யூடியூப் காணொலி மூலம் 95 ஆவது வயதில் ஹஜ் வாய்ப்பைப் பெற்ற யுகி

0 733

தனது நீண்­டநாள் ஆசை­யான ஹஜ் செய்யும் கன­வினை இன்னும் ஒரு சில நாட்­களில் இந்­தோ­னே­ஷி­யாவின் மேற்கு ஜாவா மாகா­ணத்தில் உள்ள படு­லவாங் கிரா­மத்தைச் சேர்ந்த 95 வய­தான யுகி நிறை­வேற்­ற­வுள்ளார். அவ­ரு­டைய 3 மகன்­க­ளு­டனும் 2 பேரப்­பிள்­ளை­க­ளு­டனும் இவ்­வ­ருடம் அவர் ஹஜ் கட­மை­களை நிறை­வேற்­ற­வுள்ளார்.

அவர்கள் புறப்­ப­டு­வ­தற்கு முன்­னரே சுகா­தாரப் பரி­சோ­த­னை­களை சரி­யாக மேற்­கொண்­டு­விட்­டார்கள். அவர்­க­ளு­டைய புதிய கட­வுச்­சீட்­டுகள் ஜகார்­தாவில் உள்ள சவூதி தூத­ர­கத்தில் கைய­ளிக்­கப்­பட்­டது. அதே நேரம் இந்­தே­னே­ஷி­யா­வுக்­கான சவூதி தூதுவர் அஸ்ஸாம் பின் அபெத் அல் தக்­கா­பி­யையும் இதன் போது சந்­தித்­தார்கள்.

யுகி என்­பது தற்­போது பல இந்­தோ­னே­ஷி­யர்­களின் பாவ­னையில் உள்ள ஒரு பெய­ராகும். அவரும் அவ­ரு­டைய குடும்­பத்­தாரும் சவூதி மன்னர் சல்­மா­னினால் ஹஜ் விருந்­தா­ளி­க­ளாக அழைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை இன்­னமும் அவர்­களால் நம்ப முடி­ய­வில்லை.

“நான் மிகவும் மகிழ்ச்­சி­யாக உள்ளேன். இப்­ப­டி­யொரு விடயம் நடக்கும் என்று நான் கற்­பனை செய்­து­கூட பார்க்­க­வில்லை. மக்­காவில் வந்து இறங்­கி­ய­வு­டனே முதலில் தொழ வேண்டும் என்றே நினைத்தேன். என்னை ஹஜ் கட­மைக்­காக அழைத்­த­மைக்கு மிக்க நன்­றிகள்” என அரப் நியூஸ் செய்தித் தளத்­துக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார்.

யுகி தனது இரு மகள்­க­ளு­டனும் இணைந்து ஹஜ் செய்ய வேண்டும் என்ற தனது ஆசை­யையும் அதற்கு வாய்ப்­பில்­லாத தனது குடு­ம­பத்தின் வறுமை நிலை­மை­யையும் கூறி ஒரு காணொ­லியைத் தயார் செய்து இணை­யத்தில் வெளி­யிட்டார். யூடி­யூபில் இந்த காணொலி வைர­லா­னது மாத்­தி­ர­மின்றி பட்­டத்­துக்­குக்­கு­ரிய இள­வ­ரசர் பின் சல்­மானின் பார்­வை­யையும் சென்­ற­டைந்­தது. அதன் பின்­னரே இவர்­க­ளுக்­கான ஹஜ் அழைப்­பிதழ் கிடைத்­தது.

யுகி­யு­டைய மகள் நனா ரொஹானா தெரி­வித்­த­தன்­படி குறித்த காணொலி ரம­ழா­னுக்கு முன்னர் தனது வீட்டில் வைத்து பதிவு செய்­யப்­பட்ட ஒன்­றாகும். அந்த வீடு தலை­ந­கரில் இருந்து 95 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மிகவும் பிர­சித்­தி­பெற்ற சுற்­று­லாத்­த­ள­மான சிபனஸ் என அழைக்­கப்­படும் மலைப்­பாங்­கான பிர­தே­சத்தில் அமைந்­துள்­ளது.

யுகிக்கும் அவ­ரது குடும்­பத்­தா­ருக்கும் ஒரு வழ­மை­யான அரே­பிய நண்பர் இருந்தார். அவ­ரு­டைய பெயர் அலி. அவர்தான் இந்த காணொ­லியை தயா­ரிக்­கு­மாறு ஒரு யோச­னையை வழங்­கினார். அவர்தான் அந்த காணொ­லியில் இருந்த பட்­டத்து இள­வ­ரசர் சல்­மானின் புகைப்­ப­டத்­தையும் அவர்­க­ளுக்கு வழங்­கினார்.

“நான் எனது வீட்டில் அலி­யுடன் சாதா­ர­ண­மாக பேசிக்­கொண்­டி­ருந்தேன். ‘உங்­க­ளுக்கு ஹஜ்­ஜுக்கு போக வேண்­டுமா’ என்று அவர் கேட்டார். எனக்கு போக வேண்­டும்தான், ஆனால் அதற்­கான பணம் என்­னிடம் இல்லை என்று நான் கூறினேன். அதைக் கேட்ட அவர் ‘அப்­ப­டி­யென்றால் மன்­ன­ரிடம் கூறுவோம்’ என்று விளை­யாட்­டாக கூறினார். (விளை­யாட்­டாக கூறு­கிறார் என்­றுதான் நினைத்தேன்)” என யுகி தெரி­வித்தார்.

நோன்புப் பெரு­நா­ளுக்குப் பிறகு அந்த காணொ­லியை இணை­யத்தில் தான் பதி­வி­டு­வ­தாக அலி கூறி­ய­தாக நனா தெரி­வித்தார். இனந்­தெ­ரி­யாத ஒரு­வ­ரிடம் இருந்து வந்த தொலை­பேசி அழைப்பில் யுகி ஹஜ் செய்­வ­தற்­காக அழைக்­கப்­பட்­டி­ருக்­கிறார் என்று கூறும் வரை அந்த காணொ­லிக்கு என்ன நடந்­தது என்று யுகிக்கும் அவ­ரது குடும்­பத்­தா­ருக்கும் தெரி­யவே தெரி­யாது.

முதலில் அவர்கள் யாரும் அதை நம்­ப­வில்லை. அத்­துடன் அது உண்­மை­யாக இருந்­தாலும் யுகியை அவ­ரது வயோ­திபம் கருதி தனி­யாக தாம் அனுப்­பு­வ­தில்லை என்ற முடி­வோ­டுதான் இருந்­தார்கள். ஆனால் அடுத்­தநாள் தூத­ர­கத்தில் இருந்து வந்த தொலை­பேசி அழைப்­பையும் தூது­வ­ரு­ட­னான சந்­திப்­பையும் தொடர்ந்து அந்த அழைப்பு உண்மை என நிரூ­ப­ண­மா­னது.

“எனக்கு உண்­மை­யி­லேயே மகிழ்ச்சி. இது உண்­மை­யா­கவே இருந்து விட்டால் நான் இன்னும் சந்­தோ­ஷ­ம­டைவேன். எனக்கு மெய்­சி­லிர்க்­கின்­றது. கைகள் குளி­ர­டை­கின்­றன. நான் அல்­லாஹ்­வுக்கு மிக்க நன்­றி­யு­டை­ய­வ­னாக இருக்­கின்றேன். எனது வாழ்­நாளில் ஒரு தூத­ர­கத்­திற்கு கால் வைத்­தது இதுவே முதல் தடவை. நான் தூத­வ­ருக்கு நன்றி செலுத்­து­கிறேன். அல்­ஹம்­து­லில்லாஹ். ஒரு காணொலி வைர­லா­னதால் கிடைத்த இந்த வாய்ப்பு அல்லாஹ் தந்த பரிசு” என யுகி தெரி­விக்­கிறார்.

இந்த அழைப்பை அல்­லாஹ்­விடம் இருந்து கிடைத்த ஒரு பெரிய பரி­சாக நனா நோக்­கு­கிறார். எவ்­வ­ளவு பெரி­ய­தொரு பணத்­தொ­கை­யையும் இந்த சந்­தே­ஷத்­துடன் ஒப்­பிட முடி­யாது என நனா தனது மகிழ்ச்­சியை வர்­ணிக்­கிறார்.
“ஹஜ்­ஜுக்கு செல்ல வேண்டும் என்­பது எனது தந்­தையின் நீண்ட நாள் கன­வாகும். அது இப்­போது நன­வா­கி­றது. அல்­ஹம்­து­லில்லாஹ். இந்த கனவை நன­வாக்­கிய மன்னர் சல்­மா­னுக்கு நன்­றி­களை தெரி­வித்துக் கொள்­கிறேன்” என நனா தெரி­வித்தார்.

தற்­போது யுகியும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் புனித மக்கா நகரை வந்­த­டைந்­துள்­ளனர். அவர்­க­ளுக்கு விமான நிலை­யத்தில் விசேட வர­வேற்­ப­ளிக்­கப்­பட்­டது. யுகி தனது 95 ஆவது வயதில் தற்­போது புனித யாத்­தி­ரையில் பங்­கெ­டுத்­துள்ளார். இறைவன் நாடினால், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்­தாலும் சரி தனது இல்­லத்­துக்கு அழைப்பான் என்­ப­தற்கு யுகியின் கதை நல்­ல­தொரு உதா­ரணம்.

எம்.ஏ.எம். அஹ்ஸன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.