சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு உதவத் தயார்

இன்டர்போல் செயலாளர் நாயகம் ஜேர்ஜன் ஸ்டொக்

0 749

சர்வதேச அளவில் பொதுவான பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. எனினும் இலங்கைக்கு 4/21 தாக்குதல்களின் பின்னர் தற்போதும் அவ்வாறான அச்சுறுத்தல் உள்ளதா என்பதை இலங்கையின் விசாரணையாளர்கள் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும்.

அவ்­வாறு அச்­சு­றுத்­தல்கள் இருப்­ப­தாக அவர்கள் எமக்குத் தகவல் அளித்து உதவி கோரினால் எம்மால் முடி­யு­மான அனைத்­தையும் அவ்­வச்­சு­றுத்­தலை முறி­ய­டிக்க முன்­னெ­டுப்­போ­மென இண்­டர்போல் எனப்­படும் சர்­வ­தேச பொலிஸ் அமைப்பின் செய­லாளர் நாயகம் ஜேர்ஜன் ஸ்டொக் தெரி­வித்தார்.
4/21 தொடர் தற்­கொலை தாக்­கு­தலைத் தொடர்ந்து இண்­டர்­போலின் ‘உடன் நட­வ­டிக்கை குழு’ இலங்­கையில் தங்­கி­யி­ருந்து, குறித்த பயங்­க­ர­வாத தக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ரணை உள்­ளிட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் முன்­னெ­டுத்த நட­வ­டிக்கை குறித்து ஆராய்ந்து பார்க்க இண்­டர்போல் எனப்­படும் சர்­வ­தேச பொலிஸ் அமைப்பின் செய­லாளர் நாயகம் ஜேர்ஜன் நேற்று முன்­தினம் இலங்­கைக்­கான விஜ­யத்தை முன்­னெ­டுத்­தி­ருந்தார். இங்கு வந்த அவர் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் பாது­காப்பு உயர்­மட்டத் தலை­வர்­களை சந்­தித்த பின்னர் நேற்று மாலை கொழும்பு – ஹில்டன் ஹோட்­டலில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்தார். இதன்­போது சர்­வ­தேச பொலி­ஸாரின் கணிப்­புப்­படி இலங்­கைக்கு சர்­வ­தேச பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் உள்­ளதா என ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேட்ட கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர, குற்றப் புல­னாய்வுப் பிரிவின் இண்­டர்போல் பிரி­வுக்குப் பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரஞ்ஜித் வெத­சிங்க ஆகி­யோரும் இண்டர் போல் செய­லாளர் நாய­கத்­துடன் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்­டனர்.
இதன்­போது இண்­டர்போல் செய­லாளர் நாயகம் ஜேர்ஜன் ஸ்டொக் மேலும் தெரி­வித்­த­தா­வது,

“4/21 உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர், 4/23 முதல் இண்­டர்போல் சிறப்­புக்­குழு இலங்கை விசா­ர­ணை­யா­ளர்­க­ளுடன் இணைந்து செயற்­பட்­டது. குறித்த தாக்­குதல் நடந்த மறு­க­ணமே எம்மை அழைத்­த­மைக்­க­மைய நாம் இங்கு வந்து இலங்கை தேசிய பொலி­சா­ருடன் இணைந்து செயற்­பட்டோம்.
வெடி­பொ­ருட்கள் தொடர்­பி­லான நிபுணர் ஒருவர், அனர்த்­தங்­களின் போது கொல்­லப்­பட்­ட­வர்­களின் சடலங்­களை அடை­யாளம் காண்­பது தொடர்­பி­லான நிபுணர், பகுப்­பாய்­வாளர் மற்றும் பயங்­க­ர­வாத தடுப்பு நிபுணர் உள்­ளிட்ட நிபு­ணர்­களை உள்­ள­டக்­கி­ய­தாக அந்தக் குழு இலங்­கைக்கு வந்­தது.

இங்கு வந்த அவர்கள் இலங்கை பொலிசார் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளுக்குத் தேவை­யான பகுப்­பாய்வு, தொழி­நுட்ப ரீதி­யி­லான உத­வி­க­ளையும், சர்­வ­தேச தகவல் பரி­மாற்ற உத­வி­க­ளையும் வழங்­கினர். இதற்கு இலங்கை பொலிஸ் தரப்­பிலும், ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்தும் எமக்குப் பூரண ஒத்­து­ழைப்பு கிடைத்­தது. அதற்­காக நான் நன்றி தெரி­விக்­கின்றேன்.

நாம் இலங்­கையில் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுடன் இணைந்து பணி­யாற்­றி­யதன் விளைவே மத்­தி­ய­கி­ழக்கு நாடொன்­றி­லி­ருந்து மிக முக்­கி­ய­மான சந்­தேக நப­ரான ஹயாத்து முஹம்­மது மில்ஹான் எனும் பயங்­க­ர­வாத சந்­தேக நபரைக் கைது செய்ய முடிந்­தது.

குறிப்­பாக 4/21 தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களின் பின்­ன­ரான விசா­ர­ணை­களின் போது இணையம் மற்றும் தொலை­பேசி, கணி­னி­களில் உள்ள தக­வல்­களை மீளப்­பெறும் நட­வ­டிக்­கைகள், அவற்றை ஆய்வு செய்யும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு நாம் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு மிக நெருங்­கிய ஒத்­து­ழைப்­புக்­களை வழ்­ங­கி­யுள்ளோம். அத்­துடன் 194 நாடுகள் அங்கம் வகிக்கும் உலகின் இரண்­டா­வது பெரிய அமைப்­பான எம்­மி­ட­முள்ள அனைத்து தக­வல்­க­ளையும் ஆராய இத­னூ­டாக இலங்­கைக்கு முடிந்­தது.

எம்­மி­ட­முள்ள தர­வு­களில், உல­கி­லுள்ள 50 ஆயிரம் முக்­கிய பயங்­க­ர­வா­திகள் தொடர்­பி­லான அனைத்து தக­வல்­களும் உள்­ளன. 17 தகவல் களஞ்­சி­யங்­க­ளி­லுள்ள எமது தக­வல்­களை பயன்­ப­டுத்த முடி­யு­மா­னது என தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து, ஊட­க­வி­ய­லா­ளர்கள் இண்­டர்போல் செய­லாளர் நாய­கத்­திடம் கேள்­வி­களை முன்­வைத்தனர். இது­வரை முன்­னெ­டுத்த விசா­ர­ணைகள் பிர­காரம், 4/21 தாக்­கு­தல்­களில் வெளி­நாட்டுப் பயங்­க­ர­வாத அமைப்­புக்­களின் தொடர்­புகள் உள்­ள­னவா என ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்வி எழுப்­பினர்.
இதற்குப் பதி­ல­ளித்த அவர், நாம் விசா­ர­ணை­க­ளுக்கு உதவி ஒத்­தா­சை­க­ளையே வழங்­கினோம். விசா­ர­ணை­களின் பொறுப்பை நாம் எற்­க­மு­டி­யாது. வெளி­நாட்டுப் பயங்­க­ர­வாதத் தொடர்­புள்­ளதா இல்­லையா என்­பதை இலங்­கையின் விசா­ர­ணை­யா­ளர்­களே வெளிப்­ப­டுத்த வேண்டும் என்றார்.

இத­னை­ய­டுத்து இலங்­கைக்கு வெளி­நாட்டு பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் தற்­போதும் நில­வு­கி­றதா என மீளவும் ஊட­க­வி­யா­ளர்கள் கேள்வி எழுப்­பினர். அதற்குப் பதி­ல­ளித்த அவர், சர்­வ­தேச அளவில் பொது­வான பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் உள்­ளது. எனினும் இலங்­கைக்கு 4/21 தாக்­கு­தல்­களின் பின்னர் தற்­போதும் அவ்­வா­றான அச்­சு­றுத்தல் உள்­ளதா என்­பதை இலங்­கையின் விசா­ர­ணை­யா­ளர்கள் கண்­ட­றிந்து வெளிப்­ப­டுத்த வேண்டும்.

அவ்­வாறு அச்­சு­றுத்­தல்கள் இருப்­ப­தாக அவர்கள் எமக்குத் தகவல் அளித்து உதவி கோரினால் எம்மால் முடி­யு­மான அனைத்­தையும் அவ்­வச்­சு­றுத்­தலை முறி­ய­டிக்க முன்­னெ­டுப்போம் என்று கூறினார்.
இத­னை­ய­டுத்து, இண்­டர்போல் செய­லாளர் நாயம் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்­த­போது, பயங்­க­ர­வாத தாக்­கு­தலின் பின்னர் செயற்­பட்ட விதத்­துக்­காக அவ­ருக்கு பதக்­க­மொன்றை வழங்­கி­ய­தாக ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு வெளி­யிட்ட தகவல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த செயலாளர் நாயகம், விஷேடமான பதக்கங்கள் எதனையும் வழங்கவில்லை எனவும், இருதரப்பு சந்திப்புக்களின் போது வழங்கப்படும் வழமையான பரிசில் பரிமாற்றமே இதன்போது செய்துகொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, 4/21 தாக்குதல்களின் பின்னர் மிகக் குறுகிய காலத்தில் பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கை அதிகாரிகள் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான அனுபவத்தை இண்டர்போலின் ஏனைய உறுப்பு நாடுகளுடன் பகிரவும் அவர் இலங்கைக்கு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

எம்.எப்.எம்.பஸீர்

vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.