குப்பை சேக­ரிக்கும் தொழில் மூலம் 26 ஆண்­டு­க­ளாக பணம் சேமித்து ஹஜ்ஜை நிறை­வேற்றும் இந்­தோ­னே­சியப் பெண்

0 923

இஸ்­லாத்தின் புனிதத் தலங்­களை தரி­சித்து ஹஜ்ஜை நிறை­வேற்ற வேண்டும் என்று எண்­ணி­யி­ருந்த குப்பை சேக­ரிப்­பதை தொழி­லாகச் செய்து கடந்த 26 வரு­டங்­க­ளாக பணம் சேமித்த 64 வய­தான இந்­தோ­னி­சியப் பெண்ணின் கனவு இவ்­வ­ருடம் நன­வா­கின்­றது. 

ஹஜ்­ஜினை நிறை­வேற்ற வேண்டும் என்ற எண்­ணமே எனக்கு எப்­போதும் இருந்­தது என மர்­யானி என்ற பெண்­மணி கடந்த வெள்­ளிக்­கி­ழமை சவூதி அரே­பி­யாவை நோக்கி புறப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாகத் தெரி­வித்தார்.

1980 ஆம் ஆண்டு தனது கணவர் மர­ண­ம­டைந்­ததன் பின்னர் ஹஜ் யாத்­தி­ரை­யினை மேற்­கொள்ள வேண்டும் என்ற அவா மேலும் உறு­தி­ய­டைந்­த­தாக தெரி­விக்கும் மர்­யானி 1993 ஆம் ஆண்டு தொடக்கம் பணம் சேமிக்கத் தொடங்­கி­ய­தா­கவும் குறிப்­பி­டு­கின்றார்.

நான்கு பிள்­ளை­களை வளர்க்க வேண்­டிய விதவைத் தாயான தனக்கு அந்த நேரத்தில் எப்­படி பணத்தைச் சேக­ரிப்­ப­தென தெரி­ய­வில்லை. எனவே குப்­பை­களைச் சேக­ரிக்க ஆரம்­பித்தேன் என மர்­யானி தெரி­வித்தார்.

தினமும் அதி­கா­லையில் தனது குப்பை சேக­ரிக்கும் பணியை ஆரம்­பிக்கும் மர்­யானி லுஹர் தொழு­கைக்­கான அதான் ஒலிக்கும் வரை அப்­ப­ணியில் ஈடு­ப­டுவார்.

பயன்­ப­டுத்­திய பிளாஸ்ரிக் கோப்­பைகள், போத்­தல்கள் மற்றும் கட­தாசி அட்­டை­க­ளையும் சேக­ரித்து இப் பெண்­மணி விற்பனை செய்வார். பெரும் மழை பெய்­யும்­போது மணலை சேக­ரித்து விற்­பனை செய்வேன் எனவும் அவர் தெரி­வித்தார்.

ஜகார்த்­தாவை ஊட­றுத்துச் செல்லும் பிர­தான நதி­யான சிலி­வுங்­கிற்கு அருகே இவர் வசித்து வரு­வதால் ஆற்றில் குவியும் மண்ணை எடுத்து கட்­டட மூலப் பொரு­ளாக விற்­பனை செய்வார். இவரால் ஒரு நாளைக்கு குறைந்­தது ஐந்து மண் மூடை­களைச் சேக­ரிக்க முடி­யு­மாக இருந்­தது. ஒரு மண் மூடை­யினை 8,000 இந்­தோ­னே­சிய ரூபி­யா­வுக்கு (0.56 அமெ­ரிக்க டொலர்) விற்­பனை செய்வார்.

கிட்­டத்­தட்ட இரண்டு தசாப்த கடின உழைப்­புக்குப் பின்னர் 2012 ஆம் ஆண்டு அந்தக் காலத்­தின்­போது இந்­தோ­னே­சி­யாவில் ஹஜ் யாத்­தி­ரைக்குச் செல்­வ­தற்­காக பதிவு செய்­து­கொள்­வ­தற்­கு­ரிய ஆகக் குறைந்த முதற்­கட்டக் கொடுப்­ப­னவுத் தொகை­யான 25 மில்­லியன் ரூபி­யா­வினை (1,750 அமெ­ரிக்க டொலர்)  சேமித்­தி­ருந்தார்.

அதனைத் தொடர்ந்து மீதித் தொகை­யான 10 மில்­லியன் ரூபி­யா­வினை (699.82 அமெ­ரிக்க டொலர்)  செலுத்­து­வ­தற்­காக குப்பை சேக­ரிப்­பிலும் மண் சேக­ரிப்­பிலும் கடு­மை­யாக உழைத்தார்.

அவர் தான் பணம் சேமிக்கும் இர­க­சி­யத்தை தனது குடும்­பத்­தி­ன­ருக்கும் உற­வி­னர்­க­ளுக்கும் நீண்ட கால­மாக மறைத்தே வந்­துள்ளார்.

ஹஜ் யாத்­தி­ரை­யினை மேற்­கொள்­வ­தற்­கான பணத்தை சேர்ப்­ப­தற்கு  குப்பை சேக­ரிப்­பிலும் மண் சேக­ரிப்­பிலும் ஈடு­பட்டு வந்­ததை அவ­ரது பிள்­ளை­கள்­கூட அறி­ருந்­தி­ருக்­க­வில்லை.

சமய விவ­கார அமைச்­சி­லி­ருந்து பய­ணிக்கும் பட்­டி­யலில் தனது பெயரும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது என்ற செய்தி கிடைத்­ததன் பின்னர் இந்த வருடம் ஏப்ரல் மாதத்­தில்தான் இந்த விட­யத்தை தனது பிள்­ளை­க­ளிடம் மர்­யானி தெரி­வித்­தி­ருக்­கிறார்.

மர்யானியின் திட்டம் தொடர்பில் கேள்வியுற்ற அயலவர்கள் ஏன் அவரது பிள்ளைகள் மர்யானி ஹஜ் செய்வதற்காக குப்பை சேகரித்து பணம் சேர்க்க அனுமதித்தார்கள் என கவலையுடன் வினவினார்கள்.

யாத்திரை மேற்கொள்வதற்கு தாயார் பணம் சேமிக்கிறார் என்பது எனக்கே தெரியாது, அப்படியிருக்க நான் எப்படி உதவுவது என கேட்கிறார் வாகனத் தரிப்பிட உதவியாளராகக் கடமையாற்றும் அவரது பிள்ளைகளுள் ஒருவரான தானி முல்யானா.

26 வருடங்கள் என்பது மிக நீண்ட காலந்தான் என ஏற்றுக்கொண்ட மர்யானி புனித தலத்திற்கு எப்போது போக முடியும் என்பது தொடர்பில் கவலைப்பட்டதில்லை. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் நான் பணம் சேமித்தேன், நான் முழு உற்சாகத்துடன் இருந்தேன் அதனால் முயற்சியைக் கைவிடவுமில்லை சோர்வடையவுமில்லை எனவும் தெரிவித்தார்.

மர்யானி தான் சேகரிக்கும் பொருட்களை உடனடியாக விற்பனை செய்வதில்லை, சுமார் ஒரு வருடம் குவித்து வைத்திருந்து அதன் பின்னரே விற்பனை செய்வார்.

அவற்றை விற்பனை செய்தால் எனக்கு வருடாந்தம் 1.2 மில்லியன் ரூபியா (84 அமெரிக்க டொலர்) கிடைக்கும் அதில் 1 மில்லியன் ரூபியாவினை (70 அமெரிக்க டொலர்) சேமிப்பேன், மீதியைச் செலவு செய்வேன் என அவர் தெரிவித்தார்.

மர்யானியின் நாளாந்த செலவுக்கு அவரது பிள்ளைகள் உதவி வருகின்றனர், அவரது பிள்ளைகளுள் அதிகமானோர் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகின்றனர்.

எம்.ஐ.அப்துல் நஸார்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.