நிகாப் அணிந்து சென்ற நான்கு பெண்கள் தடுத்து வைக்கப்பட்டனர்

காலி முகத்திடலில் சம்பவம்

0 791

கொழும்பு, காலி முகத்­தி­ட­லுக்கு நிகாப் அணிந்து சென்ற நான்கு பெண்கள் பொலி­சா­ரினால் தடுத்து வைக்­கப்­பட்டு, உடற்­ப­ரி­சோ­த­னை­களின் பின்னர் விடு­விக்­கப்­பட்ட சம்­பவம் ஒன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.
பிர­பல முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ரது குடும்­பத்­தி­ன­ரான இப் பெண்கள் காலி முகத்­தி­ட­லுக்கு நிகாப் அணிந்து சென்­றுள்­ளனர்.

இந் நிலையில் அப் பகு­தியில் பாது­காப்புக் கட­மையில் ஈடு­பட்­டி­ருந்த விமானப் படை வீரர்கள் இப் பெண்­களை அழைத்துச் சென்று பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்­துள்­ளனர். இது குறித்து சம்­பந்­தப்­பட்டோர் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலியின் கவ­னத்­திற்குக் கொண்டு சென்­ற­தை­ய­டுத்து, அவ­ரது தலை­யீட்­டினால் பெண் பொலிஸ் அதி­கா­ரி­களால் உடற் பரி­சோ­த­னைக்­குள்­ளாக்­கப்­பட்ட பின்னர் அவர்கள் எச்­ச­ரிக்கை செய்­யப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் அவர்­க­ளிடம் பொலிஸ் வாக்­கு­மூ­லமும் பெறப்­பட்­டது.

இதே­வேளை, அவ­சரகாலச் சட்டம் நீக்­கப்­பட்­டாலும் முகத்­திரை அணி­வ­தற்­கான தடை நீக்­கப்­பட்­டதா இல்­லையா என்­பது தொடர்பில் சந்­தேகம் நீடிப்­பதால் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிந்து பொது இடங்­களில் நட­மா­டு­வதைத் தவிர்த்துக் கொள்­ளு­மாறு அசாத் சாலி கோரிக்கை விடுத்­துள்ளார்.

சவூதி அரே­பி­யாவில் கூட முகத்­திரை அணி­வது கட்­டா­ய­மில்­லாத நிலையில் இலங்கை முஸ்லிம் பெண்கள் ஏன் அந்த அரே­பிய கலா­சா­ரத்தை இங்கு பின்­பற்ற வேண்டும்? சிலர் வேண்­டு­மென்றே இதனை அணிந்து கொண்டு வெ ளியில் நட­மா­டு­கி­றார்கள். அவ்­வா­றா­ன­வர்கள் தேவை­யற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­வரும். இது நிகாபை நிரந்­த­ர­மாக தடை செய்யும் நிலைக்கு இட்டுச் செல்­லலாம். என­வேதான் சட்டம் வரு­வ­தற்கு முன்­ன­ரா­கவே, முஸ்­லிம்கள் தாமா­கவே முன்­வந்து நிகாப் அணி­வதை தவிர்த்துக் கொள்­வதே சிறந்­த­தாகும். ஏறா­வூ­ரிலும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. முன்னர் நிகாப் அணிந்­தோரை பொலிசார் கைது செய்து சிறை­யி­ல­டைத்­தனர். எனினும் தற்­போது நிகாப் அணி­வோரை அவர்­க­ளது அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தி, வாக்­கு­மூலம் பெற்­று­விட்டு விடு­தலை செய்­யு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

பொலிசார், ஒருவர் மீது சந்­தே­கப்­ப­டு­வதை யாராலும் தடுக்க முடி­யாது. எனினும் அவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வது நாட்டின் தற்­போ­தைய நிலையில் தேவை­யற்ற பிரச்­சி­னை­க­ளுக்கே வழி­வ­குக்கும் என்றும் அசாத் சாலி தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, அவ­சர காலச் சட்டம் நீக்­கப்­பட்ட பின்னர் மக்கள் குழம்பிப் போயுள்­ளார்கள். சிலர் மீண்டும் நிகாப் அணிய ஆரம்­பித்­துள்­ளனர். இது தொடர்பில் நாம் பதில் பொலிஸ்மா அதி­பரைச் சந்­தித்து கலந்­து­ரை­யாட அனு­மதி கோரி­யுள்ளோம் என முஸ்லிம் கவுன்­சிலின் பிரதித் தலைவர் ஹில்மி அகமட் தெரி­வித்­துள்ளார்.

அர­சாங்கம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்கும் வரை நிகாப் அணி­வதை தவிர்த்துக் கொள்­ளு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா முஸ்­லிம்­களை வலி­யு­றுத்த வேண்டும் என முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை விடுத்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். முஸ்­லிம்கள் இதனை அணியத் தொடங்­கினால் அது சில குழுக்­க­ளுக்கு தாக்­கு­தல்­களை நடத்த வாய்ப்­பாக அமைந்­து­விடும் என்றும் இந்த விவ­கா­ரத்தில் உலமாக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாம் இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்பார்க்கிறோம். முகத்திரை அணிய முடியுமா இல்லையா என்பது குறித்து பொலிஸ் மா அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.