14127 ஏக்கர் காணி அப­க­ரிப்பு எதிர்த்து சுவ­ரொட்டி பிர­சாரம்

மீட்டுத்தரும் அரசியல்வாதிகளையே தேர்தலில் ஆதரிப்பதாகவும் தெரிவிப்பு

0 776

அம்­பாறை மாவட்­டத்தில் 4652 காணிச் சொந்­தக்­கா­ரர்­க­ளது 14127 ஏக்கர் பரப்­புள்ள காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிடும் காணி உரி­மைக்­கான அம்­பாறை மாவட்ட செய­லணி இது குறித்து அர­சி­யல்­வா­தி­களின் கவ­னத்தை ஈர்க்கும் வகையில் சுவ­ரொட்டி பிர­சாரம் ஒன்றை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் அறி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் குறித்த அமைப்பு வெ ளியிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, அம்­பாறை மாவட்­டத்தில் காணி­களை இழந்­துள்ள குறித்த குடும்­பங்­களில் உள்ள சுமார் 18608 வாக்­கா­ளர்கள் தங்­களின் காணி உரி­மை­களை மீட்­டுத்­தரக் கோரி தலை­வர்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்கும் வார­மாக 15 ஆகஸ்ட் 2019 முதல் 21 ஆகஸ்ட் 2019 வரை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளோம். இதன் ஒரு கட்­ட­மாக பாதிக்­கப்­பட்ட மக்கள் வீதிக்கு இறங்கி ‘நிலப்­ப­றிப்பு இது எமது இருப்பின் மறுப்பு’ எனும் தலைப்பில் சுவ­ரொட்­டி­களை பொது இடங்­களில் ஒட்டி பொது­மக்­க­ளுக்கும் தலை­வர்­க­ளுக்கும் விழிப்­பு­ணர்­வூட்டி அழுத்­தம்­கொ­டுக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இச் செயல்­வா­த­மா­னது பொத்­துவில் பிர­தே­சத்தில் ஆரம்­பித்து, சம்­மாந்­துறை, இறக்­காமம், நிந்­தவூர், கல்­முனை, அக்­க­ரைப்­பற்று, அட்­டா­ளைச்­சேனை, திருக்­கோவில் மற்றும் ஆலை­ய­டி­வேம்பு ஆகிய பிர­தே­சங்­களில் பாதிக்­கப்­பட்ட மக்­களால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

காணி உரித்து என்­பது ஒரு சமூக இருப்பின் அடை­யா­ள­மாகும். காணிப் பயன்­பாட்டுப் பாது­காப்பு மற்றும் நியா­ய­மான காணிப் பகிர்வின் ஊடா­கவே நாட்டில் நம்­ப­க­மான நல்­லி­ணக்­கத்­தையும், சமா­தா­னத்­தையும், தேசிய பொரு­ளா­தார வளர்ச்­சி­யையும் உறு­திப்­ப­டுத்திக் கொள்­வது சாத்­தி­ய­மாகும். அத்­துடன் எதிர்­வரும் தேர்­தல்­களின் போது இக் காணிப் பிரச்­சி­னை­களை முழு மூச்­சாக நின்று தீர்ப்­ப­தற்கு உடன்­படும் தலை­மை­களின் கரங்­க­ளையே பலப்­ப­டுத்த இம்­மக்கள் உறுதி பூண்­டுள்­ளனர்.

அம்­பாறை மாவட்­டத்­தினைக் குறி­வைத்து அபி­வி­ருத்தி எனும் பெயரில் மேற்­கொள்­ளப்­படும் திட்­டங்கள் ஊடா­கவும், தொழிற்­சா­லைகள் நிர்­மாணம், வனப் பாது­காப்பு, வன­வி­லங்குப் பாது­காப்பு, தொல்­பொருள் பிர­தே­சங்கள் மற்றும் தேசிய பாது­காப்பு எனும் போர்­வை­க­ளிலும், திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்கள் ஊடா­கவும் நலி­வுற்ற மக்­களின் விவ­சாய, மேய்ச்சல் மற்றும் குடி­யி­ருப்பு நிலங்கள் பறிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கடந்த 30 வருட தொடர் யுத்தம் கார­ண­மாக குறிப்­பாக சிறு­பான்மை விவ­சா­யிகள் அவர்­களின் காணி­களை தொடர்ச்­சி­யாக பயன்­ப­டுத்தும் சந்­தர்ப்­பத்தை தற்­கா­லி­க­மாக இழந்த நிலையை சாத­க­மாக்கிக் கொண்ட சட்­ட­வி­ரோத காணி அப­க­ரிப்­பா­ளர்கள், அந்த காணி அப­க­ரிப்­புக்கு உறு­து­ணை­யாக இருந்த அதி­கா­ரி­க­ளுடன் இணைந்து எல்லா வளங்­க­ளையும் பயன்­ப­டுத்தி நலி­வுற்ற காணிச் சொந்­தக்­கா­ரர்­களின் காணி­களைப் பறித்து வந்­துள்­ளனர்.

ஆழ்ந்து நோக்கும் போது இவ்­வா­றான காணிப் பறிப்­புக்கள் முஸ்லிம், தமிழ் சிறு­பான்­மை­யி­னரை இலக்கு வைத்­தி­ருந்த போதிலும், அதி­கா­ரமும் பலமும் உள்­ள­வர்கள் தங்­க­ளது சுய இலா­பங்­க­ளுக்­காக நலி­வுற்ற சிங்­கள மக்­க­ளு­டைய காணி உரித்­துக்­க­ளிலும் கைவைத்­தி­ருப்­பதும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.
காணி உரி­மைக்­கான அம்­பாறை மாவட்ட செய­ல­ணி­யா­னது அர­சாங்­கத்­திற்கு முன்­வைக்கும் கோரிக்கை மிகவும் எளி­மை­யா­னது. அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள காணிப் பிரச்­சி­னையின் பன்­மு­கத்தை உணர்ந்து இந்­நாட்டின் எதிர்­கால இன நல்­லி­ணக்கம், குடும்ப அலகுகளின் வாழ்வாதாரம் மற்றும் தேசிய பொருளாதார வளர்ச்சி என்பவைகளை நிச்சயப்படுத்திக் கொள்வதாயின், இக்காணிகளுடன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் தத்தமது பொறுப்பு மற்றும் பங்களிப்பை நியாயமாகவும் சட்ட பூர்வமாகவும் நிறைவேற்ற வேண்டும். அதனூடாக காணிகளை இழந்தவர்கள் தங்களுடைய காணிகளை மீண்டும் சுதந்திரமாகப் பயன்படுத்த வழிவகுக்க வேண்டும் என்பதேயாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.