக்­கொள்ளப் போவ­தில்லை. ஆனால் தனது நிர்­வா­கத்தில் இருக்­கக்­கூ­டிய கடும்­போக்­கா­ளர்­க­ளுக்கு எதி­ராக நகர்­வு­களைச் செய்யும் சில நட­வ­டிக்­கை­களை எடுக்க முனை­வது இது முதற்­த­ட­வையும் அல்ல. அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யினால் தெரி­விக்­கப்­பட்ட யோச­னை­களைத் தொடர்ந்து வாஷிங்டன் அங்­கீ­கா­ரத்­திற்கு உட்­பட்ட வகையில் 1500 கோடி டொலர்கள் கட­னு­த­வியைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை பிரான்ஸ் உறுதி செய்திருக்கிறது. மேற்கு நாடுகளின் நோக்கங்களில் ஈரானின் நம்பிக்கையை மேம்படுத்தக் கூடியவையாக இந்த முன்முயற்சிகள் அமைந்திருக்கின்ற அதேவேளை, இறுதி இலக்கு 2015 அணு உடன்படிக்கைக்குப் புத்துயிர் அளிப்பதாகவே இருக்க வேண்டும்.

ஈரானில் கடும்போக்காளர்கள் தங்களைப் பெருமளவிற்கு முன்நிலைப்படுத்திக்கொண்டு செயற்பட ஆரம்பித்திருப்பதிலிருந்து ஜனாதிபதி ரூஹானியின் நிலை பலவீனமடைந்திருக்கிறது. அவரால் கடும்போக்காளர்களைத் தனிமைப்படுத்த இயலாத பட்சத்தில் அணு உடன்படிக்கையில் முன்நோக்கி நகர்வதென்பது சாத்தியமில்லாமல் போகும்.
( ‘த இந்து” பத்திரிகையின் பிரதி ஆசிரியர்களுள் ஒருவரான கரமெல்லா சுப்ரமணியம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

vidivelli

Leave A Reply

Your email address will not be published.