சுதந்திர வர்த்தகத்தைப் பறைசாற்றும் காத்தான்குடியின் சிநேகபூர்வ சந்தை

0 1,024

பெரும்­பா­லா­னோ­ருக்கு இது ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கலாம். ஏனெனில் காத்­தான்­குடி குறித்து இன்று பல­ரதும் உள்­ளங்­களில் மாற்­றுக்­க­ருத்தே குடி­கொண்­டுள்­ளது. எந்­த­வொரு பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரா­யினும் வந்து சுதந்­தி­ர­மாக வியா­பாரம் செய்­யக்­கூ­டிய வர்த்­தகச் சந்­தை­யொன்று காத்­தான்­கு­டியில் மட்­டு­மன்றி நாட்டில் எந்த இடத்­தி­லேனும் உள்­ள­தென்றால், அபூர்வ நிகழ்­வுதான்.

“இங்­குள்­ள­வர்­க­ளிடம் நன்கு பணம் புழங்­கு­கின்­றது. அதனால் கையை விரித்து செலவு செய்­கி­றார்கள். நன்­றாக உண்டு, குடிக்­கி­றார்கள். அதனால் இங்கு எதனைக் கொண்­டு­வந்து கொட்­டி­னாலும் விற்­பனை செய்து கொள்­ளலாம்.”
இலங்­கையில் ஒரு சதுர கிலோ­மீற்றர் பரப்­பெல்­லைக்குள் அதிக சனத்­தொகைச் செறிவு கொண்ட மக்கள் வாழும் நகரம் காத்­தான்­கு­டி­யாகும். அங்கு பொலன்­ன­றுவை, வெலி­கந்­தையைச் சேர்ந்த திலிண மது­சங்க என்­ப­வரைச் சந்­திக்­கிறேன். அவரே மேற்­கண்­ட­வாறு கூறினார்.

காத்­தான்­குடி வியா­பா­ரத்­திற்குப் பிர­சித்தி பெற்ற ஒரு நக­ராகும். இலங்­கையில் புகழ்­பெற்ற வர்த்­த­கர்கள் பிறந்த பிர­தே­ச­மாகும். வியா­பாரி திலிண சுமார் 300 – 400 அன்­னா­சிப்­ப­ழங்­களை இவ்­வர்த்­தக சந்­தைக்கு எடுத்து வந்­துள்ளார். அவர் தனதூர் வெலி­கந்­தை­யி­லி­ருந்து, காத்­தான்­குடி நகர சபைத் தலை­வரின் அழைப்பின் பேரி­லேயே இங்கு வந்­துள்ளார்.

அது குறித்து திலிண விப­ரிக்­கையில்,

வெலி­கந்த நக­ரி­லி­ருந்து எனது தந்­தைக்கு துண்­டுப்­பி­ர­சு­ர­மொன்று கிடைத்­தது. தந்தை அதனை என்­னிடம் தந்தார். அதனைப் படித்தேன். நாட்­டி­லுள்ள எந்த வியா­பா­ரிக்கும் வந்து, வர்த்­த­கத்தில் ஈடு­ப­டு­வ­தற்கு காத்­தான்­குடி வர்த்­தக சந்தை கத­வுகள் திறந்­தி­ருக்கும் என்ற தக­வலே அந்தப் பிர­சு­ரத்தில் காணப்­பட்­டது. அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த தொலை­பேசி இலக்­கங்­க­ளுடன் தொடர்பு கொண்டேன். அதன் போது, கிரா­மிய மற்றும் உள்­நாட்டு உற்­பத்­தி­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் தரப்­படும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது. இவ்­வார்த்­தை­களைக் கேட்­டதும் இச்­சந்­தைக்கு வந்து பார்க்க வேண்டும் என எண்­ணினேன். அதனைத் தொடர்ந்து மூன்­றா­வது முறை­யாக இங்கு வந்­துள்ளேன். வியா­பா­ரமோ நன்கு களை கட்­டு­கி­றது என்று அவர் கூறினார்.

மாறு­பட்ட பார்வை

இது பல­ருக்கு ஆச்­ச­ரி­ய­மிக்க கதை­யாக அமை­யலாம். காத்­தான்­குடி குறித்து பெரும்­பா­லானோர் உள்­ளங்­களில் இதற்கு முற்­றிலும் மாறு­பட்­ட­தொரு சித்­தி­ரமே வரை­யப்­பட்­டுள்­ளது. எந்தப் பிர­தே­சத்­தி­லுள்­ள­வ­ரா­யினும் சுதந்­தி­ர­மாக வந்து வியா­பாரம் செய்­யக்­கூ­டிய வர்த்­தகச் சந்­தை­யொன்று காத்­தான்­கு­டியில் மட்­டு­மல்ல நாட்டில் எந்த இடத்­திலும் காண்­பது அரி­தான நிகழ்­வாகும்.
திலிண மது­சங்க அண்­மை­யில்தான் அன்­னாசி வியா­பா­ரத்தில் கால்­ப­தித்­துள்ளார். அன்­னாசி விற்­ப­னைக்­கான நிரந்­தர சந்தை வாய்ப்­பின்­மையே அவ­ருக்கு சவா­லாக இருந்­தது. வியா­பாரம் செய்ய அங்கு வரும்­படி காத்­தான்­குடி நக­ரா­தி­ப­தியால் அவ­ருக்கு விடுக்­கப்­பட்ட அழைப்பு மது­சங்­க­வுக்கு மது­ர­மாக அமைந்­தது.

திலிண அவர் கடந்து வந்த பாதையை விளக்­கு­கையில், “எனது வயது 27. நான் அன்­னாசி வியா­பா­ரத்தில் ஈடு­பட்டு இரண்டு மாதங்­க­ளுக்கும் குறை­வான கால­மே­யாகும். நான் கம்­பஹா, கிரிந்­தி­வெல பகு­தி­யி­லி­ருந்து அன்­னா­சிப்­ப­ழங்­களைக் கொண்­டு­வந்து, வெலி­கந்த, செவ­ன­பிட்­டிய போன்ற பிர­தே­சங்­களில் மொத்த விற்­ப­னை­யி­லேயே ஈடு­பட்டு வந்தேன். இதில் கூடு­த­லான வரு­வாயைப் பெற முடி­ய­வில்லை. அதனால் சில்­ல­றை­யாக விற்­பனை செய்­வ­தற்­கு­ரிய சந்­தை­யொன்றைத் தேடிக் கொண்­டி­ருந்தேன். என்­னிடம் மொத்­த­மாக கொள்­முதல் செய்­த­வர்­களே வெலி­கந்த, செவ­ன­பிட்­டிய சந்­தை­களில் அன்­னா­சிப்­பழ விற்­ப­னையில் ஈடு­பட்டு வந்­தனர்.”

அதனால் அவ்­வி­டங்­களில் என்னால் சில்­லறை வர்த்­த­கத்தில் ஈடு­பட முடி­யாது. இந்­நி­லை­யி­லேயே காத்­தான்­குடி சந்தை கைகொ­டுத்­துள்­ளது. இதனால் குறிப்­பி­டத்­தக்க பணம் இப்­போது கைக­ளிலே புழங்­கு­கி­றது. எல்லா அன்­னாசிப் பழங்­களும் விற்­ப­னை­யா­கின்­றன. இங்கு கிடைக்கும் மீன், கரு­வாடு வகை­களை எனதூர் பொலன்­ன­று­வைக்கு எடுத்துச் சென்று விற்­ப­தற்கும் இப்­போது உத்­தே­சித்­துள்ளேன். இதே போன்று அன்­னாசிக் கொள்­வ­ன­வுக்­காக கம்­பஹா செல்லும் போது, பொலன்­ன­று­வை­யி­லி­ருந்து சோளம் எடுத்துச் சென்று அங்கு விற்­கவும் எண்­ணி­யுள்ளேன்.”

சிநே­க­பூர்வ அழைப்பு

காத்­தான்­குடி நக­ர­சபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் குறிப்­பி­டு­கையில்,
“காத்­தான்­குடி என்­ற­வு­டனே நாட்டு மக்கள் மாறு­கண்­கொண்டே நோக்­கு­கின்­றனர். இதற்கு சஹ்­ரானின் பிறந்த ஊர் காத்­தான்­கு­டி­யென்­பதும் பிர­தான கார­ண­மாகும். அத்­துடன் இங்கு முஸ்லிம் சனத்­தொகை அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வதும் மற்­றொரு கார­ண­மெ­னலாம். அதே­போன்றே இங்கு வர்த்­தகப் போட்­டியும் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கி­றது. பல்­வேறு பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் இங்கு வியா­பா­ரிகள் வருகை தரு­வ­தற்கு நாம் ஊக்­க­மூட்ட வேண்டும்” என்று தெரி­வித்தார்.

காத்­தான்­குடி நான்­கரை சதுர கிலோ­மீற்றர் பரப்­ப­ளவு கொண்ட ஒரு நக­ராகும். அங்கு 18 கிராம அதி­கா­ரிகள் பிரி­வுகள் காணப்­ப­டு­கின்­றன. சுமார் 60 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வரு­கி­றார்கள்.

நக­ரா­தி­பதி அஸ்பர் மேலும் கூறு­கையில்,

“இலங்­கையில் புகழ்­பெற்ற பல வர்த்­தக நிறு­வ­னங்­களின் உரி­மை­யா­ளர்கள் பலரும் பிறந்­ததும் காத்­தான்­கு­டி­யாகும். இங்கு பிறந்து, இங்கே வாழ்ந்து வரும் சுமார் இரண்­டா­யிரம் அள­வி­லான வியா­பா­ரிகள் நாடு முழு­வ­திலும் பல்­வேறு வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். இந்த வர்த்­த­கர்­களின் நுகர்வுப் பொருட்­க­ளிலும் சேவை­க­ளிலும் மேலோங்கிக் காணப்­படும் சிறப்­புத்­தன்­மையும் விலை­கு­றை­வுமே எமது வர்த்­த­கர்­களின் முன்­னேற்­றத்­திற்கு பிர­தான கார­ண­மெ­னலாம். இந்த வர்த்­தக உயர்வை முடக்­கு­வ­தற்­காக உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் செயற்­திட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இந்த வியா­பா­ரி­க­ளுக்கு பயங்­க­ர­வாத முத்­திரை குத்­தப்­பட்­டது. காத்­தான்­கு­டியில் வேறு வியா­பா­ரி­க­ளுக்கு வர்த்­த­கத்தில் ஈடு­பட இட­ம­ளிக்­கப்­ப­டு­வ­தில்லை என்று கூறினர். இதே­போன்ற பொய்ப் பிர­சா­ரங்­களை அள்­ளிக்­கொட்­டினர். இத­னா­லேயே காத்­தான்­கு­டிக்கு வந்து பாருங்கள் என்று எல்­லோ­ருக்கும் பொது அழைப்­பொன்றை விடுக்க நான் எண்­ணினேன். அதே­போன்றே இங்கு யாரும் வந்து வியா­பாரம் செய்­யக்­கூ­டிய சூழல் ஒன்­றையும் உரு­வாக்­கவும் கங்­கணம் கட்­டினேன். அதற்­க­மை­யவே, மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர் காத்­தான்­கு­டியில் வாராந்த சந்­தை­யொன்றை ஆரம்­பித்து வைத்தேன்.

இதனை ‘நகர சந்தை’ (சிற்றி பொல) என்று அழைக்­கின்­றனர். ஆனால் இங்கு வரும் வியா­பா­ரி­களோ இதனை ‘நட்புச் சந்தை’ என்று குறிப்­பி­டு­கின்­றனர்” என்று நக­ரா­தி­பதி கூறினார்.

குறைந்த விலையில்கூடிய பயன்

காத்­தான்­குடி நட்புச் சந்­தையில் பொருட்கள் மலி­வான விலை­க­ளிலே விற்­கப்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இங்­குள்ள விற்­பனைப் பொருட்­களில் குறித்­துள்ள விலையை விடவும் குறைந்த விலைக்கு அவற்றை விற்­பனை செய்­வது இச்­சந்­தையில் ஈண்டு குறிப்­பி­டத்­தக்க அம்­ச­மாகும். அத்­துடன் வியா­பா­ரி­க­ளுக்­கி­டையே கடும் போட்­டியும் நில­வு­கி­றது. இதனால் வாடிக்­கை­யா­ளர்­களைப் போன்றே வியா­பா­ரி­களும் கூடு­த­லான பயன்­பா­டு­களைப் பெற்­றுக்­கொள்­கி­றார்கள்.

காத்­தான்­குடி வாராந்த சந்­தைக்கு வந்­துள்ள மற்­றொரு வர்த்­த­க­ரான மொஹம்மட் அன்வர் பூகொடை பிர­தே­சத்தைச் சேர்ந்­தவர். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்ட பொய்ப் பிர­சா­ரங்­களைத் தொடர்ந்து இவரின் வியா­பா­ரத்­திலும் மண் விழுந்­துள்­ளது. இவர் தனது நிலைமை குறித்துக் குறிப்­பி­டு­கையில்,

“நான், ஹேன்ட் பேக், பணப்பை போன்ற பொருட்கள் தயா­ரிப்பில் ஈடு­பட்டு வந்தேன். என்­னிடம் வேலை பார்க்கும் ஊழி­யர்­களில் பெரும்­பா­லானோர் சிங்­க­ள­வர்­கள்தான். எனது தொழில் ஸதம்­பி­த­ம­டைந்­ததால் என்னைப் போன்றே எனது ஊழி­யர்­களும் நன்கு பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இங்கு வர்த்­தகம் தடைப்­பட்­டதால் எனது தயா­ரிப்­புக்­களை விற்­பனை செய்­வ­தற்­காக பிறி­தொரு சந்தை தேவைப்­பட்­டது. இந்­நி­லை­யில்தான் இந்த சந்தை குறித்து தெரிய வந்­தது. தற்­போது போகிற போக்­கிலே இச்­சந்தை இன்னும் சில மாதங்­களில் இந்­நாட்டின் பிர­பல சந்­தை­களில் ஒன்­றாக உரு­வா­வது திண்ணம். காரணம், இப்­பி­ர­தே­சத்தில் பெரும்­பா­லான மக்கள் வாழ்­கி­றார்கள். இங்கு பொருட்கள் நியாய விலை­யிலும் மலி­வா­கவும் விற்­கப்­ப­டு­வதால் வாடிக்­கை­யா­ளர்கள் தாரா­ள­மாக வரு­கி­றார்கள். இதனால் கூடு­த­லாக விற்­ப­னையும் நடந்­தே­று­கி­றது” என்று மன ஆதங்­கத்தை வெளி­யிட்டார் அன்வர்.

இச்­சந்­தை­யி­லுள்ள மற்­றொரு வியா­பா­ரி­யான அறு­பத்­தாறு வய­து­டைய சோதி­மணி என்னும் மாதுவைச் சந்­தித்தோம். இவர் கல்­லாறு பகு­தி­யி­லி­ருந்து இங்கு வந்­துள்ளார். சிறிய மீன், சிறு கரு­வாடு போன்­ற­ன­வற்றை விற்கும் சிறு வியா­பாரி; அவர் கூறி­ய­தா­வது,

“நான் சுண்­டுவால் அளந்­துதான் சிறு மீன், சிறு கரு­வா­டு­களை விற்­பனை செய்­கிறேன். ஒரு சுண்­ட­ளவு மீன், கரு­வாடு. நூறு ரூபா, வச­தி­யுள்ள குடும்­பத்­தி­னரும் வந்து என்­னிடம் இந்த சுண்­ட­ள­வை­யி­லேயே மீன், கரு­வா­டு­களை வாங்கிச் செல்­கின்­றனர். எனக்கு ஒரு நாளைக்கு சுமார் ஐயா­யிரம் ரூபா­வுக்கு விற்­பனை நடந்­தே­று­கி­றது; எமது குடும்ப சீவ­னோ­பா­யத்­திற்கு இத்­தொகை தாரா­ள­மாகப் போது­மா­ன­தாகும். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் எமது தமிழ் மக்­களால் நிரு­வ­கிக்­கப்­படும் சந்­தை­களில் விற்­பனை செய்­வ­தற்கு முஸ்லிம் வியா­பா­ரிகள் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை. ஆனாலும் நாம் இந்த சந்­தைக்கு வந்த போது, எம்மை மிகவும் மகிழ்ச்­சி­யுடன் வர­வேற்­கி­றார்கள்” என்று அந்த தமிழ் பெண் வியா­பாரி கூறினார்.

உள்ளூர் உற்­பத்­தி­யா­ளர்கள்

மிகவும் பாரிய தொழிற்­சா­லை­களில் தயா­ரிக்­கப்­படும் பொருட்­க­ளுக்கு நிக­ரான பொருட்­களை இச்­சந்­தை­யிலும் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளன. பெரிய தொழில் நிறு­வ­னங்­களில் உற்­பத்­தி­யாகும் பொருட்­களின் தரத்­திற்கு ஈடு­ கொ­டுக்கும் வகை­யிலே இச்­சந்­தையில் விற்­ப­னைக்­குள்ள பொருட்­களும் உள்­ளமை ஈண்டு குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். தரம் ஒரு புற­மி­ருக்க குறித்த பொருட்­களின் குறிப்­பி­டத்­தக்க விலை வித்­தி­யா­சமும் மற்­றொரு சிறப்­பம்­ச­மாகும்.

ஓட்­ட­மா­வ­டியை வசிப்­பி­ட­மாகக் கொண்ட அலியார் முஹம்மட் அன்ஸார் சிறு தொழில் உற்­பத்­தி­யா­ள­ராவார். இவர் 16 சிறு தயா­ரிப்­புக்­களை உற்­பத்தி செய்து சந்­தைப்­ப­டுத்தி வரு­கிறார். அவற்றுள் சுத்­தி­க­ரிப்புத் திரவ வகை பிர­தான இடம் வகிக்­கி­றது. அவர் குறிப்­பி­டு­வ­தா­வது,

“இதோ, மல­ச­ல­கூட பாத்­தி­ரங்­களை சுத்­தப்­ப­டுத்தும் திரவ போத்தல் காணப்­ப­டு­கி­றது. இதன் சந்தை விலை 260 ரூபா. ஆனால் இதனை இச்­சந்­தையில் 100 ரூபா­வுக்கே விற்­பனை செய்­கிறேன். எனது 16 தயா­ரிப்­புக்­களும் கிட்­டத்­தட்ட பாதி விலை­க­ளி­லேயே விற்­கப்­ப­டு­கின்­றன. நாம் அநே­க­மாக வீடுகள் தோறும் சென்றே விற்­பனை செய்து வந்தோம். ஆனால் கடந்த மூன்று மாதங்­க­ளாக அவ்­வாறு சென்று விற்­ப­னையில் ஈடு­படும் அள­வுக்கு நாட்டு நிலைமை சீராக அமை­ய­வில்லை. அதனால் எமது தொழில் சீர்­கு­லைந்து போனது. தற்­போ­துதான் இச்­சந்­தையால் நாம் தலை­தூக்கிக் கொண்டு வரு­கிறோம். இங்கு நல்ல சந்­தை­வாய்ப்­புள்­ளது. இங்கு வாடிக்­கை­யா­ளர்கள் மட்­டு­மன்றி, இங்கு இதர பொருட்­களை விற்­க­வரும் வியா­பா­ரி­களும் கூட எனது தயா­ரிப்­புக்­களை வாங்கிச் செல்­கின்­றனர். பெரிய தொழில் நிறு­வ­னங்­களில் பயன்­ப­டுத்தும் இர­சா­யனக் கல­வை­களை விடவும் உயர்­த­ர­மான இர­சா­யனச் சேர்­வை­க­ளு­டனே எனது தயா­ரிப்­புகள் உள்­ள­மையே தரச் சிறப்­புக்குக் கார­ண­மாகும்” என்று அன்ஸார் கூறினார்.

வேறு வாராந்த சந்­தை­களில் காணக்­கி­டைக்­காத கிரா­மிய உற்­பத்­திகள் பலவும் இந்தச் சந்­தையில் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளன. அவற்றுள் சப்­பாத்து, செருப்பு, சவர்க்­கார வகைகள், திரவ வகைகள், கைப்­பைகள் மற்றும் தோல் பொருட்கள் பலவும் இங்கு விற்­ப­னைக்­குள்­ளமை விசே­ட­மாகும்.

வந்து பாருங்கள்

இந்த வாரச்­சந்­தையில் சந்­தித்த நுகர்­வோரில் பெரும்­பா­லானோர் காத்­தான்­குடி மக்­களே. ஆனால் வியா­பா­ரி­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் நாட்டின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளையும் சேர்ந்­த­வர்­க­ளே­யாவர். இவர்­க­ளி­டையே சிங்­களம், தமிழ், முஸ்லிம், பறங்­கியர் என்று சகல இனத்தைச் சேர்ந்த வர்த்­த­கர்­களும் அடங்­கு­கின்­றனர். இவ்­வா­றி­ருந்தும் இவர்­க­ளுக்கு மத்­தியில் எத்­த­கைய வேற்­று­மை­களோ, பாகு­பா­டு­களோ இல்­லாது உற்­சா­கத்­துடன் விற்­ப­னையில் ஈடு­பட்டுக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. இச்சந்தை இதுவரையில் மூன்று வாரங்கள் நடைபெற்றுள்ளன.

நாம் வியாபாரிகளைச் சந்தித்தது போல வாடிக்கையாளர்களில் ஒரு­வ­ரான சித்தி பாத்­திமா என்ற பெண்­ம­ணி­யொ­ரு­வ­ரையும் சந்­தித்து வின­வி­ய­போது அவர் கூறி­ய­தா­வது,

“உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் எல்லோர் கண்­களும் திறக்­கப்­பட்­டுள்­ளன. நாம் வாழ்­வது சிறி­து­காலம் தான். இக்­கு­று­கிய காலத்­திற்குள் நாம் சந்­தோ­ச­மாக வாழ வேண்டும். உண்­மை­யி­லேயே ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்குப் பிறகு எமது மக்கள் நன்கு சிந்­திக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்கள்.

எம்மால் தனித்து வாழ முடி­யாது என்­பதை இப்­போது எல்­லோரும் உணர்ந்­தி­ருக்­கி­றார்கள். இப்­ப­கு­தியில் பிறர் எவ­ருக்கும் வர்த்­தகம் செய்ய இட­ம­ளிப்­ப­தில்லை என்­றொரு போலிப் பிர­சாரம் தெற்­கிலே பரப்­பப்­பட்டு வருகிறது. அது தவறானதொரு கருத்தாகும் என்று நான் கூறுகிறேன். ஆனால் நடந்திருப்பது என்னவென்றால், இங்கு மலிவு விலைகளில் பொருட்கள் விற்கப்படுவதால் தெற்கிலிருந்து பொருட்கள் கொண்டுவந்து இங்கு போட்டி போட முடியாமையைக் குறிப்பிடலாம்.

ஆனாலும் இங்கு எங்கிருந்து எவரும் வந்து வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு எந்தத் தடையுமில்லை. இங்கு வந்து பாருங்கள் என்றே நாம் அறைகூவி அழைக்கிறோம்” பாத்திமா கூறினார். இதனையே நகராதிபதி அஸ்பரும் கூறுகிறார். மேலும் இச்சந்தையில் நாம் சந்தித்த பலரும் மேலே கண்டவாறான ஒரே கருத்தையே முன்மொழிந்தார்கள்.

சிங்­க­ளத்தில்: பிரஸாத் பூர்­ணாமல் ஜய­மான்ன
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்

நன்றி: த.கட்டுமரன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.