பள்­ளி­வாசல் ஜமாஅத் அங்­கத்­து­வத்­தி­லி­ருந்து இப்­ராஹீம் மௌல­வியும் புதல்­வர்­களும் நீக்கம்

0 686

மாவ­னல்லை சிலை உடைப்பு விவ­காரம் மற்றும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் எனும் சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மௌலவி இப்­ராஹீம் மற்றும் அவ­ரது இரு புதல்­வர்­களை தமது ஜமாஅத் அங்­கத்­து­வத்­தி­லி­ருந்து நீக்­கி­யுள்­ள­தாக மாவ­னெல்லை, ஹிங்­குல, தெஹல்­கொட மஸ்­ஜிதுல் அப்ரார் நிர்­வாகம் அறி­வித்­துள்­ளது. 

இது தொடர்பில் அப்ரார் பள்­ளி­வா­சலில் அறி­வித்தல் பல­கையில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அறி­வித்­தலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

கடந்த காலத்தில் இடம்­பெற்ற பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் பிர­தா­ன­மாக தொடர்­பு­பட்டோர் என சந்­தே­கத்தின் பெயரில் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைத்து காவல் துறை­யி­னரால் விசா­ரணை செய்­யப்­பட்­டு­வரும் பின்­வரும் ஜமாத் உறுப்­பி­னர்கள் அவர்­க­ளது ஜமாத் அங்­கத்­து­வத்­தி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளனர். 1.எம்.ஐ. சாதிக் அப்துல்லாஹ், 2.எம்.ஐ. சாஹித் அப்துல் ஹக், 3.மௌலவி ஆர்.எம். இப்ராஹிம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.